A R Vasavi
கிராமப்புற இந்தியாவில் நிலவும் எண்ணற்ற பிரச்னைகள் குறித்து கொள்கைகள் வகுப்பதிலும், அவைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதிலும் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை. கிராமப்புற இந்தியாவில் அதிகளவு விவசாயம் செய்ய முடியாத நிலங்கள் இருப்பது, உணவு பயிர்கள் விளைவிப்பதில் சரிவு, வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுத்தும் பேரழிவுகள் ஆகிய சவால்கள் பகிரங்கமாகவே தெரிகின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
2020ம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பு ஒட்டுமொத்த பொருளாதார சரிவு மற்றும் சிதைவை மறுக்கிறது. இந்தியாவில் தயாரிப்பது (make in india) என்பதற்கு பதிலாக இந்தியாவில் பொருத்துவது (assemble in india) என்பதை வலியுறுத்தி, தனியார்மயத்தை ஊக்குவித்து, செல்வத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி, இந்தியாவை ஒரு ஏற்றுமதி கேந்திரமாக மாற்ற முனைகிறது. நிதியமைச்சரின் ஆலோசனையின் பேரில், கணக்கெடுப்பு இரண்டாவதாக, தொழில், உற்பத்தி, உட்கட்டமைப்பு சார்ந்த பொருளாதாரம் மற்றும் சாமானியர்களின் உணவு பொருட்களின் விலையை குறைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அதை தாளினாமிக்ஸ் என்று கூறுகிறது. உணவுப்பொருட்களின் விலையை குறைக்கும்போது, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள், கிராமப்புற விவசாய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு என்ன செய்யப்போகிறது என்பதற்கு பட்ஜெட்டில் சரியான விளக்கம் இல்லை. உண்மையில் இந்த பட்ஜெட் சுற்றுச்சூழல் நிலைப்பாடு, நிலம் வைத்திருக்கும் அளவு, வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை பார்ப்பதில் தோல்வியடைந்துள்ளது. பல பாகங்களைக்கொண்ட கிராமப்புற மற்றும் விவசாய பொருளாதாரம் குறித்து புரிந்துகொள்வதை புறக்கணிப்பதன் மூலம், நிதிநிலை அறிக்கை தொடர்ந்து கிராமப்புறத்திற்கு எதிராக நகர்புறத்தையும், விவசாயத்துக்கு எதிராக தொழிலையும் பிரித்து வளர்த்தெடுக்கிறது. இன்னும் மோசமாக, விவசாயிகள் இந்த நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தேவையில்லாதவர்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்தாண்டு விவசாயம் மற்றும் கிராமப்புற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோன்ற தோற்றம் உருவாக்குவப்பட்டுள்ளது. விவசாயிகள் தனித்துவமாக இயங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது. வேளாண் துறையை, நிதி மற்றும் சந்தையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் அரசு சிறு, குறு விவசாயிகளையும் வலுப்படுத்த முடியும். இந்த வகை ஒருங்கிணைப்புகள் வளங்களை சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்வதற்கு மட்டுமே அனுமதிக்கிறது. பின்தங்கிய விவசாயிகளின் முதலீடுகளுக்கு துணையிருப்பது, ரசாயன தேவை, தொழில்நுட்ப சந்தை ஆகியவற்றை மறந்துவிடுகிறது. விவசாயம் அல்லது வேளாண்மை என்பது அந்தந்த மாநிலம் சார்ந்தது. கூட்டாட்சி அமைப்பின் முக்கிய பகுதி. (அதன் உரிமைகள் ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுகைக்கு உட்பட்டது) நிதியமைச்சர் எல்லா மாநிலங்களையும்,பாஜக உருவாக்கிய மூன் று முக்கிய வேளாண் கொள்கைகளை பின்பற்ற அழைக்கிறார். விவசாயிகளை அன்னம் வழங்குபவர் என்று அழைத்தாலும், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மற்றும் வாழ்வாதார வளர்ச்சிக்காக பெரும்பாலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதுபோல் MNREG திட்டத்தின் நேர்மறையான தாக்கம் இருந்தபோதும், இந்தாண்டு ஒதுக்கீடு குறைந்துவிட்டது.
பல்வேறு மாநிலங்களில் முந்தைய ஆண்டின் நிலுவையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இடையிடையே வழங்கப்படும் வேளாண் கடன் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்தும் பொருளாதார கணக்கெடுப்பு விமர்சிக்கிறது. (அதன் மூலம் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் நன்மையடைந்து வந்தனர். அது கிடைக்காதது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது) மேலும் நிதிநிலை அறிக்கையில், வேளாண் லாபம் தொடர்பான பிரச்னைகள் குறித்து, எந்த பரிந்துரைகளையும் குறிப்பிடவில்லை. நிதிநிலை அறிக்கை இதை குறிப்பிடும் எனில், தண்ணீர் மற்றும் மண் சிதைவு குறித்த நடைமுறை பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி, அவ்வப்போது வெள்ளம் போன்றவை ஏற்படுத்தும் பேரழிவுகளை தாங்கிதான் கிராமப்புற நிலங்கள் இருக்கின்றன. எனவே மண், தண்ணீர், விதைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து எண்ணிப்பார்திருக்க வேண்டும். வேளாண் உற்பத்தி மற்றும் சந்தையிடுதலுக்கும் துணை நிற்காதது அபத்தமாக கருதப்படுகிறது. வறண்ட நிலங்களை சூரிய மின்சக்தி தயாரிக்கும் மையங்களாக உருவாக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. கிரிஷ்உதான் என்ற திட்டம் வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விமான போக்குவரத்துக்கு வழிவகுக்கிறது. ஒரே வகைப்பயிரிடல் ஏற்படுத்தும் அழிவு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து கவனிக்க தவறி, நிதியமைச்சர் ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்ற முறையை பரிந்துரைக்கிறார். பாஜக அரசு மக்களை கவரும் வகையில் கொண்டுவந்த பிஎம்-கிஷான் திட்டம் (இதுவரை இதன் மூலம் தகுதியுள்ள 26.6 சதவீத விவசாயிகள் முழுப்பலனை அடைந்துள்ளனர்) விவசாயிகள் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகும். விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஒன்றுமில்லை. கிராமப்புற இந்தியாவுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிறைய திட்டங்கள் தவறான இடத்தை அடைந்துள்ளது அல்லது விதை மதிப்பீடு செய்வதிலேயே முடங்கிவிட்டது. விதை பாதுகாப்பு, அதில் கிராமப்புற மகளிரின் பணிகள் குறித்து பேசும்போது, நிதியமைச்சர் தான்யலட்சுமி திட்டத்தை அறிவுறுத்துகிறார். அதன் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் பெற்று விதை பாதுகாப்பு மையங்களை அமைக்க முடியும். இதுபோன்ற திட்டங்கள் விதை உரிமைகள் கார்ப்ரேட் வசம் உள்ளதை மறைக்கும் முயற்சியாக தெரிகிறது.
நிதியமைச்சர் அக்கறையுள்ள சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினாலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சில சங்கங்கள் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, கணவனை இழந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என மனுக்கள் கொடுத்திருந்தாலும், அவை புறக்கக்கப்பட்டுவிட்டன. தேசத்தின் தீவிர தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள, தண்ணீர் பஞ்சமுள்ள 100 மாவட்டங்களில் புதிய தண்ணீர் பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே ஒழிய, அதற்கான திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தண்ணீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்கான ஒதுக்கீடுகள் ஒன்றும் செய்யப்படவில்லை.
கிராமப்புற இந்தியாவின் எண்ணற்ற பிரச்னைகள் குறித்து கொள்கைகள் வகுப்பதிலும், அவைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதிலும் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை. கிராமப்புற இந்தியாவில் அதிகளவு விவசாயம் செய்ய முடியாத நிலங்கள் இருப்பது, உணவு பயிர்கள் விளைவிப்பதில் சரிவு, வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுத்தும் பேரழிவுகள் ஆகியவை சவால்களாக பகிரங்கமாகவே தெரிகின்றன. நாம் தற்போது தேர்ந்தெடுத்துள்ள மக்கள் பிரிதிநிதிகள் பெரும்பாலும், ஆளுங்கட்சியின் கையாளகத்தான் இருக்கிறார்கள். மேலும் கிராமப்புற பிரச்னைகள் குறித்து அக்கறை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். நமது ஆட்சியாளர்கள் அன்னம் வழங்குபவர்களுக்கு விஷத்தைதான் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
பெங்களூரைச் சேர்ந்த மானுடவியலாளர் எழுதியது
தமிழில் : R. பிரியதர்சினி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.