Advertisment

Harsh Mander Writes: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இஸ்லாம் மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும்

வங்காளம், பீகார், உ.பி. மற்றும் பெருநகரங்களில் இருக்கும்  முஸ்லீம் குடியேற்றங்களில் சொல்லமுடியாத அச்சமும், நகரமுடியாத மௌனமும் சூழ்ந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship Amendment Bill (CAB) and national NRC BJP political agenda

Citizenship Amendment Bill (CAB) and national NRC BJP political agenda

ஹர்ஷ் மந்தர் : 

Advertisment

கட்டுரை ஆசிரியர் மனித உரிமை ஆர்வலர்  மற்றும் எழுத்தாளர்

 

நம்மைக் கவலைப்படுத்தி, வேதனைக்கு உட்படுத்தும் அந்த இடியின் சத்தம் சில நாட்களுக்கு முன்பு வரை வெகுதூரத்தில் தான் நின்றன, ஆனால் இன்று அந்த சத்தம் அச்சுருத்தும் புயலாக உருமாறி, நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் இந்தியா என்ற கட்டமைப்பேயே சூரையாடப் போகின்றது. நம்மில் பெரும்பாலானோர் நினைத்தோம், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்தொடரும் மக்களை மட்டும் குறிவைத்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பாஜக கட்சி  தேர்தலுக்காக மட்டும் பேசிவருகின்றனது,தேசிய குடிமக்கள் பதிவேட்டை தேசம் முழுவதும் புதிப்பிக்கப்படும் என்ற அமித் ஷாவின் வெறும் தேர்தல் யுக்தியே என்று.

தனது அரசியல் சித்தாந்தங்களை அஸ்தமனம் செய்வதற்காக  ஆளும் கட்சியும், அதன் வழிக்காட்டி விண்மீனான ஆர்ஆர்எஸ் அமைப்பும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதிப்பித்தலிலும்  திடமாய் உள்ளனர் என்று செய்தியால் நமது நம்பிக்கை பொய்யாய் போனது. 'இந்திய மண்ணில் வேரூண்டியிருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு கரையான்ங்களையும் அப்புறப்படுத்துவதில் தான் உறுதியாக உள்ளதாக '  அமித் ஷா நமது பாராளுமன்றத்தில் தெரிவிக்கின்றார். பாஜக ஆளும் ஒவ்வொரு மாநில முதல்வர்களும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கப் படவேண்டிய அவசியத்தை பேசி வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்,  'தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையால் எந்த ஹிந்துவும் பாதிக்கப்படமாட்டார்கள்' என்கிறார்.

இந்த பேச்சுகளின் விளைவாக - இந்தியா முழுவதும் குறிப்பாக  வங்காளம், பீகார், உ.பி. மற்றும் பெருநகரங்களில் இருக்கும்  முஸ்லீம் குடியேற்றங்களில் சொல்லமுடியாத அச்சமும், நகரமுடியாத மௌனமும் சூழ்ந்துள்ளது . இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க என்ன ஆவணங்கள் வேண்டும்?  1971, 1947, 1951, 1987 போன்றவைகளில் எதை வரம்பாக இந்த அரசாங்கம் நிர்ணயிக்கும், ஆவணங்களை சேகரிக்க முடியாதவர்களின் கதி என்ன? என்ற கேள்வி இப்போதே அவர்களுக்குள் தீவிரமாக ஒழிக்க ஆரம்பித்துவிட்டது. ஆளுபவர்களிடம் இருந்து  வெறும் மௌனமே பதிலாய் வருவதால், ஒவ்வொரு நாளும் நடுக்கமும், குழப்பமும் தான் இவர்களுக்கு மிச்சம் .

டெல்லியில் உள்ள வீடற்றுக் கிடக்கும் இஸ்லாம் மக்களின்  ஒரே கேள்வி - “ எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. எங்களுக்கு என்ன ஆகும் ? என்பதே. இதற்கிடையில், மற்ற மததத்தை தழுவும் மக்களுக்கு இது போன்ற குழப்பங்களும், நடுக்கங்களும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஏன்... தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பற்றிய பொதுவான விழிப்புணர்வும், அக்கறையும் அவர்களிடம் இல்லை.

சுதந்திரத்திற்கு பிந்தைய முதல் 40 ஆண்டுகளில் (1987 வரை)  இந்தியாவில் பிறந்த எவரும் இந்திய குடிமகனாக கருத வேண்டும் என்று சட்டம் சொல்லியது . 1987 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது இந்தியராக இருக்க வேண்டும் என்று அச்சட்டம் திருத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், ஒரு பெற்றோர் இந்தியராகவும், மற்றவர் சட்டவிரோதமாக குடியேறியவராகவும் இல்லாவிட்டால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியும் என்று இந்தியா குடிமகன் சட்டம் விரிவாக்கமானது.

இந்த 2003 சட்டத் திருத்தம்  தான் இன்று நாம் சந்திக்கவிருக்கும் குடிமக்கள் பற்றிய கேள்வியின் விதைகளைத் தூண்டின என்றே சொல்லலாம்.  உதாரணமாக, இன்றைய ஆளும் கட்சி முன்னெடுக்கும் குடிமக்கள் சட்டம் 2019 திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இஸ்லாம் அல்லாத மக்கள் இந்தியாவின் குடிமகனாக மாறமுடியும். இந்த சட்டத் திருத்தத்தோடு, 2003 குடிமக்கள் சட்டத்தை சேர்த்துக் கவனித்தோமானால், இந்தியாவிற்குள் சட்ட விரோதமாய் வந்து தங்கவில்லை என்று நிருபிக்க முடியாத இஸ்லாம் மக்கள் மட்டுமே சட்டவிரோத குடியேற்றம் அடைந்தவர்கள் என்று சுட்டிக் காட்டப்படுவார்கள். அவர்களை மட்டுமல்லாமல், அடுத்த சந்ததிகள், அதற்கடுத்து வரும் சந்ததிகளுக்கும் இந்தியக் குடியுருமை மறுக்கப்படும். ஏனெனில், இந்த சந்ததிகள் போராடி இந்தியக் குடியுரிமைப் பெற சட்டத்தில் எந்த இடமும் இல்லை. இங்கே பிறந்து, இங்கே வளர்ந்து இந்தியாவைத் தவிர பிற நாடுகளின் பெயர்களைக் கூடத் தெரியாத மக்களுக்கு இந்தியக் குடியுரிமை மறுக்கும் அவலமும் இதனால் நடந்தேறும்.

இந்தத் சட்டத் திருத்தமாக இருக்கட்டும் , என்.ஆர்.சி லிஸ்ட் புதிப்பித்தல் செயல்பாடாக இருக்கட்டும் முஸ்லிம்களைத் தவிர மற்ற மக்கள் மீது  எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு பிறகு , தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டில், முஸ்லீம் இந்தியர்கள் தாங்கள் அல்லது அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக நுழையவில்லை என்பதை நிரூபிக்க  வேண்டும். மற்ற மதத்தை தழுவும் இந்தியர்கள் ஆவணங்களைத் தயாரிக்க கட்டாயப்படுத்தப்படலாம், ஆவணங்களின் மூலம் நிரூபிக்க முடியவில்லை என்றாலும்  குடியுரிமைக்கு தகுதி பெறமுடியும். பிறப்பு, நில உடைமை அல்லது வாக்காளர் உரிமை அட்டை மூலம் குடியுரிமையை நிரூபிக்கும் கடமையும்/சுமையும்  தனிநபர்களிடமே உள்ளது என்று  உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது கையை விரித்து விட்டது. ஆனால், வறிய மற்றும்  எழுத்தறிவில்லாத மக்களுக்கு எந்த உரிமை அட்டையும் அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான  உண்மை. ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும், ஏன்....மாவட்ட நீதவான்களுக்கும் கூட வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை அமைக்கவும், அந்த தீர்பாயங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அந்தந்த மாநில அரசாங்மே  நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என்ற அமித்ஷா தலைமயிலான உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் வறிய மக்களின் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றது என்றே சொல்லலாம்.

கருத்தியல் ரீதியாக பிளவுபட்டிருக்கும் எதிர்க்கட்சியின் குழப்பாமான சூழ்நிலையை  பயன்படுத்தி, மாநிலங்களவையில் இந்தியக் குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவவை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கை மத்திய அரசிடம்  வந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏன்...  இந்த சட்டத் திருத்த  மசோதாவிற்கு முன்பே, மூன்று அண்டை நாடுகளிலிருந்து முஸ்லிம் அல்லாத “சட்டவிரோத குடியேறியவர்களுக்கு” பாதகமான சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளித்து 2015 ல் ஒரு அரசாணை வெளியிட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டில், முஸ்லிம் அல்லாத  சட்டவிரோத குடியேறியவர்களின்  குடியுரிமைக்கான செயல்முறையையும் நன்குத் துரிதப்படுத்தியுள்ளது .

வரவிருக்கும் குடியரிமைச் சட்டத் திருத்த மசோதா, 2015- ல் வெளியிடப்பட்ட அரசாணை, இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள பல அடிப்படை உரிமைகளை மீறுகின்றன . உதரணாமாக சரத்து 14- ல்  சொல்லப் பட்டிருக்கும் சமத்துவத்திற்கான உரிமை. இந்தியாவின் அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும்  மத ரீதியாக துன்புற்றவர்களாய் இருப்பதால் இந்தியக் குரியுரிமைக்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதும்  இந்த அரசு , ஏன்....  மியான்மர் ரோஹிங்கியாக்களுக்கும், சீனாவின் உய்குர்களுக்கும் , பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அஹ்மதியாஸ் மற்றும் ஷியாக்களுக்கும்  மற்றும் இஸ்லாம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இந்த தகுதியை ஏன் நீட்டிக்கக்கூடாது?

இந்த சட்டத் திருத்தங்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பின் ஆன்மாவை தாக்குகின்றன. மகாத்மா காந்தி, பி ஆர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு மற்றும் மௌலான ஆசாத் ஆகியோரிடமிருந்து நாம் பெற்ற இந்தியாவில், எந்த கடவுளை வணங்கினாலும் அல்லது எந்த கடவுளையும் வணங்கத் தேர்வு செய்தாலும் எல்லா மக்களுக்கும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடே முன்னிலைப்படுத்தப்பட்டது. மத அடையாளத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் அல்லது சேர்க்கும் ஒரு நாடாக இந்தியாவை இந்த தலைவர்கள் கற்பனை செய்யவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும் .

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக 1925 ஆம் ஆண்டில் இந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ், இந்துக்கள் மட்டும்  ஆட்சியமைக்க வேண்டும்,முஸ்லிம்கள் வெளியேற்றப்படவேண்டும் அல்லது இரண்டாம் தர குடிமக்களாக வாழ நிர்பந்திக்கப் படவேண்டும் என்ற இந்தியாவைப் பற்றிய தங்களது கற்பனையை எடுத்துரைத்தனர். தற்போதைய ஆளும் அரசாங்கம்  100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கற்பனைக்கு செயல் திட்டம் கொடுக்க முடியும் என்று நம்புகிறது. கோடிக்கணக்கான முஸ்லீம் குடிமக்களின் வாழ்வில் சொல்லப்படாத பயத்தையும் , துன்பத்தையும்  ஏற்படுத்தவதை தீவிரமாக்கியுள்ளது.

வரவிருக்கும் இந்த பேரழிவின் அச்சுறுத்தலை இஸ்லாம் சகோதரிகளும், சகோதரர்களும் இன்று தெளிவாகக் காண்கின்றனர். மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையோடு நகர்கின்றார்கள், அக்ரையற்றவர்களாய் .

இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பின் மரணத்தை நோக்கி நகர்கின்றது என்பதை நாம் இன்னும் உணரவில்லையா?

Muslim Rohingya Muslims
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment