scorecardresearch

வேலைவாய்ப்புகளை கண்டறிவோம்

இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு  2,00,000  மகப்பேறு  மருத்துவ நிபுணர்கள் தேவை. ஆனால் நம்மிடம் எங்களிடம் 50,000க்கும் குறைவானவர்கள் உள்ளனர். இவர்களிலும்  பாதிப்  பேர் மகப்பேறு மருத்துவம் செய்வதில்லை. அத்தோடு நமக்கு  2,00,000 மயக்கவியல்  மருதத்துவ  நிபுணர்கள் தேவை. ஆனால் நம்மிடம்  50,000க்கும் குறைவான  மயக்கவியல் நிபுணர்களே இருக்கின்றனர். 

P Chidambaram writes union budget 2022 jobs unemployment in India

union budget 2022 jobs unemployment in India : வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த சிந்தனை  மத்திய அரசின் சுகாதார அமைச்சத்துக்கோ, நிதி அமைச்சகத்துக்கோ இல்லை.சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் 2022-23 பட்ஜெட் உரை 90 நிமிடங்களுக்கு நீள்கிறது. 157 பத்திகளை அடக்கிய இந்த உரையில் வேலை, வேலை வாய்ப்பு  குறித்த வார்த்தை வெறும் 3  இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்கு பதிவு செய்திருப்போர்  குறித்த ஒரு செய்தி என்  கவனத்தை கவர்ந்தது.  இதில் பதிவு செய்திருப்போர்  குறித்த எண்ணிக்கை கவலை தருகிறது. தமிழ்நாடு உத்தர பிரதேசமோ அல்லது பீகாரோ இல்லை.  அவை  தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்கள். தமிழக மக்கள்  போல அந்த மாநில மக்களும் வேலை வாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களை நோக்கி படையெடுத்தால் என்னவாகும் என நினைத்தாலே மனம் பதறுகிறது. 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்போர் பட்டியல்


நாம் அறிந்திராத வேலை வாய்ப்புகள் 

வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த எந்த புரிதலும் இல்லை. அவை  சாதாரண கண்களுக்கு தெரியாத வகையில்  மறைந்து கிடக்கின்றன.  கடந்த ஆண்டு  மார்ச் 31, 2021  மாதம் வரை மத்திய அரசில் 8,72,243 காலியிடங்கள் இருந்தன. இதில்  அரசு 78,264 காலியிடங்களை நிரப்பியது.  அதே நேரத்தில் இன்னும் கிட்டத்தட்ட 8 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எங்கும் வேலை வாய்ப்புகள் நிரம்பிக் கிடக்கின்றன.  ஆனால் நாம் தான் அவற்றை பெற எந்த முயற்சியும் செய்யவில்லை. சமீபத்தில் இதயம் மற்றும் நெஞ்சக நோய் நிபுணர் டாக்டர். தேவி ஷெட்டியின்  வீடியோ பதிவை கேட்டேன். இவர் நாராயணா மருத்துவமனைகளை நிறுவியவர். அவரது பேச்சிலிருந்து  சில பகுதிகளை இப்போது பார்க்கலாம். 

நம்மிடம்  இளங்கலை  மற்றும் முதுகலை  மருத்துவம்  படிப்பதற்கான இடங்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. நாம்  கரீபியன் பகுதிக்கு (உதாரணம்:  கியூபா, ஜமைக்கா, பஹாமாஸ், ஹைட்டி, டிரினிடாட் மற்றும் டொபாகோ பகுதிகள் )  சென்றால் அமெரிக்காவில்  டாக்டர்களாக பணி புரியக் கூடிய  தரமான மருத்துவக் கல்வியை  தரும் 35 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. தருகின்றன. இந்த மருத்துவ கல்லூரிகள் சுமார்  50,000 சதுர அடியில் வாடகை அடிப்படையில் பெரிய  வியாபார வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன.  இவை அற்புதமான மருத்துவர்களை  உருவாக்குகின்றன. அதே நேரத்தில் நாம் சுமார்  400 கோடி ரூபாய் செலவு செய்து  ஒரு மருத்துவ கல்லூரிக்கான கட்டிடங்களை உருவாக்கும் நிலையில் இருக்கிறோம். இது அபத்தமானது.

மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 140 ஆசிரியர்கள் தேவையில்லை. 140 ஆசிரியர்கள் 1000 மாணவர்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரியை வழி நடத்தலாம். அதாவது  உலகம் முழுவதும் மாறினாலும் நம்மால் மாற இயலவில்லை. 

மருத்துவக் கல்வியை உயர்தட்டு மக்களுக்கான கல்வியாக நாம் மாற்றி விட்டோம். இன்று, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் தொய்வு உள்ளது. இது  மிகப்பெரிய  சமுதாய மாற்றங்களையம் வித்தியாசமான விளைவுகளையும் மக்கள் மனதில்  ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த மருத்துவர்கள் சாதாரண குடும்ப பின்னணியுடன்  படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.   இதன் காரணம் இவர்களுக்கு அவர்களின் வயிற்றில் தான் பசி இருக்கிறது.  கொழுந்து விட்டு எரியும் பசி. அதனால் தான்  24 மணி நேரம் கூட வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள்  பசியுடன் பிறந்தவர்கள்.  எப்படியும் முன்னேற வேண்டும் என்ற  நோக்கத்துடன் மருத்துவ துறையின் அடிப்படை விதிகளை மாற்ற துடிப்பவர்கள். 

ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ஏன் பிரசவத்தின்போது இறக்க வேண்டும்? ஏன் 3,00,000 குழந்தைகள் பிறந்தவுடன்  இறக்கிறார்கள். 1.2 மில்லியன் குழந்தைகள் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே ஏன் இறக்கிறார்கள்?  இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு  2,00,000  மகப்பேறு  மருத்துவ நிபுணர்கள் தேவை. ஆனால் நம்மிடம் எங்களிடம் 50,000க்கும் குறைவானவர்கள் உள்ளனர். இவர்களிலும்  பாதிப்  பேர் மகப்பேறு மருத்துவம் செய்வதில்லை. அத்தோடு நமக்கு  2,00,000 மயக்கவியல்  மருதத்துவ  நிபுணர்கள் தேவை. ஆனால் நம்மிடம்  50,000க்கும் குறைவான  மயக்கவியல் நிபுணர்களே இருக்கின்றனர். 

குழந்தைகளை பராமரிக்க 2,00,000 குழந்தைகள்  மருத்துவர்கள் தேவை,. ஆனால் நம்மிடம்  50,000க்கும் குறைவானவர்களே  உள்ளனர். நமக்கு  குறைந்தது 1,50,000 கதிரியக்க வல்லுநர்கள்  தேவை .நம்  நாட்டிற்கு  கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு தேவையில்லை. அதே நேரத்தில் மருத்துவம், நர்சிங் மற்றும் துணை மருத்துவக் கல்வி கல்லூரிகள் அதிகப் படியான எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும் . 


சிக்கனமான அரசாங்கம் 

டாக்டர் ஷெட்டியின் கூற்றுப்படி, ஒரு சிறிய முயற்சியால், சுகாதாரத் துறையில் மட்டும் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படலாம். கல்வி, நகர்ப்புற மேம்பாடு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகள், வனவியல், கால்நடை வளர்ப்பு, விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற மற்ற துறைகளிலும் இதே முறையை பயன்படுத்தி  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.  இதன் மூலம்  மேலும் பல லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அரசாங்கங்கம்  பயந்த நிலையில்  ஒரு வித மருட்சியான ஆட்சி  நடத்துகிறது.  தமக்கு தேவையான வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் கூட அஞ்சும் நிலை இருக்கிறது.  சிறிய நிர்வாகத்தை சிறந்த நிர்வாகமாக பார்க்கும் நிலை உள்ளது. இந்த மாய, மந்திர வலையில் அரசு கட்டுண்டு கிடக்கிறது.  இதில் அறிவுப் பஞ்சமும்  இருக்கிறது. டாக்டர். ஷெட்டியின் கூற்றுப் படி  கோடிக்கணக்கான பணம் செலவழித்து நினைவுச்சின்னங்களை கட்டும் நாம்,  நமது தேவைக்கேற்ப குறைந்த செலவில் தரமான மருத்துவ கல்லூரிகள்  கட்ட தவறி விட்டதன் விளைவே மருத்துவ சேவை  பற்றாக்குறை.  இதனால் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் தமது இன்னுயிரை இழக்க நேரிடுகிறது. டாக்டர். ஷெட்டி,  அரசின் கஞ்சத்தனம், தேவைக்கு செலவு செய்யமுடியாத நிலை, தவறான  அணுகுமுறையுடன் முறையற்ற செலவினங்கள்  போன்றவற்றையும்  சுட்டிக் காட்டுகிறார். நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைய ஒரே வழி முந்தைய அணுகுமுறையை கைவிட்டுவிட்டு காலத்துக்கேற்ப மாறி விடுவது தான்.  டாக்டர், ஷெட்டியின் கூற்றுப்படி  50,000 சதுர அடியில் ஒரு வர்த்தக வளாகம்  என்பது ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க போதுமானதே. இந்த துணிச்சல் நமக்கு வர வேண்டும்.

சுயசார்புடன் வேலை வாய்ப்புகள்    

துணிச்சலான நடைமுறைகளை பின்பற்றுபவர்களை குறை சொல்வதே வழக்கமாக  போய்விட்டது. ஆனால்  அவர்கள் புதிய அணுகுமுறையுடன் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள். Gottlieb Daimler, Henry Ford, Kenjiro Takayanagi, Sam Walton, John Mitchell & Martin Cooper ( Motorola ), Steve Jobs, Jeff Bezos, Mark Zuckerberg, Elon Musk  போன்ற வெளிநாட்டினர் குறித்து சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.  இவர்களது  புதுமையான  முயற்சிகளால் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாயின. அதற்கு முன்னாள்  இத்தகைய வேலை வாய்ப்புகள் குறித்து யாரும் சிந்தித்தது இல்லை. மற்றும் பல லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கிய அவர்களின்  முயற்சிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இதற்கு முன்னாள் இத்தகைய வேலை வாய்ப்புகள் ஆரியப் படவில்லை.  
இந்தியாவின் மிக முக்கியமான தேவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே. நான் குறிப்பிடும் துறைகள்  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்லவை.  ஆசிரியர்கள், நூலகர்கள், கலை மற்றும் கைவினை ஆசிரியர்கள்,  பயிற்சியாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள், நகரத்தை அமைப்பதில்  திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள், வனக் காவலர்கள், மீனவர்கள், கால்நடை மருத்துவர்கள், பால் உற்பத்தியாளர்கள், கோழிப் பண்ணையாளர்கள் என நான் மேலே குறிப்பிட்ட துறைகள்  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை  உருவாக்கும் திறன் கொண்டவை. ஒரு முறை ஒரு வேலை வாய்ப்பு உருவாகிவிட்டால் அதுவே தொடர்வினை போல அது தொடர்பான மறைமுக வேலைகளை உருவாக்கும். இதனால் அரசுக்கு வருவாய் பெருகி செல்வம் குவியும்.  வரி வருவாய் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படும். அறக்கொடைகள் வளர்வதுடன் கலை இலக்கிய  ஆர்வம் பெருகும். இப்படி பலவிதமான நன்மைகள் இதில் இருக்கின்றன.  


வேலைவாய்ப்பு குறித்து இப்போது யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை. முக்கியமாக மத்திய சுகாதாரத்துறை அறவே கவலைப்படுவதாக இல்லை. இந்த அலுவலகத்துக்கு வெளியில் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மோடி அரசின்  2022-23 பட்ஜெட்டை தயாரித்த நிதியமைச்சகம் கூட இது குறித்து சிரத்தை எடுக்கவில்லை.  சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் 2022-23 பட்ஜெட் உரை 90 நிமிடங்களுக்கு நீள்கிறது. 157 பத்திகளை அடக்கிய இந்த உரையில் வேலைவாய்ப்பு  என்ற வார்த்தை வெறும் 3  இடங்களில் மட்டுமே  வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. 

தமிழில் த. வளவன் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram writes union budget 2022 jobs unemployment in india