Advertisment

விவசாயிகளின் உண்மையான பிரச்னை சந்தைகளில் தான் இருக்கிறது!

விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து முறையாக பெற்று மக்களிடம் சேர்ப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
farmer

Pradhan Mantri Fasal Bima Yojana, Kharif crops, farmers, insurance, Government Scheme, crop protection, Pradhan Mantri Fasal Bima Yojana news, Pradhan Mantri Fasal Bima Yojana news in tamil, Pradhan Mantri Fasal Bima Yojana latest news, Pradhan Mantri Fasal Bima Yojana latest news in tamil, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகள், பயிர் பாதுகாப்பு, காப்பீடு, அரசு திட்டம், காலக்கெடு

யோகிந்தர் கே. அலாக் 

Advertisment

ஜூன் 27ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை சுமார் 10% இருந்தது மற்றும் மத்திய இந்தியாவில் பருவமழைப் பொழிவு மிகவும் குறைவாக  இருந்தது. ஆனால், ஜூலை 3 அன்று, நிதிப்பற்றாக்குறை மதிப்பு 7%மாக குறைந்திருக்கிறது மற்றும் மத்திய இந்தியாவில் இவ்வருடம் பருவ மழை மிதமானதாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அப்போது தகவல் தந்தது. நாட்டின் வளர்ச்சி மழையோடோ அல்லது விவசாயத்தோடு தொடர்புடையதாகவே தான் இருக்கிறது.  மிதமான மழை என்பது, மிதமான விவசாயத்திற்கு வழி வகுக்கும் அதனால் விவசாயிகள் ஓரளவிற்கு நல்ல வருவாய் ஈட்டுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தாமதமாக மழைப் பொழிந்தால், விவசாயிகளும் தாமதமாக விதை விதைப்பார்கள். சில நேரங்களில் விரைவில் அறுவடைக்கு வரும் மாதிரியான பயிர்களை விதைப்பார்கள். ஒரு சிலர் எண்ணெய் வித்துக்களை விதைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நெல்லை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். குஜராத், சௌராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், மத்திய பிகார், மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளின் நிலை இது தான்.

மிக சமீபத்தில் மோடி அரசு  பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தது.  அதைப்பற்றி ராஜீவ் குமார் மற்றும் ரமேஷ் சந்த் போன்ற பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற மிக குறுகிய காலத்திற்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களால் விவசாயிகளின் ஒட்டு மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாது. நிலங்கள் மீதான வாடகை, முதலீடு ஆகியவற்றை கூட இந்த திட்டங்களால் ஈடு செய்ய இயலாது. நிதி ஆயோக் அமைப்பில் இருப்பவர்கள், குறைந்தபட்ச ஆதரவு விலையை 50% மேலாக நிறைய பயிர்களுக்கு கொடுத்துள்ளது மத்திய அரசு என்று கூறுகிறார்கள். ஆனால் சிலர், இது போன்ற விலை தேவையில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

என்னுடைய புத்தகம் ஒன்றில், நீண்ட நாட்களுக்கு பயன்படும் வகையிலான டாரிஃப் மாதிரிகளை எழுதியிருந்தேன். ஆனால் அவை வெறும் வகுப்புகள் எடுக்க மட்டுமே உபயோகம் ஆனது. எம்.எஸ். சுவாமிநாதன் சில வருடங்களுக்கு முன்பாக 50% ஆதரவு விலை என்பதை இந்தியாவின் மொத்த உற்பத்தியின் சராசரி கொண்டு (C2) தான் கணக்கிட வேண்டும் என்றும், நிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் வேலைக்கான கூலி (FL) மற்றும் விதை, உரம், நீர்பாசனம், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் இதர செலவுகளை (A2) கணக்கில் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

விவசாயப் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பவதற்கான செலவு மற்றும் விற்பதற்கு ஆகும் செலவு என இரண்டையும் C2வில் சேர்க்க வேண்டாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விளைப் பொருட்களை மண்டியில் சேர்த்து, அதை சந்தைகளில் விற்பதற்கு ஆகும் செலவுகள் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் தரவில்லை. எவ்வளவு தான் முயன்றாலும் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 200 மட்டும் தான் லாபம் விதை விதைக்கும் விவசாயி அறிவான். அதனால் அவனுக்கு 150 ரூபாய் கிடைத்தாலும் அதற்காக பொருட்களை விற்றுவிடுவான். ஆனால் அவனுடைய பிரச்சனை அது அன்று. மாறாக அமெரிக்கா, கனடா, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், இதர பொருட்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை தான் பிரச்சனை. அதிக அளவு வாடிக்கையாளர்கள் இருப்பதை உணர்ந்த அரசு அதனை அதிக விலைக்கு விற்பனை செய்கிறது.

NAFED அமைப்பு சில முடிவுகள் எடுத்தது ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த காலத்திற்கு பயனளிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது. ஆனால் உண்மையான பிரச்சனைகள் சந்தைகளில் தான் இருக்கிறது. விளைப் பொருட்களை பெறுவதில் தொடங்கி, அதனை முறையாக விற்பது வரை பிரச்சனைகள் இருக்கிறது. காய்கறிகள், பருப்புகள், பழங்கள், பால் பொருட்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து தேவைகள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கான உள்கட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட வேண்டும்.

பொருளாதார நிபுணர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் யோகிந்தர் கே. அலாக் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் நித்யா பாண்டியன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment