பதுக்கும் அரசு; பசியில் மக்கள்: ப.சிதம்பரம்

லட்சக்கணக்கானோர் காசின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அவர்களால் உணவு வாங்க முடியாது.

Coronavirus, Corona, P Chidambaram, Food Grains Stock
Coronavirus, Corona, P Chidambaram, Food Grains Stock

ப.சிதம்பரம், கட்டுரையாளர்.

உண்மை: ஏப்ரல் 20-ம் தேதி 2020-ம் ஆண்டு, நம்மிடம் 524.5 மெட்ரிக் டன் அளவு உணவு தானியங்கள் உள்ளது. இதில் 289.5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 235 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். (இதுமட்டுமின்றி, 287 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும் இருப்பு உள்ளது)

வீட்டு உபயோக பொருள் கடைகள், சர்வீஸ் செண்டர்களை திறக்க உத்தரவிடக் கோரி வழக்கு

உணவு தானியங்களுக்காக அமெரிக்காவை நம்பியிருந்த கதையிலிருந்து கடந்து, தன்னிறைவு பெற்று, இந்தியா ஏற்றுமதி செய்துவரும் கதை அதிக முறை கூறப்பட்டுவிட்டது. நம்மிடம் உணவு தானிய தட்டுப்பாடு இருந்தது. உணவு கப்பல் வந்தவுடனேயே அது நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும். இந்தியா கப்பலிலிருந்து வாய்க்கு என்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தது. பசுமைப்புரட்சி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

இந்தியாவில் பொது வழங்கல் திட்டம் 1942ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது இருக்கும் உணவு தானியங்களை பகிர்ந்தளிக்கும் முறையாகும். ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில், பொது வழங்கல் திட்டம் நிரந்தரமான திட்டமாக்கப்பட்டு, அனைவரும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

பொது வழங்கல் திட்டத்திற்கு 2 குறிக்கோள்கள் உள்ளது. உணவு தானியங்கள் உற்பத்தி உயர்ந்த பின்னர், விவசாயிகளுக்கு உபரி அதிகரித்தது. அதற்காக உணவு தானியங்களை நல்ல ஒரு லாபமான விலையில் கொள்முதல் செய்வதற்கு நிறுவனம் தேவையாயிருந்தது. அது விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இந்திய உணவுக்கழகம், உபரி உணவு தானியங்கைளை குறைந்தளவு ஆதார விலைக்கு கொள்முதல் செய்துகொள்கிறது. காரிப் மற்றும் ராபி பருவத்திற்கு பின்னர் உணவு தானியங்களை விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து சேமித்து வைத்துக்கொண்டு, ஆண்டு முழுவதற்கும் தேவையான அளவு உணவு தானியங்களை மட்டும் அவ்வப்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், நிலையான விலைப்பட்டியல் பராமரிக்கப்படுகிறது. இந்த உணவு தானியங்கள் பல்வேறு வகைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், வறுமை கோட்டிற்கு மேல் வாழும் மக்கள், அந்தியோதயா அன்ன யோஜ்னா மற்றும் திறந்த சந்தை வியாபாரம் என்று பல திட்டங்களில் கீழ் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உணவு தானியங்களை யார் வைத்திருக்கிறார்கள்?

இது முழுவதிலும், ஒரு அடிப்படை கேள்வி கேட்கப்படவில்லை அல்லது பதிலளிக்கப்படவில்லை. இந்திய உணவுக் கழகத்தில் உள்ள உணவு தானியங்களை யார் சொந்தம் கொண்டாடுகிறார்கள்? மத்திய அரசா அல்லது இந்திய உணவுக் கழகமா? இந்திய உணவுக்கழகம் நம்புகிறது அதுவே முதலாளி என்று, ஏனெனில், உணவு தானியங்கள் கொள்முதல் செய்து, பாதுகாத்து வைப்பது மற்றும் பகிர்ந்தளிப்பது என அனைத்திற்கும் பொறுப்பு. உணவு தானியங்களின் இழப்புகளுக்கும் இந்திய உணவுக்கழகமே பதிலளிக்க வேண்டும். மாநில அரசுகள், அவர்களின் பணத்தைக்கொண்டு அவர்கள் கொள்முதல் செய்த உணவு தானியங்களுக்கு அவர்களே முதலாளி என்று நினைத்தால், அது அவர்களின் தவறு.

அந்த உணவு தானியங்கள் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான உணவு தானியங்கள் அவை. அது வரி செலுத்தும் மக்களின் பணத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. அதை இந்திய உணவுக்கழகமோ மற்றும் குடிமைப்பொருட்கள் வழங்கல் அமைப்போ ஏற்படுத்தும் லாபமோ, நஷ்டமோ கருவூலத்தின் லாபமும், நஷ்டமும் ஆகும். அது இந்திய மக்களுக்கு சொந்தமான உணவு எனில் அதை சொந்தம் கொண்டாடுவதற்கான உரிமை முதலில் மக்களுக்கே உள்ளது.

இந்த அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொண்டால், இந்த கேள்விக்கு பதிலளிப்பது சுலபமாகும். இதுபோன்ற ஒரு தொற்றுநோய் நெருக்கடி காலத்தில், தேசம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தவிர்க்க முடியாத பசியும், பட்டினியும் சூழ்ந்திருக்கும் நிலையில் அரசு என்ன செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

காசும் இல்லை, சாப்பாடும் இல்லை

லட்சக்கணக்கானோர் காசின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அவர்களால் உணவு வாங்க முடியாது. ஒரு மனிதன் தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ, பணமின்றி அல்லது உணவின்றி இந்த ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளான். ஏழைமக்கள் தங்கள் கவுரவத்தை விட்டு,விட்டு நீண்ட வரிசைகளில் உணவுப் பொட்டலங்களுக்காக அரசும், தன்னார்வலர்களும் சமைத்துக்கொடுக்கும் உணவுக்காக காத்திருக்கின்றனர். இலவசமாக பகிர்ந்தளிக்கப்படும் உணவு பகிர்மானம் முறையாக திட்டமிடப்படாததாக இருக்கும். மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் உணவு சென்றடையாது. தரம் இருக்காது, அளவும் போதியதாக இருக்காது. குழந்தைகளும், வயதானவர்களும் நீண்ட வரிசையில் உணவுக்காக காத்திருப்பது எவ்வளவு கடினம். இதனால், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர் அவர்களுக்கும் சேர்த்து கூடுதல் உணவு பொட்டலங்கள் வாங்குவதற்கு கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டும்.

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு வேரூன்றியுள்ள இந்த நிலையில், பசி இன்னும் பரவலாக்கப்படும் அபாயம் உள்ளது. பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மக்களை பட்டினியில் தள்ளும். தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எத்தனை குடும்பங்கள் பசி, பட்டினியால் தவித்துக்கொண்டிருக்குகிறார்கள் என்று தினமும் வெளியாகும் செய்திகளும், தகவல்களும் நமக்கு ஆதாரங்களாக இருக்கினறன. எவ்வளவு பேர் பட்டினியால் இறந்துள்ளார்கள் என்பது தெரியாது. ஏனெனில் எந்த அரசும் பட்டினிச்சாவுகளை கணக்கெடுக்காது.

இந்தியாவில் மலையளவு உணவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு, தனியார் கடைகள் உள்ளன. ஆனாலும் ஏழை மக்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பது எவ்வளவு முரணான ஒன்று. மத்திய மற்றும் ஊரடங்கு தொடரும் வரை மாநில அரசு இரண்டு விஷயங்களை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

1. ஏழை மக்களுக்கு தானியங்கள், பருப்புகள், எண்ணெய், உப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொட்களும் தடையின்றி பொது மற்றும் தனியார் கடைகள் வழியாக கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.

2. 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கவேண்டும்.

கொரோனா வைரஸ் முதலில் எங்கு தாக்குகிறது? இரண்டு செல் வகைகளை கைகாட்டும் புது ஆய்வு

நம்மிடம் என்ன உள்ளது?

ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், ரூ.65 ஆயிரம் கோடி தேவைப்படும். இதை வைத்து அந்த குடும்பங்கள் மே இறுதி வரை ஊரடங்கை சமாளித்து விடும். ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ உணவு தானியமும், பருப்பு வகைகள், உப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றிற்கு ஒரு சிறிய தொகையும் கொடுத்தாலே 65 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படும். இரண்டு முறைகளையுமே இந்தியா கையாண்டு பார்க்கலாம். இந்தியா ஏழைகளுக்கு செய்வதற்கு கடன்பட்டுள்ளது. மீண்டும் ரபி பருவ பயிர்கள் தானிய கிடங்குகளை நிரம்பும். பல லட்சம் பேர் பசித்திருக்க, பணத்தை சேமித்து, உணவு தானியங்களை பதுக்கி வைத்திருப்பது மூர்க்கத்தனமான செயல்.

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க – Hoarding government, starving people

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்.

தமிழில்: R பிரியதர்சினி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: P chidambaram opinion on food grains stock coronavirus

Next Story
வரலாற்றுத் தருணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express