Advertisment

மோர்பி - மன்னிப்பும் இல்லை ராஜினாமாவும் இல்லை : ப.சிதம்பரம்

P Chidambaram writes: மோர்பி சம்பவத்திற்கு பிறகு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, யாரும் ராஜினாமா செய்யவில்லை. அரசின் நிர்வாகிகள் சொல்வது போல இந்த விபத்துக்கு யாரையும் பொறுப்பாக்குவதோ அல்லது தண்டனை வழங்குவதோ கூட நடக்க வில்லை. திரு. மோடியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த விபத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் குஜராத் மாநில மக்களுக்கு அவரால் விடுக்கப்படும் செய்தி என்னவாக இருக்கும்? 

author-image
WebDesk
New Update
மோர்பி - மன்னிப்பும் இல்லை ராஜினாமாவும் இல்லை : ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

Advertisment

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர்  கொல்கத்தாவின் விநாயகர் சாலையில் கட்டப்பட்டு வந்த ஒரு மேம்பாலம் கடந்த 2016 மார்ச் மாதம் 31ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 27 பேர் மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் அந்த பாலத்தை கட்டிக் கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் தான். இந்த விபத்தை கேள்விப்பட்ட உடனேயே பிரதமர் மோடி அதிர்ச்சியுடன் தனது துயரத்தை வெளிப்படுத்தினார். விபத்து குறித்து பிரதமர் மோசடி என்ன சொன்னார் என்பதை நாம் நினைவு கூறலாம்.

மேம்பாலம் இடிந்தது கடவுளின் செயல் இல்லை. விபத்துக்கு காரணம் மாநிலத்தை ஆள்வோரின் ஊழல் தான். இந்த மாநிலத்தை ஆள்வது எப்படிப்பட்ட அரசு என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் வேண்டுமானால் இது கடவுளின் செயலாக இருக்கலாம். மோர்பி தொங்குபால சோகத்திற்குப் பிறகு யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. யாரும் ராஜினாமா செய்யவும் முன்வரவில்லை. இன்றைக்கு பாலம் இடிந்தது. நாளை முழு மாநிலமே சேதம் அடையலாம் என்ற கருத்தை தான் கடவுள் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார். இந்த மாநிலத்தை முழு அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக தான் கடவுள் இந்த செய்தியை நிகழ்த்தியிருக்கிறார். இது பிரதமர் அன்று சொன்னது.

கடந்த அக்டோபர் 26, 2022 அன்று , குஜராத்தின் மோர்பியில், மச்சு ஆற்றின் குறுக்கே 143 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் பழுது மற்றும் சீரமைப்புக்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. ஒரு பெரிய நகரத்தில் தொங்கு பாலம் என்பது மிகவும் அரிதான விஷயம். இது பொதுவாக மலைப் பகுதியில் காணப்படும். இந்த தொங்கு பாலம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருந்தது, தீபாவளி பண்டிகை மற்றும் குஜராத்தி புத்தாண்டுடன் இணைந்த ஒரு நாளில் மக்கள் ரசிப்பதற்காக இந்த தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. பாலத்தின் அழகை ரசிப்பதற்காக ஏராளமான மக்கள் வந்தனர். ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் தொங்கு பாலத்தில் திரண்டதால் அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை, பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 குழந்தைகள் உட்பட குறைந்தது 135 க்கும் அதிகமான மக்கள்.

புதைக்கப்பட்ட உண்மைகள்

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் உயிர் பிழைத்தவர்களை மீட்பது மட்டுமே அனைவரின் கவனமுமாக இருந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 100 முஸ்லிம் இளைஞர்கள் உட்பட உள்ளூர் மக்களால் பலர் மீட்கப்பட்டனர். திங்கட்கிழமைக்குப் பிறகு, உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை. இறந்த உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் யாரும் எந்த கேள்வியையும் கேட்க வில்லை. ஆனால் இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் கேள்விகளை என்றென்றும் புதைத்து விட முடியாது.

  1. இந்த பாலத்தின் பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டதா? பெரும்பாலும், இல்லை என்பதே பதில்
  2. ஒப்பந்ததாரரை நியமிப்பது யார் பொறுப்பு?

    பெரும்பாலும், மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் ஒப்புதலுடன் மோர்பி முனிசிபல் நகராட்சி கவுன்சில் ஒப்புதலுடன்.
  3. தொங்கு பாலத்தின் நிலை குறித்த கட்டமைப்பு பொறியியல் அறிக்கை மற்றும் தேவையான பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான வரைபடம் உள்ளதா? இல்லை. இதுவரை, மாநில அரசாங்கமோ, மோர்பி முனிசிபல் கவுன்சிலோ அல்லது காவல்துறையோ ஏதேனும் அறிக்கைகள் அல்லது திட்டங்கள் இருந்தால் அவற்றை வெளியிடவில்லை.
  4. ஒப்பந்ததாரர் பால சீரமைப்பு பணியை மேற்கொள்ள தகுதியுள்ளவரா? இல்லை. ஒப்பந்ததாரர் ஓரேவா என்று அழைக்கப்படும் கடிகார தயாரிப்பாளராக இருந்தார். மோர்பி நகரம் கடிகாரங்களுக்கு பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தை சீரமைக்க வந்தவர் பாலங்களை பழுதுபார்ப்பதற்கான தொழில்நுட்ப தகுதிகளோ, அனுபவமோ இல்லாதவர். அவர் இந்த வேலையை தேவ் பிரகாஷ் பேப்ரிகேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு துணை ஒப்பந்த பணியாக கொடுத்திருக்கிறார்.
  5. பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் உண்மையில் மேற்கொள்ளப்பட்டதா?  இல்லை. உள்ளூர் நீதிமன்ற விசாரணை முன்வைத்த பூர்வாங்க ஆதாரங்களின்படி, துருப்பிடித்த கேபிள்கள் பாலீஷ் செய்யப்பட்டு வர்ணம் மட்டுமே பூசப்பட்டன. கேபிள்கள் மாற்றப்படவில்லை.மேலும் தரைத்தளம் பெயர்த்தெடுக்கப் பட்டு அலுமினிய தகடுகள் மட்டுமே பதித்துள்ளனர்.
  6. பாலத்தை மீண்டும் பொதுமக்களுக்கு திறக்க உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டதா? நகராட்சி அதிகாரிகளும் காவல்துறையும் மீண்டும் திறப்பது பற்றியோ அல்லது அனுமதி வழங்குவது குறித்தோ சொல்லப்படவில்லை. அதிகாரிகள். பாலத்தை பழுது செய்த நிறுவனம் எந்த தகுதி சான்றிதழையும் யாரிடமிருந்தும் பெறவில்லை.
  1. இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் என்ன? பெரும்பாலும், பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் செலவை ஓரேவா நிறுவனம் ஏற்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு பாலத்தை பார்வையிடுபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் உரிமையை பதிலுக்கு பெற்றுக் கொள்ளும். இதில் நகராட்சியோ, மாநில அரசோ தலையிடாது.

கடவுளின் செய்தி

கொல்கத்தா மேம்பால விபத்தும், மோர்பி தொங்குபால விபத்தும் பல விதங்களில் ஒத்துப் போகின்றன. கொல்கத்தா சோகத்தில், 16 பேர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது கொலை அல்லாத குற்றமாக பதிவு செய்யப் பட்டு பிறகு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டனர். அவர்கள் ஒப்பந்தக்காரர்களாலும், துணை ஒப்பந்தக் காரர்களும் தான். இந்த வழக்கில் 3,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மேலும் நூறு பக்கங்கள் சேர்க்கப் பட திட்டமிடப் பட்டது. இந்த திட்டத்துக்கு பொறியியல் வரைபடங்கள் எந்த ஒரு அமைப்பாலும் சரிபார்க்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. கட்டுமானத்துக்கு தரமற்ற உருக்கு தெரிந்தே பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர பயன்படுத்தப்பட்ட நட்ஸ், போல்ட் மற்றும் மணல் ஆகியவை தரமற்றவை என்றும் சொல்லப் பட்டது. . ஊழலின் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக ஊடகங்கள் குற்றம் சாட்டின. பாலம் எப்படி கட்டப் படுகிறது என்று யாரும் மேற்பார்வையிடவும் இல்லை. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.

மோர்பி பாலம் விபத்தில் சிக்கிய பிறகு அதில் நேரடியாகவும், முக்கியமாகவும் தொடர்பில்லாத சிலர் கைது நடவடிக்கைகளுக்கு ஆளானார்கள்.இதன் ஒப்பந்தக்காரரோ, துணை ஒப்பந்தக்காரரோ கைது செய்யப்பட வில்லை. இடிந்து விழுந்தது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும் என்பது பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காகவும், எதிர்காலத்திற்கான பாடங்களை கற்றுக்கொள்வதற்காகவும் பயன்படும். வழக்கம்போல பிரதமர் இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தார். .மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் சொன்னார். பிரதமர் வருகிறார் என்பதற்காக அந்த மருத்துவமனைக்கு இரவோடு இரவாக வர்ணம் பூசி இருக்கின்றனர்.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளன. விபத்து குறித்து வழக்கமான விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. விபத்துக்கு யார் காரணம் என்ற கேள்விக்கும் மௌனமே பதிலாக வருகிறது. விபத்துக்கு பிறகு அரசின் சார்பில் பொது மக்களிடம் மன்னிப்பு கோரப் படவில்லை.யாரும் தார்மீக பொறுப்பு கூட ஏற்க வில்லை. இந்த விபத்துக்கு யாரையும் பொறுப்பாக்குவதோ, அவருக்கு தண்டனை வாங்குவதோ கூட அரசால் முடியவில்லை.

 

இந்திய அரசியல் நிர்வாக அமைப்பில் பொறுப்பு, அதாவது எந்த தவறுக்கும்,தோல்விக்கும் யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கே பதில் இல்லை. விபத்துக்கு பிறகு அரசு சார்பிலோ, மக்கள் சார்பிலோ யாருமே மன்னிப்பு கேட்கவில்லை. யாரும் ராஜினாமா செய்ய முன்வரவில்லை. அரசின் நிர்வாகிகள் சொல்வது போல இந்த விபத்துக்கு யாரையும் பொறுப்பாக்குவதோ அல்லது தண்டனை வழங்குவதோ கூட நடக்க வில்லை. திரு. மோடியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த விபத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் குஜராத் மாநில மக்களுக்கு அவரால் விடுக்கப்படும் செய்தி என்னவாக இருக்கும்? 

தமிழில் : த. வளவன் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment