Advertisment

நீதிபதிகள் நியமனத்தில் என்னதான் தீர்வு?

கட்சி சார்பான, பழிவாங்கும் மற்றும் பெரும்பான்மை அரசியலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, திறமையான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரத்தை அரசு நிர்வாகத்திடமும் முழுமையாக ஒப்படைக்க முடியாது என்றும் நான் நம்புகிறேன்.

author-image
WebDesk
New Update
Supreme court, collegium system, appointment of judges, உச்ச நீதிமன்றம், கொலியம் அமைப்பு, நீதிபதிகள் தேர்வு செய்யும் முறை, appointment of high court judges, debate over collegium system, Tamil Indian express P Chidambaram columns

ப.சிதம்பரம்

Advertisment

திறமையான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் இருந்து அரசு நிர்வாகத்தை முற்றிலும் விலக்க ;முடியாது என நான் நம்புகிறேன். அதே நேரத்தில் கட்சி சார்பான, பழிவாங்கும் மற்றும் பெரும்பான்மை அரசியலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, திறமையான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரத்தை அரசு நிர்வாகத்திடமும் முழுமையாக ஒப்படைக்க முடியாது என்றும் நான் நம்புகிறேன். நீதித்துறை மற்றும் அரசு நிர்வாகம் இரண்டும் சேர்ந்தே நீதிபதிகளை தேர்நதெடுக்க வேண்டும்.

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கும் (பத்திரிகைகளில் வெளியானபடி), ஒன்றிய சட்ட அமைச்சருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் இங்கே தரப் பட்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றம்: ‘கொலீஜியம்’ என அழைக்கப் படும் நீதிபதிகள் குழு பரிந்துரைக்கும் நபர்களை நீதிபதிகளாக நியமிக்க முடியாதபடிக்கு நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுகிறது.

சட்ட அமைச்சர்: கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் அரசு அவற்றைக் கிடப்பில் போடுகிறது என்று எப்போதுமே குற்றஞ்சாட்டாதீர்கள். அப்படி குற்றம் சாட்டினால் கோப்புகளை அரசுக்கு அனுப்பாதீர்கள். நீங்களே உங்களுடைய நியமனங்களை மேற்கொண்டு நீதித் துறையின் அனைத்து வேலைகளையும் செய்யுங்கள்.

உச்ச நீதிமன்றம்: அவர்களே எங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் தரட்டும். அதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை, நாங்களே அடுத்தடுத்த வேலைகளையும் பார்த்துக்கொள்கிறோம். அதில் எங்களுக்கு பிரச்சனைகளே இல்லை.

உச்ச நீதிமன்றத்துக்கும் அரசு நிர்வாகத் துறைக்கும் இடையில், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 124(2), 217(1) தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில், நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசின் நிர்வாகத் துறையிடம்தான் இருந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அந்தந்த உயர் நீதிமன்றத்திடமும், நியமிக்க உச்ச நீதிமன்றத்திடமும் அரசு நிர்வாகத் துறை ஆலோசனை செய்தது.

அந்தந்த மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை செய்து , நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கும். ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 217வது கூறின்படி உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும். அதேபோல் ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 124வது கூறின்படி, நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கும், பிறகு அவர்களை நீதிபதிகளாக நியமிக்கும். நீதித் துறை நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பல நீதிபதிகளை அரசு நிர்வாகத் துறை இப்படித்தான் நியமித்துவந்தது, பிரச்சினைகளை ஏற்படுத்திய சில நீதிபதிகளும்கூட இப்படி நியமனமானதும் உண்டு.

சாத்தியமான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் இருந்து நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக விலக்க முடியாது என்று நான் நம்புகிறேன். பாகுபாடான, பழிவாங்கும் மற்றும் பெரும்பான்மை அரசியலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரத்தை நிறைவேறு அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியாது என்றும் நான் நம்புகிறேன். NJAC 2.0 இல் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை இரண்டும் இடம் பெற வேண்டும்

தலைகீழ் நடைமுறை

இந்த நடைமுறை 1993 ன் இரண்டாவது வழக்கு மற்றும் மூன்றாவது நீதிபதிகள் 1998 ல் வழங்கிய வழக்கு போன்றவற்றின் மூலம் தலைகீழானது. கொலீஜியம் என்ற புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொலீஜியம் எடுத்துக் கொண்டது. இது மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். பரிந்துரை மீண்டும் வலியுறுத்தப்பட்டால், நியமனம் செய்ய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தரம் முதல் 40 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தரத்தை விட தரத்தில் மேம்பட்டதாக கருத முடியாது. இந்த முறையில் பல புகழ்பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் சில மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

1993 முதல் பதவியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் மாற்றப்பட்ட நடைமுறைக்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டியுள்ளன. இருப்பினும், நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் நியமனங்கள் நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறை ஆகிவிட்டது . இரண்டு மாண்புமிகு நீதிபதிகள் சுட்டிக்காட்டியபடி, உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட சட்டத்திற்கு முரணானது என்று கொலீஜியம் மீண்டும் வலியுறுத்திய பரிந்துரைகளையும் அது நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவாக, உயர் நீதிமன்றங்களில் (ஜூலை 1, 2022 நிலவரப்படி) அனுமதிக்கப்பட்ட 1,108 நீதிபதி பதவிகளில் உச்ச நீதிமன்றத்தில் ஏழு காலியிடங்களும், 381 இடங்களும் காலியாக உள்ளன. பெரிய சோகம் என்னவென்றால், தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதி பதவிக்கு பரிசீலிக்க மறுத்துவிட்டனர் அல்லது பல மாதங்களாக நியமனம் நிறுத்தப்பட்டிருந்தால் பெயரைத் திரும்பப் பெற்றனர்.

தொடரும் உரசல்

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறைக்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் சில உரசல்கள் இருந்தன. ஆனால் இந்த நியமனங்களை தடுத்து நிறுத்தி விடுவது என பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு வழக்கமாய் இருக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தின் நியமன சட்டத்துக்கு புறம்பானது என இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது.;தற்போதைய மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இப்போது உச்ச நீதிமன்றத்தின் 7 உயர்நீதிமன்றங்களில் 381 பதவிகள் காலியாக உள்ளன. 20022 ம் வருட கணக்கின் படி ஒன்றிய அரசு அனுமதித்த மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1108. இந்த மோதலால் பல திறமையான வழக்குரைஞர்களின் நியமனங்களை பரிசீலிக்க படவே இல்லை. இதனால் வருத்தமடைந்த சீனியர் வழக்கறிஞர்கள் தமது பெயரை பரிசீலிக்கவே வேண்டாம் என பரிந்துரை பட்டியலில் இருந்தே விலகி விட்டனர்.

கருவில் கலைந்தது

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் என்ற அமைப்பை கடந்த 2004ம் ஆண்டு அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கொண்டு வந்தது. இந்த சட்டம் நீதிபதிகளை நியமிப்பதில் நீதிபதிகளுக்கும் அரசின் நிர்வாக துறைக்கும் சம அந்தஸ்து அளித்தது. இந்த சட்டத்தில் சில குறைகள் இருந்திருந்தாலும் பிற்காலத்தில் இரு தரப்புமே ஆலோசனை கூட்டங்கள் மூலமாக சரி செய்திருக்கமுடியும். ஆனால் இதை யாருமே செய்யவில்லை. இதையடுத்து சட்டத்தின் 93 வது திருத்தமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றம் 2015 அக்டோபர் 15ம் தேதி செல்லாததாக அறிவித்து விட்டது. இந்த வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் நீதிபதி சலமேஸ்வர் அளித்த தீர்ப்பு முக்கியமானது.

இந்த நிலையில் நான் The NJAC Conundrum என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் ( Indian Express , நவம்பர் 1, 2015) இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்தேன். ஆனால் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான பொதுவான காரணத்தையும் பரிந்துரைத்தேன். உலகின் வேறு எந்த நாட்டிலும் நீதிபதிகள் புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதில்லை. நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளவர் நல்ல நடத்தை உள்ளவரா, சட்டம் அறிந்தவரா, பணிக்கு சரியானவையா என்பதையெல்லாம் ஆராயும் பணி அரசின் நிர்வாகத்துறை தான் இருக்கிறது. நீதித்துறையின் தரப்பில் உள்ள வலுவான வாதம் என்னவென்றால், பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் பணிபுரியும் மாவட்ட நீதிபதிகளை நீதிபதிகளாக நியமிக்கும் தகுதி நீதிபதிகளுக்கு தான் அதிகம் என்பது நீதித்துறையின் வாதம். இந்த இரண்டு வாதங்களிலுமே உண்மை உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். இதில் துயரப் படுவது நீதிபதிகளாக தான் இருப்பார்கள். அரசின் நிர்வாக துறையினர் மேலும் மகிழ்ச்சி அடைவார்கள். இதில் அதிக இழப்பை சந்திக்க போகிறவர்கள் இந்திய குடிமக்கள் தான். அதிலும் நீதி மன்ற கதவுகளை தட்ட இயலாத ஏழை மக்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

சாத்தியமான தீர்வு

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இருந்து அரசின் நிர்வாகத்துறையை முழுமையாக விலக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில் கட்சி சார்பான, பழிவாங்கும் மற்றும் பெரும்பான்மை அரசியலின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, திறமையான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரத்தை அரசு நிர்வாகத்திடமும் முழுமையாக ஒப்படைக்க முடியாது என்றும் நான் நம்புகிறேன். நீதித்துறை மற்றும் அரசு நிர்வாகம் இரண்டும் சேர்ந்தே நீதிபதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீதிபதி பதவிக்கு தகுதியானவர்களை கொலீஜியம் முன்மொழியட்டும். அல்லது பரிமந்துரைக்கட்டும். அதற்கு பிறகு அரசின் நிர்வாகத் துறை அவர்களுக்கான நியமனத்தை வழங்கலாம். இந்த நடைமுறையை அனுபவங்களின் அடிப்படையில் மேலும் வளப்படுத்தலாம். நீதித்துறையில் பணியில் இல்லாத சட்ட நிபுணர்களிடமும் இந்த பணியை ஒப்படைக்கலாம். நடைமுறையை மேலும் செம்மைப்படுத்தலாம்.

நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் நாட்டின் நலம் தொடர்பான பொது பிரச்சினையைத் தீர்க்க நிர்வாகமும் நீதித்துறையும் இணைந்து தீர்வு கண்டாக வேண்டும். ஓரளவிற்கு ராஜதந்திரத்தை காட்ட வேண்டும். ராஜதந்திரம் இல்லாமல், கடினமான வார்த்தைகளும் சவால்களும் மனப்புண்களை ஆற்றாது. மேலும் அவை கடுமையாகி நாட்டின் நலனை சீரழித்து விடும். இதற்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியே பலியாக இருக்கும்.

தமிழில் : த . வளவன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Supreme Court P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment