ப.சிதம்பரம்
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது, இந்தியா இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது தெளிவாகிவிடும்.
அரசு வீடியோ கான்ஃபரன்சிங்கிலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொண்டு வருவது, கை கழுவவது, ஒருவரின் மூக்கு மற்றும் வாயை மூடச்சொல்வது மற்றும் மாஸ்க்குகளை அணிந்துகொள்ள அறிவுறுத்துவது என அந்த பணிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். மார்ச் 19-ம் தேதி பிரதமர் மக்களிடம் இதையெல்லாம் வலியுறுத்தினார். அவையெல்லாம் தேவையான ஒன்றுதான். ஆனால் போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.
நான் ஒரு எண்ணை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பேன். அது கோவிட் – 19-ஆல் பாதிக்கப்பட்டவர்களாக அரசு அறிவிக்கும் எண்கள். மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அது 2-ஆக இருந்தது. மார்ச் 8-ம் தேதி 32-ஆக உயர்ந்தது. மார்ச் 15-ம் தேதி 111 உயர்ந்தது. மார்ச் 20-ம் தேதி நான் இதை எழுதுகிறேன். அப்போது அந்த எண்ணிக்கை 236-ஆக உள்ளது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆபத்தான வீதத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தயக்கம் ஏன்?
உலக சுகாதார நிறுவனம், தொற்றுநோயியல் நிபுணர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகள் கவுன்சில் ஆகிய அனைத்திடம் இருந்தும், அப்போதும், இப்போதும் போதியஅளவு எச்சரிக்கைகள் வந்துகொண்டே உள்ளது. நாம் வலி மிகுந்த, கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், தொற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்த ஒரே எச்சரிக்கையை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தன.
நான் பிரதமரை ஆதரிக்க வேண்டியது எனது கடமை. அதை நான் செய்வேன். அவர் நாட்டு மக்களை நல்லொழுக்கத்தை பின்பற்றி, எதிரியை எதிர்த்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வைரஸ், கிளமென்ட் அட்லியைப்போல் உயர்ந்த ஒழுக்க நெறிகளை ஊக்கமளிக்கிறது என்பது எனக்கு அச்சமாக உள்ளது. பிரதமர் சில நாட்களில் கட்டாயமாக மீண்டும் திரும்பி வந்து கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார். இரண்டு முதல் நான்கு வாரங்கள் மட்டும் நகரங்களையும், சிறு நகரங்களையும் தற்காலிகமாக பூட்டிவைக்க வேண்டும் என்று நான் தற்போது அவரை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தற்போது சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கோவிட் – 19-ஆல் ஏற்படும் பின்விளைவுகள் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு கோவிட் – 19-ஆல் ஏற்பட்டது என்று பிரதமர் கூறுவது உண்மை கிடையாது. கோவிட் – 19 பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் குறைய துவங்கிவிட்டது. வளர்ச்சி விகிதம் ஏழு வெற்றிகரமான காலாண்டுகளாகவே சரியத்துவங்கிவிட்டது. ஜனவரி – மார்ச்சுக்கான தேதி நிச்சயமாக உயர்த்துவதை கணிக்கவில்லை. 2020ம் ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டு முந்தைய காலாண்டைபோல், மோசமானதாகவேதான் இருந்திருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.
வரவிருக்கும் நெருக்கடி
வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்க முடிகிறது. பெரிய நிறுவனங்கள் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தங்கள் பணியாளர்களை பணிக்கு வரவேண்டாம் என்று சொல்ல நேரிடும். தற்காலிக, சாதாரண பணிகள் பாதிக்கப்படும். இதுவரை இல்லாவிட்டாலும், இனி பாதிக்கப்படும். பெரிய உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட ஆர்டர்கள் குறைக்கப்படும். சிறு தயாரிப்பாளர்கள் பெரிய பணப்புழக்கப் பிரச்னைகளால், பாதிக்கப்படுவார்கள். மூலப்பொருட்கள் வழங்குதலில் பாதிப்பு ஏற்படும். கடன் குறைக்கப்படும். இவையெல்லாம், பொருளாதாரம் விரைவாக சரிவடைவதற்கான வழக்கமான காரணங்களாகும். இந்த சரிவை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ள அரசின் தோல்விக்காக நான் இந்திய அரசை சாடினேன். அந்த குற்றச்சாட்டுக்கள் அர்த்தமுள்ளது. எனினும் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு அரசை நாம் குறைகூற முடியாது.
எனினும், கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே பொறுப்பாகும். அதன் முதல் கடமை வேலைவாய்ப்பையும், ஊதியங்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அரசு எந்த துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதை உடனடியாக கண்டுபிடித்து, அதை தற்போது உள்ள வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் அளவிலே தொடர்ந்து இருக்குமாறு காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நடவடிக்கைகள் அனைத்து பதிவு செய்த முதலாளிக்கும் பொருந்தும். முதலாளிகளுக்கு, இந்த தொகையை வரிக்கடன், வட்டி ஒத்திவைப்பு ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்ய வேண்டும்.
அடுத்தகட்டமாக முறைசாரா துறையின் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா, போக்குவரத்து, வீட்டு விநியோகம், பழுது நீக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவை மற்றும் கட்டுமான துறைகளில் பல மில்லியன் வேலைவாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்பது, வரிக்கடன் மற்றும் மேம்பட்ட கொள்முதல் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டும்.
அடுத்ததாக வேளாண் தொழில். விவசாயிகள் தொடர்ந்து உழுது, விதைத்து, களையெடுத்து, தண்ணீர்விட்டு, உரமிட்டு, அறுவடை செய்யவேண்டியுள்ளது. பிரதமரின் கிஷானின் பாதுகாப்பு திட்டம் சொந்த நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் அந்த இடத்தில்தான் துவங்க வேண்டும். பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.12 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும். 2019 – 20ம் ஆண்டிற்கான மிச்ச தொகை உடனடியாக வழங்கப்படவேண்டும். குத்தகை விவசாயிகளின் பட்டியல் அந்தந்த மாநில அரசிடம் உள்ளது. அவர்களையும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு குடும்பத்திற்கு ரூ.12 ஆயிரம் வழங்கவேண்டும். சொந்த நிலமுள்ள, குத்தகை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டவுடன், தினக்கூலி விவசாயப்பணியாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.
வேளாண் சாரா தினக்கூலித் தொழிலாளர்கள்தான் கூலித்தொழிலாளர்களிலே அதிகளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஒவ்வொரு பிளாக்கிலும் தினக்கூலி தொழிலாளர்களை பதிவு செய்து, அவர்களுக்கு மாதப்படிகளை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இந்த யோசனை காங்கிரசின் அறிக்கையில் உள்ளது. இந்த மாதப்படித் தொகை மூன்று முதல் 6 மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சுமைதான் எனினும் இதை தேசம் விருப்பத்துடன் ஏற்க வேண்டும்.
பொருளாதார முக்கியத்துவம்
இதற்கு அதிகளவிலான பணம் தேவை. அதை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும்.
தேவையற்ற செலவினங்களை பாகுபாடின்றி கட்டுப்படுத்த வேண்டும்.
பிரமாண்டமான, நீண்ட கால திட்டங்களை நீக்க வேண்டும். அவை சிறிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி விகிதங்களை நன்றாக குறைக்க வேண்டும். பணவீக்கம் உள்ளபோது, இந்திய ரிசர்வ் வங்கி நிலையான நிதி வைத்திருப்பதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்.
எவ்வளவு பணம் தேவைப்படும் என்று இதுவரை மதிப்பிடப்படவில்லை. மத்திய அரசின் 2020 – 21ம் ஆண்டுக்கான மொத்த செலவினம், பட்ஜெட்டின்படி, ரூ.30,42,230 கோடி அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து 40 முதல் 45 லட்சம் கோடி ரூபாயை செலவிடும். கொடுக்கப்பட்டுள்ள இந்த செலவினங்களின் அளவில், ரூ. 5 லட்சம் கோடியை கண்டுபிடிப்பது எளிது. அந்த தொகை கோவிட் – 19ஐ கையாள்வதற்கு, அடுத்த 6 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதுவே அறமும், பொருளாதாரத்துக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும் ஆகும். பணத்தை கண்டுபிடித்து செலவு செய்ய வேண்டும்.
தமிழில்: R.பிரியதர்சினி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.