Advertisment

2023-24 புத்தாண்டின் முதல் முன் எச்சரிக்கை 

தொடரும் விலைவாசி ஏற்றம் பொருளாதாரச் சிக்கல்களை அதிகரிக்கும். 2023-24 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் இந்த பலவீனங்களை எவ்வாறு சரி செய்வார்? – ப.சிதம்பரம்

author-image
WebDesk
New Update
2023-24 புத்தாண்டின் முதல் முன் எச்சரிக்கை 

P Chidambaram ப.சிதம்பரம் 

Advertisment

2016-17 ஆம் ஆண்டில், தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நிதியாண்டின் தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை (FAE) வெளியிடும் ஆரோக்கியமான நடை முறையை அறிமுகப்படுத்தியது. இந்த மதிப்பீடுகள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் பயனுள்ள உள்ளீடுகளாக இருக்கும். நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுக்கான அறிக்கையை தயாரிக்க மிகவும் உதவிகரமாக இருந்துள்ளன. நிதியாண்டின்  முதல் எட்டு மாதங்களில் கிடைத்த புள்ளிவிபரங்களை தான் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. புதுக்கணக்கு நெறியாளர் மூலம் தொகுக்கப்பட்ட வருவாய் மற்றும் செலவு புள்ளிவிவரங்கள்  நவம்பர் வரை கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை வெளிப்படுத்துகின்றன. நடப்பு ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளையும் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளையும் நிதியமைச்சர் பெறுவதற்கு அவை உதவிகரமாக இருக்கும்.  

நன்மையையும் தீமையும் கலந்தது  

பொருளாதார கணிப்புகள் தவறாக போகலாம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மூன்று அல்லது நான்கு மாதங்கள் என்பது மிக நீண்ட காலம். 2020 மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் பரவும் என்றோ அதன் தாக்கங்கள் குறித்தோ யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள அனைத்து எண்களும் தலைகீழாக மாறி விட்டன. செப்டம்பர் 2008 இல் உலகைத் தாக்கிய சர்வதேச நிதி நெருக்கடி போன்ற ஒரு நிகழ்வு இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை வெகுவாக பாதித்து விட்டன.  

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக ஜனவரி 6 ம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலக புள்ளி விவரங்களிலிருந்து நாம் சில பாடங்களை படித்துக் கொள்ள முடியும். நான் அதைச் செய்வதற்கு முன், ஜனவரி 1, 2023 பத்தியில் (“2023ல் நாம் எடுக்க வேண்டிய பொருளாதார முடிவுகள்”, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)  கட்டுரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். உத்தியோகபூர்வ மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2023-24க்கான கண்ணோட்டத்தை நான் வகுத்துள்ளேன். இப்போது வெளியாகியிருக்கும் முதலாவது முன்கூட்டிய மதிப்பிட்டு அறிக்கையை வாசித்து விட்டு அதில் ஏதும் மாற்றம் தேவைப்படுமா என ஆராய்தலுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.  

சில பிரகாசமான புள்ளி விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.  பெயரளவு GDP (15.4 சதவீதம்) பட்ஜெட் மதிப்பீடுகளை விட (11.1 சதவீதம்) அதிகமாக இருக்கும். அரசுக்கு வருமானம் தரும் இடங்கள்  உற்சாகத்தை தருகின்றன. வருமானம் மிதமானது மற்றும் அரசாங்கத்திற்கு அதிக பணத்தை கொண்டு வரலாம். இதன் விளைவாக, இலக்கு நிதிப் பற்றாக்குறையான 6.4 சதவீதத்தை எட்டுவது எளிதாக இருக்கும். இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது

நுகர்வின் காரணமாக ஏற்பட்ட வளர்ச்சி  

நுகர்வின் காரணமாக  வளர்ச்சி  இருப்பினும்,  இதிலும் பல்வேறு கவலை தரும் அம்சங்கள் உள்ளன.  பணவீக்க விகிதம், வேலையில்லா திண்டாட்டம் இரண்டையும் நிர்வகிப்பதில் உலக அளவில் நெருக்கடிகள் நிச்சயம் உண்டு. வளரும் நாடுகளின் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற எனது கணிப்பை மாற்றும் எதுவும் முன்கூட்டிய புள்ளிவிபரங்கள் இல்லை. 2022-23 ல் வளர்ச்சியைத் தூண்டுவது தனியார் நுகர்வு (ஜிடிபியில் 57.2 சதவீதம்) ஆகும்.

அரசு செய்யும் வளர்ச்சியை தூண்டக் கூடிய காரணிகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அரசாங்கம் செய்யும் செலவுகள் மூலம் வளர்ச்சியை அதிக படுத்தலாம்.  ஆனால் மிகவும் பிரபலமான அரசாங்கச் செலவுகள் (ஜிடிபியின் 10.3 சதவீதம்) முந்தைய இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாக இருக்கும் மற்றும் உலக வர்த்தகத்தில் மந்தநிலையின் கணிப்புகளுக்கு மத்தியில் ஏற்றுமதிகள் (ஜிடிபியில் 22.7 சதவீதம்) சமமாக இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்திருக்கிறது.   .

ஜிடிபியில் 27.4 சதவீதமாக இருக்கும்  நமது  இறக்குமதி மதிப்பு நம்முடைய இன்னொரு கவலை. இது 2020-21ல் 19.1 சதவீதத்திலிருந்தும் 2021-22ல் 23.9 சதவீதத்திலிருந்தும் உயர்ந்துள்ளது.  அதிக ஏற்றுமதி இல்லாமல் அதிக இறக்குமதி நாம் நுகர்வுக்காக இறக்குமதி செய்கிறோம் என்பதைக் குறிக்கிறது. இது ரூபாயின் செலாவணி மதிப்பை குறைத்து நடப்பு கணக்கு பறறாக்குறையை மேலும் அதிகப் படுத்தி நம் நாட்டிலிருந்து அதிக மூலதனம் வெளிநாட்டுக்கு செல்ல வழி  செய்து விடும். 

பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில், இரண்டு கவலைக்குரிய புள்ளிவிவரங்கள்  'சுரங்கம் மற்றும்  குவாரி' மூலமான. (கடந்த ஆண்டை விட 2.4 சதவீதம் வளர்ச்சி) மற்றும் 'உற்பத்தி' (1.6 சதவீதம்). இந்த இரண்டுமே  2021-22 இல் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி விகிதங்களை விட மிகக் குறைவு. 2022-23ல் 'கட்டுமானம்' 9.1 சதவீதமாக வளரும், ஆனால் இது 2021-22ல் பதிவான 11.5 சதவீதத்திலிருந்து சரிவாகும்.முன்கூட்டியே மதிப்பீட்டு புள்ளி விபரங்கள் வெளியான பின்பும் நிதியமைச்சரோ அல்லது பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டிய அமைச்சர்களோ இந்த மோசமான வளர்ச்சி குறித்து விளக்க வில்லை.   

உற்பத்தி குறைவு, அதிகரிக்கும் வேலையின்மை  

இங்கு வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கண்ணோட்டம் உற்சாகம் தருவதாக இல்லை.  விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரிகள், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவை மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள்.  தகவல் தொடர்பு துறையில் மட்டும் 13.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பிற துறைகளில் வேலைவாய்ப்பு சரிந்து கொண்டே வருகிறது. இந்த எண்கள் CMIE இன் வேலையின்மை மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றன (அனைத்து இந்திய வேலையின்மை விகிதம் ஜனவரி 13, 2023 அன்று 8.3 சதவீதமாக இருந்தது). வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை வேகமாக நீக்க முயலாமல் அதை சுட்டிக் காட்டுகிறவர்கள் மீது அவதூறு பரப்புவதிலேயே அரசு அதிக கவனம் செலுத்துகிறது. 

உற்பத்தி தரப்பில் எடுத்துக் கொண்டால் , 2022-23க்கு முன்கூட்டிய புள்ளிவிபரங்கள்  மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. 2021-22 இன் பொருளாதார வளர்ச்சி 2020-21 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆண்டை விட அதிகமாக இருந்தது என்றாலும், 2022-23 இல் அனைத்து புள்ளிவிபரங்களும் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. எடுத்துக்காட்டாக அரிசி, கச்சா எண்ணெய் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்து விட்டது. முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கையாளப்படும் சரக்கு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது.  

ரயில்வே துறையிலும் கிலோமீட்டர் அடிப்படையில்  கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியும் குறைந்து விட்டது. தொழில் துறை குறியீட்டெண் சில துறைகளில் ஒற்றை எண்ணாகவே காணப்படுகிறது. தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) சுரங்கம் (4.0 சதவீதம்), உற்பத்தி (5.0), மின்சாரம் (9.4) மற்றும் உலோக கனிமங்கள் (-6.5) ஆகியவற்றில் குறைந்த வளர்ச்சியே காணப் படுகிறது. விலைவாசி உயர்வு பொருளாதார துயரங்களை மேலும் அதிகப் படுத்துவதாகவே இருக்கிறது. மொத்த விலை குறியீட்டெண்  9.6 சதவீதமாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை 7.6 சதவீதமாகவும், அனைத்துப் பொருட்களின் விலை 12.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன 

2023-24 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் இந்த பலவீனங்களை எவ்வாறு சமாளிக்க போகிறார்?  பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் உலகளாவிய மந்தநிலை ஆகியவற்றால் ஏற்படும் துயரங்களைத் தணிக்கவோ அல்லது பொருளாதாரத்தை உயர்த்தவோ முடியாது. எங்களுக்கு தெளிவான கொள்கைகளும் உறுதியான நடவடிக்கையும் தேவை. பிப்ரவரி 1, 2023 வரை காத்திருப்போம்.

தமிழில் : த. வளவன் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment