Advertisment

காட்சிப் பொருளாகும் பலமும், பலவீனமும் 

ப. சிதம்பரம்: உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய வேதனை, விசாரணை செய்யும் அமைப்புகளுக்கும், தரம் தாழ்ந்து வரும் நீதித்துறைக்கும் (குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன்) நடுவில் சிக்கியுள்ள சட்டத்தின் அவல நிலையை விளக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
opinion

P Chidambaram writes: Might and plight on display

காட்சி  I வலிமை

Advertisment

மாண்புமிகு சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு நீதித்துறையின் சுதந்திரத்தில் அவரும் அவரது அரசாங்கமும் தலையிடவில்லை  என்பதை வலியுறுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறார். ஒரு குடிமகனாகவும், வழக்கறிஞராகவும், நான் அவரை நம்ப விரும்புகிறேன். இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நடத்திய மாநாட்டில் இதை  அவர் வலியுறுத்திய  போது நான்  மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இப்படி பேசிய தனது பேச்சின் நடுவே அச்சுறுத்தும் விதத்தில் அவர் சொன்ன ஒரு விஷயத்தையும் அவர் வார்த்தையிலே சொல்ல விரும்புகிறேன்.  இது எனக்கும்,  தேசத்திற்கும்  மிக முக்கியமானது  என்று நான் உணர்கிறேன். இந்திய நீதித்துறையை  குறைத்து மதிப்பிட ஒரு முயற்சி நடக்கிறது. அதனால்தான், இந்திய நீதித்துறையை அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது என்று தினம் தினம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  ஒருவகையில், இது ஒரு மோசமான  தீய வடிவிலான திட்டம். இந்தியாவிலும், இந்தியாவிற்கு  வெளியிலும் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகள் ஒரே மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதே சூழல் அமைப்பு இந்தியாவிற்குள்ளும் இந்தியாவிற்கு வெளியேயும் செயல்படுகிறது. இந்தியாவை சிதைக்க விரும்பும் இந்த கும்பல் வெல்ல ஒருக்காலும் நாங்கள் விட மாட்டோம். 

அண்மையில்,  டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. சில ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், சில மூத்த வழக்கறிஞர்கள், மற்றும் சிலர்  அங்கே  இருந்தனர். கருத்தரங்கின் தலைப்பு ‘நீதிபதிகள் நியமனத்தில் பொறுப்பேற்பு  என்பது.  ஆனால்,  அன்று நாள் முழுவதும்  நடந்த விவாதம், இந்திய நீதித்துறையை அரசு எப்படிக் கையகப்படுத்துகிறது என்பதுதான். ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலர்,  சில  தன்னார்வலர்கள், இந்திய எதிர்ப்புக் கும்பலின் ஒரு பகுதியினர்  என இவர்கள் எல்லாம் கூடி இந்திய நீதித்துறை எதிர்க்கட்சிகளின் பணியை செய்ய வேண்டி வலியுறுத்தினர்.  நடவடிக்கைகள் எடுக்கப்படும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,  ஆனால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னால் அரசின் விசாரணை அமைப்புகள்  சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கும். கவலைப்படாதீர்கள், யாரும் தப்பிக்க  முடியாது. நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்.

இது ஒரு தெளிவற்ற அறிக்கை.  சட்ட அமைச்சரின் எச்சரிக்கை மூலம் அரசின் முழு அதிகார வலிமை வெளிப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான தனிநபர் மற்றும் அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவது கடும் குற்றமாகும். இவர்களுக்கு எதிராக அரசு முழு வீச்சில்  செயல்படும்.  எதிர்க்கட்சியின் பங்கு குறித்து  எங்களுக்குத் தெரியும். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு நபர் என்ன விலை கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.  இதில் சட்ட நடைமுறையே தண்டனையாகும். மாண்புமிகு சட்டம் மற்றும் நீதி அமைச்சரின் அறிக்கையை பலரும் கண்டித்துள்ளனர்.  எனது பார்வையில், இது அரசின்  மட்டற்ற  அதிகாரத்தின் வெளிப்பாடாகும். அத்துடன்  ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களையும்  வழங்குகிறது.

காட்சி  2: அவலநிலை

மாநிலத்தின்  பல்வேறு துறைகள் மீது கவனம் செலுத்துவோம்.   நீதித்துறையின் உச்சத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அமர்ந்திருக்கிறது, சில சமயங்களில் உலகின் மிக சக்தி வாய்ந்த நீதிமன்றமாக  உச்சநீதி மன்றம் உள்ளது.  மார்ச் 21, 2023 அன்று, சதேந்தர் குமார்,  ஆண்டிலுக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பை வழங்கியது. ஜூலை 2022 இல் 'ஜாமீன்' விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட அதே வழக்கின் முந்தைய தீர்ப்பை குறிப்பிட்டு, நீதிமன்றம்  இந்த தீர்ப்பை வழங்கியது.  அதே  வார்த்தைகளை நான் மேற்கோள் காட்டுகிறேன்:

சதேந்தர் குமார் ஆண்டில் எதிராக சிபிஐ மற்றும் ஏ அன்ஆர் வழக்கில் தீர்ப்பை மீறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஒரு மாதிரியாக எங்கள் முன் வழக்கறிஞர்கள்  வைத்துள்ளனர், ஏறக்குறைய 10 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், பல விதிமீறல்கள் உள்ளன.இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  எங்கள் பார்வையில், உயர் நீதிமன்றங்கள் தங்கள் மேற்பார்வையின் கீழ் உள்ள நீதித்துறை நாட்டின் சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்வது. இது அவர்களின் கடமையாகும். சில சார்பு நீதிபதிகளால் சட்டத்துக்கு முரணான தீர்ப்புகளை அளிக்கப்பட்டால்   இத்தகைய உத்தரவுகள்  நிறுத்தி வைக்கப்பட்டு அத்தகைய தீர்ப்புகளை  வழங்கியவர்களின்  நீதித்துறைப் பணியை திரும்பப் பெறவும், அவர்களை  சில காலத்திற்கு   திறமைகளை மேம்படுத்துவதற்காக நீதித்துறை கல்வி அமைப்பு பயிற்சி அளிக்கப் பட வேண்டும்.  இன்னொரு அம்சம்  இங்கே  சுட்டிக் காட்டப்பட வேண்டும்..  தீர்ப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல. நேர்மையான சட்டப் படியான தீர்ப்பை வழங்க ஆதாரங்களை எடுத்து கொடுப்பது அரசு வழக்கறிஞரின் கடமையும் ஆகும்.

அரசியலமைப்பு சட்டத்தின் கூரான 19 (1) எ  பேச்சு சுதந்திரத்தை அளிக்கிறது. இதே போல அரசியலமைப்பு  சட்டத்தின் 19,21  கூறுகள் தனிமனித உரிமையை உறுதி படுத்துகின்றன. .ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளான இவைகளில்  இருந்து தான் உச்ச நீதிமன்றம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.  இது வேகமாக செயல்பட்டு அரசு சார்பாக செயல்  படும் சார்பு நீதிமன்றங்களுக்கும்  ஜனநாயகத்துக்கு இடையில் சட்டம் படும் பாட்டை கண்டதனால் எனப் புரிகிறது.

காட்சி 3 வலிமையையும் அவலமும்

இந்திய தண்டனையியல் சட்டம் 499, 500 பிரிவுகளின் பி படி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. பாஜக நிர்வாகியால் தொடரப் பட்ட இந்த வழக்கில் அவர் சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்த தண்டனை  விதிக்கப்பட்டது. இந்த வழக்கு  சூரத் நீதிமன்றத்தின் வரம்புக்குள் வராது. அநீதி இழைக்கப்பட்டதாக வக்கீல்கள் கருத்து தெரிவித்து வாதாடினார். இது மிகவும் கடுமையானது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதை ஆராய்ந்து பார்த்தால் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்க விரைவாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்பது புரிய வரும். சட்ட நடவடிக்கைகளின் வலிமையை ஆதரிப்பவர்கள் இந்த அவலத்தை ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியமானது.

தமிழில் :த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment