Kunal Ambasta
தேசிய புலனாய்வு முகமை சட்டம் ,2008 திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தாக்கல்செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகவும் , நடைமுறை சட்டமாக்கும் அறிவிப்புகளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றன . குற்றங்களின் அடிப்படியில் பார்த்தால் இந்த சட்டத் திருத்தும் என்.ஐ .ஏவின் அதிகாரத்தை அதிகரிக்க முயல்கிறது . என்.ஐ .ஏ என்பது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தை இயங்கும் மற்ற நிறுவனங்களின் (உதாரணமாக பாராளுமன்றம் ,உச்ச நீதிமன்றம் ,ரிசர்வ் வங்கி ) பாதுகாப்பை அச்சுறுத்தும் குற்றங்களைத் தடுப்பதற்காக மத்திய அரசின்கீழ் செயல்படும் சிறப்பு விசாரணை பிரிவு.
இந்த விசாரணை பிரிவு : பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் , அணு மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான குற்றங்கள், தேசத்தின் மீது போர்தொடுக்கும் குற்றங்களை விசாரிக்கும் தன்மை கொண்டது . இதன் தன்மையைப் பார்க்கும்பொழுது இது நாட்டிற்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிப்பதிற்க்கேத் தவிர நாட்டிற்குள் நடக்கும் அன்றாட குற்றங்களை விசாரிக்கும் அமைப்பாக உருவாக்கப்படவில்லை என்பது புரிகிறது .
ஏன் அன்றாட குற்றங்களை விசாரிக்கும் அமைப்பாக இவை உருவாக்கப்படவில்லை என்பதற்குக் காரணம் இருக்கின்றது. இந்தியா அரசியலமைப்பின் படி – சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை சம்மந்தமான சட்டங்களை மாநில அரசாங்கங்களால் மட்டும் இயற்றமுடியும் . ஆனால் ,குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறைகள் பொது பட்டியலில் இருப்பதால் மத்திய அரசும் மாநில அரசும் சட்டம் போடுவதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளன . இருந்தாலும், பொதுவாக அன்றாட குற்றவியல் வழக்குகளையும் ,விசாரணைகளையும் அந்தந்த மாநில அரசாங்கங்களுக்குத் தான் முன்னுரிமை உண்டு என்பது அரசியலமைப்பின் மரபு . ஏனென்றால் , ஒவ்வொரு கிரிமினல் குற்றமும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான அச்சுறுத்தல் அல்ல, இதன் விளைவாக, மாநிலங்களே இந்த குற்றங்களை சமாளிக்கும் திறன்படைத்தவைகளாக உள்ளன .
ஆனால் சமீபத்திய என்.ஐ.ஏ சட்ட திருத்த மசோதாவில் ஆள்கடத்தல் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் , ஆயுதங்கள் சட்டம் சட்டம் போன்ற பிரிவின்கீழ் உள்ள குற்றங்களை விசாரிப்பதற்கு என்.ஐ.ஏவிற்கு அதிகாரம் கொடுப்பதாய் உள்ளது . இந்த குற்றங்களில் என்.ஐ .ஏ வை வழக்குதாரராக உட்படுத்தியதற்கான காரணங்கள் தான் தெளிவாக இல்லை . உதாரணமாக,வெடிகுண்டு தொடர்பான குற்றங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்பை கெடுப்பவையாக இருக்க முடியாது , ஆயுத சட்டத்தில் உள்ள எல்லா குற்றங்களும் பயங்கரவாத குற்றங்களாக தொடர்பு படுத்த முடியாது. மேலும், 2008ல் வந்த ஒரிஜினல் என்ஐஏ சட்டத்தின் கீழ் கூட, மேற்கூறிய சட்டம் தொடர்பான குற்றங்கள் பயங்கரவாதக் குற்றங்களோடு தொடர்பிருத்தல் , அவர்கள் மீது வழக்குத் தொடர என்ஐஏவுக்கு அதிகாரம் இருந்தது .
மாநில அரசாங்ககளின் சட்டம் ஒழுங்கு சம்மந்தமான குற்றிவியல் வழக்கு அதிகாரத்தை தேசிய பிரச்சனையாய் மாற்றி தனது அதிகாரத்தையும் , கூட்டாட்சி தத்துவக் கோட்படையும் மத்திய அரசு மாற்றி அமைக்கிறது . இதனால் மாநில காவல்துறை தேவையில்லாத ஒன்றாக்குவதுடன் , சாதாரண வழக்குகளைக் கூட மத்திய அரசாங்கத்தோடு மையப்படுத்திகிறது .
என்.ஐ .ஏ மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . சமீபத்திய அதனின் விசாரணைகள் ஒரு தலைபட்சம்யென அதனின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக்கப்பட்டன . இந்த என்.ஐ .ஏ சட்டம் திருத்தம் செய்யப்பட்டால் இந்திய குடிமகன்களுக்கும், தேசிய நலன்களுக்கும் அச்சுறுத்தும் மனிதர்களை குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்ய முடியும் . ஆனால் , இதில் சசூட்சமம் என்னவென்றால் தேசத்தின் நலன் என்ன என்பதற்கு பொதுவான விளக்கம் சட்டத்திலும் இல்லை , சட்டத்தால் சொல்லவும் முடியாத நிலை …. மேலும், என்ஐஏ விசாரிக்க அதிகாரம் உள்ள சட்டங்களில் (உதாரணமாக , ஆயுதங்கள் சட்டம் ,ஆள்கடத்தல் சட்டம் ) “இந்தியாவின் நலனை பாதிக்கும்” என்பது ஒரு குற்றமாக குறிப்பிடப்படவில்லை . புது புது குற்றங்களை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிலுள்ள என்.இ.ஏ தனது நடைமுறை அதிகாரத்தின் மூலம் உருவாக்கமுடியும் என்பதை நாம் பார்க்கிறோம் .
எனவே, என்ஐஏ திருத்த மசோதா, 2019 இந்திய கூட்டாட்சி கொள்கைகளையும் ,குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் மீறும் வகையில் உள்ளன . இது மறுபரிசீலனைக்கு தகுதியான ஒன்றே .
இந்த கட்டுரை முதன்முதலில் ‘தி பிரிண்ட் ‘ என்ற பதிப்பில் 2019 ஜூலை 16 அன்று ‘Free Rein To Power’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் உதவி பேராசிரியர், தேசிய சட்டப் பள்ளி இந்தியா பல்கலைக்கழகம், பெங்களூர்.