scorecardresearch

முக்கியமான கேள்விகள், எச்சரிக்கையான பதில்கள்: ப. சிதம்பரம் 

ராணுவ துறையில் பாதுகாப்பு மூலதனச் செலவினங்களுக்காக உங்களுக்கு ரூ. 500 கோடி தேவை என்பதால், ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் ஊற்று பகுதியில் சீனா நமக்கு சாதகமாக ஏதாவது ஒப்புக்கொண்டதா என்பதை எங்களிடம் கூறுவீர்களா? டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் சந்திப்பில் இருந்து விலக சீனா ஒப்புக்கொண்டுள்ளதா?

முக்கியமான கேள்விகள், எச்சரிக்கையான பதில்கள்: ப. சிதம்பரம் 

ப. சிதம்பரம் 

கடந்த வாரம் ஒரு அசாதாரண நிகழ்வில், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் டிசம்பர் 23, 2022 அன்று ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க எதிர்க்கட்சிகளை விட ஆளும் அரசு முனைப்பாக இருந்தது.  

மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன், மீண்டும் வழக்கத்திற்கு மாறாக – 2022-23 நிதியாண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் மற்றும் ரூ.3,25,756 கோடிக்கான துணை மானியக்கோரிக்கைகள் வழக்கத்துக்கு மாறாகவே விவாதத்துடன் நடந்தன. ரூ. 1,10,180 கோடிக்கான செலவு அனுமதி கோரிக்கை மசோதாவும் தாக்கலானது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் எல்லைச் சாலைகளை அமைப்பதற்கான பாதுகாப்பு மூலதனச் செலவினங்களுக்கான ரூ. 500 கோடியும் இதில் அடங்கியுள்ளது. 

எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் விவாதத்தை ஆரம்பித்தேன். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசிடமிருந்து உருப்படியான பதில்கள் இல்லாத மற்றொரு பயனற்ற விவாதமாக இது இருக்க நான் விரும்பவில்லை. இது தொடர்பான கடந்த கால அனுபவத்தை நான் சுட்டிக்காட்டி , இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மாநிலங்களவையில் நிதி  ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடியுள்ளன. அது உண்மையில் வித்தியாசமாக இருந்தது. அரசு தரப்பில் இருந்து பதில்களும் வந்தன. இது ஆச்சர்யமாக இருந்தது. அனால் அந்த பதில்கள் தெளிவற்றதாகவும், பல்வேறு அர்த்தங்களை தருபவையாகவும் இருந்தன. சில பதில்களை பதில்களாகவே கருத முடியவில்லை. இவற்றை கவனமாக சிந்தித்து பார்த்தால் 2022-23 ஆம் ஆண்டில் வளர்ச்சி மிதமானதாக இருக்கும் என்றும், 2023-24 ஆம் ஆண்டில் பொருளாதாரம் கடுமையான இருக்கும் என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் வெளிப்படுத்திய அச்சத்தை பகுப்பாய்வு செய்யும் விதத்தில் தான் இருந்தன.  
 
எனது கேள்விகளும், மாண்புமிகு நிதியமைச்சரின் பதில்களும்:

  1. பட்ஜெட் ஆவணங்கள் 2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெயரளவு வளர்ச்சி விகிதத்தை 11.1 சதவீதமாக கணித்துள்ளது. பணவீக்க விகிதம் என்னவாக இருக்கும் மற்றும் உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்? பண வீக்க விகிதத்தின் படி பண வீக்க்க விகிதத்துடன் உண்மையான வளர்ச்சி விகிதத்தை கூட்டினால் கிடைப்பது தான் பெயரளவிலான வளர்ச்சி விகிதமாக இருக்கும். இந்த கேள்விக்கு நேரடியான பதில் இல்லை. இதற்குரிய பதில் அளிக்கப் பட வில்லை. சரியாகச் சொல்வதானால், எனது இரண்டாவது கேள்விக்கு, பெயரளவிலான வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கலாம் என்று நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார். ஆனால் திட்டவட்டமாக எதையும் கூறவில்லை. இது திருப்தி அளிக்காத பதில் தான்.
  2. தேவைப்படும் கூடுதல் தொகையான ரூ.3,25,756 கோடியை அரசாங்கம் எவ்வாறு திரட்டும்?

(அ) பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வருவாயை அரசு திரட்டியுள்ளதா?  

(ஆ) அரசு மேலும் கடன் வாங்குமா?;

(இ) பெயரளவிலான வளர்ச்சி விகிதம் 11.1 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறதா ? அது அதிக கடன் வாங்கினாலும், அதிக செலவு செய்தாலும், அது நிதிப் பற்றாக்குறையின் இலக்கான 6.4 சதவீதத்தை அடையுமா ?

(ஈ) இதில் மேலே குறிப்பிட்ட எதுவுமே இல்லையா?

நிதிப்பற்றாக்குறை (நிதியமைச்சகத்தின் இலக்கான 6.4 சதவிகிதத்தை மீறாமல் நிர்வகிக்க நிதியமைச்சர் வலியுறுத்தினார். இந்த நேரத்தில் வரி வசூல் பட்ஜெட் மதிப்பீடுகளை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எளிமையான சொல்வதானால் வரி உள்ளிட்ட இனங்களிலிருந்து ரூ. 3,25,756 கோடி கூடுதல் தொகையை ஈட்டும் என்று அரசாங்கம் நம்புகிறது. அந்த நம்பிக்கையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிக வளர்ச்சி விகிதமும் அரசாங்கத்தை ஒரு உற்சாகமான இடத்தில் வைக்கும். 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் வளர்ச்சி மெதுவாக இருக்கும் பட்சத்தில், இதனை ஒரு எச்சரிக்கையான பதிலாகக் கொள்ளலாம்.

  1. 2013-14 ல், கார்ப்பரேட் வரி வருவாய் மொத்த வரி வருவாயில் 34 சதவீதமாக இருந்தது. 2022-23ல், கார்ப்பரேட் வரி வருவாய், பட்ஜெட் GTR இல் 26 சதவீதம் மட்டுமே இருக்கும். அரசு இப்படி சலுகை அளித்தும் அதன் மதிப்பு தோராயமாக ரூ. 2,50,000 கோடி மட்டுமே. தனியார் கார்ப்பரேட் துறையினர் எதனால் முதலீடுகளை அதிகரிக்க வில்லை?

நிதியமைச்சகம் முதலீட்டின் புள்ளிவிவரங்களை பட்டியலிட்டது (பெரும்பாலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது). நிதி அமைச்சர் தனியார் நிறுவனத் துறையைப் பாராட்டவில்லை. அபெக்ஸ் சேம்பர்ஸில் அவர் உரையாற்றிய போது செய்தது போல் அவர் அவர்களை கண்டுகொள்ளவில்லை. நிதியமைச்சர் காத்திருக்கும் மனநிலையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. தேவை குறைதல், பணவீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், பயன்படுத்தப்படாத திறன் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால், தனியார் துறை காத்திருப்பு நிலையில் உள்ளது. காத்திருப்பு மற்றும் கவனிப்பு இரண்டிலும், இது முதலீட்டு முன்னணியில் அதிருப்தியின் ஆண்டாக இருக்கும்.

  1. வளர்ச்சியின் நான்கு இயந்திரங்களில், அரசாங்க செலவினங்களை தவிர, வேறு எவை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கின்றன?

தனியார் முதலீட்டில் நிதியமைச்சகம் எச்சரிக்கையாக இருந்தது. தனிநபர் நுகர்வையும் நிதியமைச்சர் நம்பிக்கையுடன் பேசவில்லை. ஏற்றுமதி பற்றிய நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்,. ஆனால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். அது ஒரு பதில் இல்லை.

  1. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1991-92 மற்றும் 2003-04 க்கு இடையில் 12 ஆண்டுகளில் இரட்டிப்பானது. 2013-14 ல் 10 ஆண்டுகளில் மீண்டும் இரட்டிப்பானது. உங்கள் ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் உங்கள் அரசாங்கம் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குமா?

இந்த கேள்வியால் நிதி அமைச்சர் தடுமாறினார். அவரால் ஆம் என்று சொல்ல முடியவில்லை, இல்லை என்று சொல்லவும் தயங்கினார். ஜிடிபி யை பொறுத்த வரையில் 200 லட்சம் கோடி என்ற இலக்கை விட அரசு மிகவும் பின்தங்கி விடும் என்பது எனது மதிப்பீடு.

  1. ராணுவ துறையில் பாதுகாப்பு மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 500 கோடி மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் ஊற்றுப் பகுதியில் சீனா நமக்கு சாதகமாக ஏதாவது ஒப்புக்கொண்டதா என்பதை எங்களிடம் கூறுவீர்களா? டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் சந்திப்பில் இருந்து விலக சீனா ஒப்புக்கொண்துள்ளதா…. சாலைகள், பாலங்கள், தகவல் தொடர்புகள், ஹெலிபேடுகள் மற்றும் குடியேற்றங்கள் போன்ற வற்றை பெருமளவில் ஏற்படுத்தியிருப்பதுடன் ஏராளமான ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துக் கொண்டு இருக்கிறதா சீனா? எந்த தரப்பும் நடமாடக் கூட முடியாத பகுதியை சீனா உருவாக்குகிறது என்றால் இந்திய ராணுவத்தினர் அங்கு செல்லவே முடியாதா? பாலியில் சீன ஜனாதிபதி ஜிங் பின்னைச் சந்தித்த போது பிரதமர் மோடி பிரச்சினைகளை எழுப்பினாரா?

சீனா என்பது பேசக்கூடாத வார்த்தை என்பதால் மௌனத்தையே தனது பதிலாக தந்திருக்கிறார் நிதியமைச்சர். அன்புள்ள வாசகர்களே இது தான் இன்றைய பொருளாதாரத்தின் நிலை. இந்திய சீன எல்லையின் நிலைமை. இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதால் என்ன பலன் கிடைக்கும்?

தமிழில்: த. வளவன் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram writes crucial questions cautious answers

Best of Express