Advertisment

கண்காணிக்கும் காவலாளி

மற்ற எந்த நாடுகளையும்விட, பல ஆண்டுகளாக மற்ற எந்த நிறுவனங்களையும்விட உச்ச நீதிமன்றம் சில நேரங்களில் தடுமாறினாலும், உடனடியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். தன் மீதான பழிகளை துடைத்துக்கொண்டு பெரிய எழுச்சியுடன் எழுந்து நிற்கும்.

author-image
WebDesk
Jun 03, 2020 10:07 IST
New Update
p chidambaram article on supreme court, supreme court, SC judgments, p chidamabaram, உச்ச நீதிமன்றம், ப சிதம்பரம், இந்திய பொருளாதாரம், indian economy, Chidambaram column, demonetisation, sc on demonetisation, article 370, Court, Justice Patanjali Sastri

p chidambaram article on supreme court, supreme court, SC judgments, p chidamabaram, உச்ச நீதிமன்றம், ப சிதம்பரம், இந்திய பொருளாதாரம், indian economy, Chidambaram column, demonetisation, sc on demonetisation, article 370, Court, Justice Patanjali Sastri

ப. சிதம்பரம்,கட்டுரையாளர்

Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஜி.ரோவ் பாரிஸ்டராக பணியாற்றி வந்தார். அவர் இடது தாராளவாத சிந்தனையாளர். அவர் மக்கள் கல்வி சமூகத்தை (People’s Education Society) உருவாக்கி, அதன் மூலம் அனைத்து அறிவியல், பொருளாதார கல்வி, கலை, இலக்கியம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை பரப்பி வந்தார். 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது சுதந்திரத்திற்கு வழி கிடைத்தது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் சட்டப்பிரிவு 19ன் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் குறிப்பிடத்தக்கது. அதில் உள்ள ஒரு சுதந்திரம் தான் சங்கங்கள் அமைப்பதற்கும், யூனியன்கள் ஏற்படுத்துவதற்கும் உரிமை வழங்குகிறது.

கம்யூனிசத்துக்கு எதிராக இருந்த மெட்ராஸ் மாநில அரசு மக்கள் கல்வி சமூகம் என்ற அமைப்பை சட்டவிரோதமான சங்கமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, இந்திய குற்றச்சட்டத்திருத்தம் 1908ஐ ஏற்படுத்துவதற்கு தூண்டுதலாக அமைந்தது. 1908 சட்டம் காலனிய காலத்தின் சட்டமாக இருந்தது. இந்த அறிவிப்பும், சட்டமும் உயர்நீதி மன்றத்திற்கு சவாலாக இருந்தது. அந்த அறிவிப்பை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, மாநில அரசு திருத்தம் கொண்டு வந்தது. வெளிப்படையாக அதன் அடிப்படை சட்டத்தை பலப்படுத்துவதற்காகவும், நியாயமான செயல்முறையை கொடுப்பதற்காகவும், முந்தைய அறிவிப்புகளின் திருத்தங்களை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.

காவலாளியின் கடமை

சட்ட ரீதியிலான ஏமாற்றுவித்தை உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வின் முன் வெற்றிபெறவில்லை. (தலைமை நீதிபதி ராஜமன்னார் மற்றும் நீதிபதி சத்ய நாராயணராவ் மற்றும் விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் கொண்ட அமர்வு) உயர்நீதிமன்றம், மெட்ராஸ் திருத்தம் மற்றும் அந்த அறிவிப்பு இரண்டையுமே உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு சாதகமாக பேசிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு எழுதியதாவது:

இதுபோன்ற முக்கியமான மற்றும் எளிதானதல்லாத கடினமான வேலைகளை இந்த நாட்டின் நீதிமன்றங்கள் சந்திக்கும்போது சட்டமன்ற அதிகாரம் பெற்றவர்கள் மீது அதை திருப்ப வேண்டிய ஆசையால் அவற்றை செய்வதல்ல, ஆனால், அரசியலமைப்பால் அவர்கள் மீது அப்படியே போடப்பட்ட கடமைகளிலிருந்து வெளியேற வைக்கும் போராளி குணத்தால் செய்வதாகும். இது குறிப்பாக அடிப்படை உரிமைகளை கண்காணிக்கும் காவலாளியாக இருக்கும் நீதிமன்றத்தின் கடமையாகும்.

மற்ற எந்த நாடுகளையும்விட, பல ஆண்டுகளாக மற்ற எந்த நிறுவனங்களையும்விட உச்ச நீதிமன்றம் சில நேரங்களில் தடுமாறினாலும், உடனடியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். தன் மீதான பழிகளை துடைத்துக்கொண்டு பெரிய எழுச்சியுடன் எழுந்து நிற்கும். இதனால்தான் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு உயரிய நம்பிக்கை உள்ளது.

பணமதிப்பிழப்பு படுவீழ்ச்சி

முதலாவது பணமதிப்பிழப்பு வழக்கு. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்துவிட்டது. அந்த ஒரே சட்டம் இந்திய பொருளாதாரத்தை கீழ்நோக்கி இட்டுச்சென்றது. 2017 – 18ம் ஆண்டின் கடைசி காலாண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் சரியத்துவங்கியது. அந்த சரிவு, வெற்றிகரமான 7 காலாண்டுகளிலும் தொடர்ந்ததுடன், எட்டாவது காலாண்டிலும் (ஜனவரி – மார்ச் 2020) புதிய வீழ்ச்சியை அடைந்தது. கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கியது முதல் நமது கவனம் முற்றிலும் அதன் மீது திசை திருப்பப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னை, தொற்று மற்றும் ஊரடங்கிற்கு முந்தையது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உச்சநீதிமன்றம் மற்றும் சில உயர்நீதிமன்றங்களில், பணமதிப்பிழப்பு சவால் விடுத்தது. 2016ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விரிவான உத்தரவை பிறப்பித்தது. ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 9 முக்கிய கேள்விகளை வைத்தது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் அதேபோன்ற வழக்குகளை திரும்பப்பெற்றுக்கொண்டன. பணமதிப்பிழப்பு தொடர்பான எந்தவொரு வழக்கு குறித்து முடிவெடுப்பது அல்லது மற்ற எந்த நீதிமன்றமும் பொழுதுபோக்குவதை கட்டுப்படுத்தியது. பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால், இதை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அனுப்பியது. அங்குதான் பணமதிப்பிழப்பு வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

அரசியலமைப்பு சதி

மற்றொரு வழக்கு ஜம்மு – காஷ்மீர் மற்றும் சட்டப்பிரிவு 370 வழக்கு. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் அனைத்து விதிகளும் ஜம்மு – காஷ்மீருக்கு பொருந்தும் என்ற 2 அரசியலமைப்பு உத்தரவுகளை குடியரசுத்தலைவர் பிறப்பித்தார். இதன் விளைவாக மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. ஜம்மு – காஷ்மீர் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அங்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சட்ட சபை கவுன்சில் நீக்கப்பட்டு சட்டமன்றம் கலைக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் கவர்னர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மாநில மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட நிலையான அமைப்புகளும் கலைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். (மெகபூபா முப்தி மற்றும் சாய்ப்பூதீன் சோஷ் உள்ளிட்டவர்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே இன்னும் காவலில் உள்ளனர்) ஊடக உரிமைகள் உள்ளிட்ட பல உரிமைகள், பல குடியேற்ற சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டன.

2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியிட்ட உத்தரவால், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, குறிப்பிட்ட சில முதன்மை மறுப்புகளை நிராகரித்தது. விசாரணைக்கான வழக்குகளின் பட்டியலை கவனித்தது. அப்போது கொரோனா வைரஸ் இடையில் நுழைந்து, தேசிய அளவிலான ஊரடங்கு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. விசாரணைக்கான வழக்குகள் பட்டியலிடப்படவில்லை. மே 4ம் தேதி இணையம் மற்றும் 4ஜி தடைக்குறித்த மற்றொரு விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த கட்டுரையின் நோக்கம் உச்சநீதிமன்றத்தின் கண்காணிக்கும் காவலாளி நிலை மீண்டும், மீண்டும் பரிசோதிக்கப்படுவதாகும். நீதிமன்றங்கள் அதன் கடமையைச் செய்வதில் இருந்து எப்போதும் ஒதுங்கிக்கொள்ளக்கூடாது. அதே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வழக்குகள் தற்போது நீதிமன்றங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவை தற்போது நடந்துகொண்டிருக்கும் செயல்கள். அதுகுறித்து நான் வேறொரு நாளில் பேசுகிறேன். நாம் அனைவரும் மனமுருகி வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்தியாவின் தமைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம், உயிர்ப்புடனும், தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிகள் வழங்கிய உயர்ந்த கடமைக்கு சான்றாகவும் இருக்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழில்: R. பிரியதர்சினி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
#P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment