ப.சிதம்பரம், கட்டுரையாளர்.
ஒருவர் கைது செய்யப்படுகிறார் என்றால் அவர் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என்றால், அவர் குற்றவாளியாக இருக்க வேண்டும். அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டால், (இது காவல்நிலைய காவலில் இருந்து வேறுபட்டது) அவர் சிறை செல்ல தகுந்த குற்றம் செய்தவராயிருக்கிறார் என்று அர்த்தம்.
மேலே உள்ள ஒவ்வொரு முடிவும் தவறு என்று சிலர் கூறுவார்கள். சுதந்திரம் என்று அழைக்கப்படும் தனிமனிதனுக்கு உட்பட்ட மீறமுடியாத உரிமையை நோக்கிய நமது உணர்வின்மை மற்றும் சுதந்திரம் எவ்வாறு படிப்படியாக அழிக்கப்பட்டது என்பது பற்றிய நமது அறியாமையின் காரணமே அமெரிக்காவில் உள்ள மினிசோட்டாவில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவருக்கு நடந்ததற்கும் அல்லது இந்தியாவில், தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்ததற்கும் காரணமாகிறது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் வழக்கு இந்தியாவில், காவலில் இருக்கும்போது ஏற்பட்ட முதலாவது துன்புறுத்தல் மரணம் கிடையாது. 1996ல் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தானாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்தனர். அது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிகே பாசு மற்றும் உத்ரபிரதேசத்தைச் சேர்ந்த ஏ.கே.ஜோரி என்பவரின் கடிதங்களின் அடிப்படையில் போடப்பட்டது. அடிக்கடி ஏற்படும் காவல் சித்ரவதை நிகழ்வுகள் குறித்து, 1996ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி (டிகே பாசு, மேற்குவங்க மாநிலம் 1997 1 எஸ்சிசி 436) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பு அதிக முறை உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக 24 ஆண்டுகள் கழித்தும் எதுவும் மாறவில்லை.
அதிக எண்ணிக்கையிலான போலீசார்
நாட்டில் உள்ள சராசரி மக்களுக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை இருக்கும். அது போலீசார், வக்கீல், குற்றவியல் நடுவர், நீதிபதி அல்லது மருத்துவர் போன்றோர் சட்டப்படியே நடப்பார்கள் என்பதாகும். அவர்கள் தவறிழைத்தால், அது குற்றமாக கருதப்படாது. பணியின் காரணமாக அவர்கள் சில நேரங்களில் செய்ய வேண்டியதை கூட செய்யாமல் இருப்பதுண்டு. செய்யக்கூடாததை செய்வது உண்டு.
காவலில் வைத்திருக்கும்போது கொடுக்கப்படும் துன்புறுத்தல்களுக்கான விதை காவலில் வைக்கப்பட்டதற்கு பின்னர் தொடங்குவதல்ல அது கைது, ஜாமீன் மறுப்பு, போலீசார் காவலை அனுமதிப்பது மற்றும் நீதிமன்ற காவலில் ஒப்படைப்பது ஆகிய ஒவ்வொரு நிலையிலும் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்ற சட்டம் தெளிவாக உள்ளது. ஆனால், நடைமுறையில்தான் அடிக்கடி தவறுகளும், இதுபோன்ற விபரீதங்களும் நிகழ்கின்றன.
முதலில் கைது குறித்த விளக்கம், டி.கே.பாசு வழக்கில், நாம் கைது செய்யும் அதிகாரத்தை போலீசாரை தவிர, சிபிஜ, ஈடி, சிஐடி, சிஆர்பிஎப், பிஎஸ்எப் என பல்வேறு அமைப்புகளிடமும் கொடுத்துள்ளோம் என நீதிமன்றம் குறிப்பிட்டு காட்டியுள்ளது. அதில் போக்குவரத்து போலீஸ் துறை மற்றும் வருமான வரித்துறையும் அடங்கும். அதில் சிலர் தாங்கள் போலீசார் கிடையாது என்பதால், தங்களை குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஒன்றும் செய்யாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். எடுத்துக்காட்டாக ஈடி, வழக்கு டைரியை பராமரிப்பது தங்கள் கடமை கிடையாது என்பதை உறுதியாக கூறுகிறது. எப்போது கைது நடந்தது என்பது கூட தெரிவிக்கப்படாத மோசமான நிலையில்தான் நாம் இருக்கிறோம். காவல்துறை தேசிய ஆணையத்தின் மூன்றாவது அறிக்கை, 60 சதவீத கைதுகள் தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளையும் நீதிபதிகள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காவல்துறை ஆணையத்தின் பரிந்துரை, அரசியலமைப்புக்கு இணக்கமாக தனிநபர் சுதந்திரம் மற்றும் விடுதலை என்பது அடிப்படை உரிமை என்பதையே கூறுகிறது. இந்த பரிந்துரைகளுக்கு ஒரு நிலையான அந்தஸ்து இதுவரை வழங்கப்படவில்லை.
கைது மற்றும் காவலில் ஒப்படைப்பது
முதல் சீர்திருத்தம் என்பது பல்வேறு அமைப்புகளிடம் உள்ள கைது அதிகாரத்தை நீக்க வேண்டும். இரண்டாவதாக, கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். மூன்றாவதாக, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் அதிகரித்து வரும் கைதுகளை குறைக்க, கைது செய்யும் அதிகாரத்திற்கு எல்லை வகுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், கைது செய்யப்பட்டதற்கு, ஊரடங்கு நாட்களில் குறிபிட்ட நேரத்தைவிட கூடுதலாக 15 நிமிடங்கள் கடையை திறந்து வைத்திருந்ததே காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்த நிலை காவலில் ஒப்படைப்பது. ஒரு குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட நீதிபதி, அந்த காவலுக்கான தேவையிருந்தால், அரிதாக போலீஸ் காவலுக்கு அனுமதி கொடுப்பார். போலீஸ் காவல் முடிவில், (அதிகபட்சமாக 15 நாட்கள்) குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட நீதிபதி கைது செய்யப்பட்ட நபரை வழக்கமாக நீதிமன்ற காவலுக்கு அனுப்புவார். சட்டம் வேறாக உள்ளது. மனுபாய் ராட்டிலால் வழக்கில், (2013, 1 எஸ்சிசி 314) ஒரு குற்றவியல் நடுவர் அவரது அறிவைப்பயன்படுத்தி, போலீஸ் காவலுக்கான முகாந்திரம் உள்ளதா அல்லது நீதிமன்ற காவலில் ஒப்படைப்பதற்கான நியாயம் உள்ளதா அல்லது காவலில் வைக்க வேண்டிய தேவையே இல்லையா, உண்மை நிலை என்ன என்பதை கவனித்து, அதற்கேற்றார்போல் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட நீதிபதி இதை மனதில் கொண்டு செயல்படுவது அரிதானதே.
மூன்றாவது, கைது செய்யப்பட்ட அல்லது காவலில் வைக்கப்பட்ட நபரின் மருத்துவ பரிசோதனை. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மருத்துவரால் முறையாக பரிசோதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு எவ்வாறு உடல்நலன் நன்றாக இருந்தது என்று சான்றளித்திருக்க முடியும்?
எதிபார்ப்புகள் விதிகளாக வேண்டும்
நான்காவது நிலை ஜாமீன். சில குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட நீதிபதிகள், ஜாமீனுக்கான வழக்கறிஞரின் எதிர்ப்பை நிராகரிப்பர். விசாரணையின் கீழ் அல்லது தண்டிக்கப்படாத கைதிகள் சிறைகளில் நிரம்பியிருப்பார்கள். சட்டத்தின் படி அவர்கள் ஜாமீனில் இருக்க வேண்டும். இந்த சட்டம் 1977 ல் நடைபெற்ற பால்சந்த் உச்சநீதிமன்ற வழக்கு 308ல் ஜே கிருஷ்ணா ஐயரால் இயற்றப்பட்டது. அப்போது முதல் ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்பது மேன்மையான கொள்கையானது. எனினும் சில குற்றவியல் நடுவர்கள் அல்லது மாவட்ட நீதிபதிகள் விதியை உபயோகிப்பார்கள். அவர்கள் விதிவிலக்கை மகிழ்ச்சியுடன் உபயோகிப்பார்கள்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கில், சிறிய குற்றமாக கூறப்படுவதால், அவர்களை போலீஸ் மற்றும் நீதிமன்றம் என எந்த காவலிலும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியிருக்கலாம். தனிநபர் சுதந்திரம் குறித்த சட்டங்கள் புத்தகத்தில் ஒன்றாகவும், நடைமுறையில் வேறாகவும் இருப்பது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக நடைமுறைகள் மாறிக்கொண்டு வருகிறது. அண்மையில் சுசிலா அகர்வாலின் அரசியலமைப்பு அமர்வில் (ஜனவரி 29, 2020), குர்பாக்ஷ் சிங் சிபியாவின்(1980 2 எஸ்சிசி 565) மற்றொரு அரசியலமைப்பு அமர்வில் மீண்டும் உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புக்களை தைரியமாக மீறியதுடன், மற்ற சில தீர்ப்புகள் திருப்பதிகரமாக இல்லை என்றும் அறிவித்தது. தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்துவதுதான் நீதி.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாங்கள் இறப்பதற்கு முன்னர் செய்தது அவர்களின் சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கிறது.
இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
தமிழில்: R பிரியதர்சினி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.