Advertisment

நடுத்தர வர்க்கத்திற்கு தவறான வழிகாட்டல்: ப. சிதம்பரம்

ஒன்றிய அரசின் உள்நோக்கம் மறைவானதாக இல்லை. அதாவது வருமான வரி செலுத்துவோருக்கு இனி எந்த சலுகையும் அளிக்கக் கூடாது என்பதே அந்த நோக்கம்.

author-image
WebDesk
New Update
நடுத்தர வர்க்கத்திற்கு தவறான வழிகாட்டல்: ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

Advertisment

உழைக்கும் வர்க்கமான நமது நடுத்தர மக்களுக்கு நான் அறிவித்திருக்கும் ஐந்து அறிவிப்புகள் நல்ல பலன் கொடுக்கும் என நமது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். பழைய வரி முறையை விட புதிய வரி முறையே சிறந்தது என்று வருமான வரி செலுத்துவோருக்கு தனது 2023-24 நிதிநிலை அறிக்கையில் சொல்லி மக்களுக்கு இனிப்பான செய்தியாக அரசு அறிவித்துள்ளது.அதே நேரத்தில் நடுத்தர மக்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று நிதியமைச்சர் சொல்ல வில்லை. ஆனால் அவரது அரசே தனது அறிக்கையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பவர்கள் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என்று அறிவித்துள்ளது. அஜய் பூஷன் பாண்டே தலைமையிலான குழுவின் அறிக்கையும் இதை பொருளாதார ரீதியாக நலிவுற்றோர் பிரிவிலேயே சேர்த்துள்ளது. எனவே இவர்களை நாமும் ஏழைகள் என்றே கருதலாம்.

யார் நடுத்தர வகுப்பினர்?

இந்தியாவில் மக்களின் நுகர்வு தொடர்பாக ஆய்வு செய்து வரும் பிரைஸ் என்ற அமைப்பின் ஆய்வுப்படி ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பங்களே நடுத்தர வர்க்கத்தினர். அதன் படி சுமார் 28 கோடி குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்தினர். இது மக்கள் தொகையில் 31 சதவீதமாக இருக்கிறது. ஒரு குடும்பத்துக்கு வேளாண்மை மூலம் மட்டுமே வருமானம் கிடைக்கும். சில குடும்பத்தில் பலர் கூட்டு சேர்ந்து சம்பாதிக்க கூடும். அதில் ஒருவர் கூட வருமான வரி செலுத்தும் அளவிற்கு சம்பாதிக்காமல் இருக்கலாம். வருமான வரித்துறையின் தகவல் படி கடந்த 2017-18ம் நிதியாண்டில் 14754245 பேர் ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெற்றதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் 4508722 பேர் ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இப்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கலாம்.

கணக்கு என்ன சொல்கிறது

எந்த வரி முறை மக்களுக்கு சிறந்தது என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மறுநாளான பிப் 2ம் தேதி பல்வேறு நாளிதழ்கள் விளக்கியிருந்தன. பழைய வரி முறையில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் பெறுபவர்களுக்கு சிறப்பானது என அட்டவணையுடன் விளக்கி இருந்தன. ஆண்டுக்கு 15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு பழைய வரி முறையே சிறந்தது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் ஆண்டுக்கு 35 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு பழைய வரி முறையே சிறந்தது என தி இந்துவும்,, வருடம் 60 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு இதுவே உகந்தது என தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையும் பட்டியலிட்டன. தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை இதை ஆண்டுக்கு 2 கோடி வரையில் கொண்டு சென்றது. மேலும் பல பத்திரிக்கைகளும் இது போன்ற அட்டவணைகளை பிரசுரித்தன. ஆனால் அரசு இது குறித்து எந்த முரண்பாட்டையும் தெரிவிக்க வில்லை.

அகமதாபாத் நகரை சேர்ந்த ஆடிட்டர் தயாரித்த ஒரு விரிவான அட்டவணைக்கு பிறகே இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன். இவரது கணக்கீட்டின் படி ஆண்டு வருவாய்க்கான நிரந்தர கழிவு, 80 சி , 80 டி பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்படும் கழிவு, வீடு கட்ட வாங்கப்பட்ட கடனின் கழிவு என அனைத்தையும் கழித்தால் கூட 30 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு பழைய வரிமுறையே சிறந்தது. ஆண்டு வருமானம் 10 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, அதாவது நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வரைமுறையை விட பழைய வரிமுறையே சிறந்ததாக தெரிகிறது. புதிய வரி முறையில் வரிச்சுமை குறைவாக இருக்கிறது என்ற அரசின் வாதம் தவறாகவே தோன்றுகிறது.

சேமிப்புகளுக்கு என்ன விடை

வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத்துக்காக சேமிப்பது, வருமானத்துக்கு ஏற்றவாறு வரி செலுத்துவது என்பதை வரி செலுத்துபவரின் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். வளரும் நாடுகளில் சேமிப்பு என்பது மக்களிடம் இருக்கிறது. ஏனென்றால் இது மிக அவசியமானது. இதனால் தான் இது ஊக்குவிக்கப் படுகிறது. இந்திய மக்களுக்கு அரசின் சமூக பாதுகாப்பு என்பது அறவே கிடையாது என்பதே உண்மை. இதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக ஒன்றிய அரசுகளை சேமிப்புக்கு பல்வேறு வருமான வரி சலுகைகளை அறிவித்து வந்துள்ளன. அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இந்த சேமிப்பில் இருந்து தான் முதலீட்டை எளிதாக பெற முடிகிறது.

publive-image

மாத ஊதியம் பெறுபவர்கள் எளிதாக சேமித்து விட முடியாது. அவர் தனது தேவைகளுக்காகவும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறார். முக்கியமாக பெரும்பாலான நிறுவனங்களில் சேமிக்கும் அளவுக்கு தேவைக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுவதில்லை. எனவே தான் ஒருவர் கட்டாயமாக சேமிக்க அரசு சில சலுகைகளை தர வேண்டியது உள்ளது. இவை பல்வேறு துறைகள் மூலம் செய்யப் படுகின்றன. அவை தபால் அலுவலக சேமிப்பு, தேசிய சேமிப்பு பத்திரம் , ஆயுள் காப்பு முதலீடு, வீட்டுக் கடன் என பல்வேறு விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் பாஜக அரசு இந்த அடிப்படை சித்தாந்தத்தையே தலைகீழாக மாற்றி விட்டது. சேமிப்பை ஊக்குவிக்காமல் சம்பாதிக்கும் அனைத்தையும் செலவழிக்க வேண்டும் என்கிறது. நான் செலவிடக் கூடாது என்று சொல்லவில்லை. செலவில் சேமிப்பும் இருக்க வேண்டும் என்றே சொல்கிறேன். சேமியுங்கள், செலவும் செய்யுங்கள் என்பதே முறையான ஆலோசனையாக இருக்கும். எதையும் மிச்சம் வைக்காமல் செலவிடுங்கள் என்பது சரியாக இருக்காது.

அகமாதாபாத் ஆடிட்டரின் மாதிரி கணக்கீட்டில் சேமிப்பு, செலுத்தப்படும் வரி, பின்னர் கையில் மிஞ்சும் வருவாய் போன்றவை பழைய வரிமுறையில் எவ்வளவு, புதிய வரைமுறையை எவ்வளவு என்பதை இந்த அட்டவணை விளக்குகிறது.

publive-image

இந்த அட்டவணையின் படி பழைய வரி விகித முறையில் வருமான வரி செலுத்துபவர் குறைவான வரி செலுத்துவார். சேமிப்பும் கையில் மிஞ்சும் வருவாயும் அதிகமாக இருக்கும். ஆனால் புதிய வரி விகிதத்தில் கையில் மிஞ்சும் வருவாய் அதிகமாக இருக்கும். ஆனால் சேமிக்க முடியாது.

ஒன்றிய அரசின் உள்நோக்கம் மறைவானதாக இல்லை. அதாவது வருமான வரி செலுத்துவோருக்கு இனி எந்த சலுகையும் அளிக்கக் கூடாது என்பதே அந்த நோக்கம். வருமான வரி சலுகைகள், சில விலக்குகள் , குறைவான வட்டி விகிதம் போன்றவை சேமிப்பை ஊக்குவிக்கும். செலவுக்கு ஊதியம் கிடைக்கும் உறுதி செய்யும் அணைத்தது சேமிப்புக்கு வருமான வரி விலக்கு கிடையாது என அரசு முடிவெடுத்தால் வருமான வரி விகிதங்களை குறைந்த பட்சம் குறைக்கவாவது செய்ய வேண்டும்.2023-24 நிதிநிலை அறிக்கையின் படி பார்த்தால் வரி விகிதம் என்பது பழைய முறையில் 42.7 ஆகவும், புதிய வரி விகித முறையில் வரிகள் குறைவு என்பது வெறும் ஜம்பம் தான் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக அரசின் முடிவுக்கு ஒரு விதத்தில் நன்றி சொல்ல வேண்டும். அதாவது இந்த வரி விகித முறைகளில் எதையாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற சலுகையையாவது இந்த அரசு வழங்கியுள்ளதே என்று. ஆனாலும் அதுவும் எத்தனை காலத்துக்கு?

தமிழில்: த. வளவன்

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment