இக்கட்டுரையின் ஆசிரியர் குரு பிரகாஷ் பாட்னா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் ஆலோசகராகவும் உள்ளார்.
நாடு அதன் மிக முக்கியமான இரண்டு அதிகாரத்துவங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை இழந்தது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி என் சேஷனைப் பற்றி நிறைய எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டன, ஆனால் அவருக்கு இணையான அதிகாரியான பி எஸ் கிருஷ்ணன் காலமானதைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை. கிருஷ்ணன், அரசாங்கத்தின் கட்டமைப்பை உருவாக்கும் கருவியாகவும், தலித் மற்றும் பழங்குடி சமூகங்கள் எளிதாக அணுகக் கூடியவராகவும் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது நீங்கா பங்களிப்புகள் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் வாழ்க்கையை தொட்டுள்ளன. தேசிய பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கிய 65 வது அரசியலமைப்பு திருத்தம், மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி.க்களுக்கு தனித்தனி நிதி ஒதுக்கீடு போன்ற சிறப்பு கூறு திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்கு அவர் நினைவுகூரப்படுவார்.
2006 ஆம் ஆண்டில் புது டெல்லியில் உள்ள, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் முதல் அம்பேத்கர் நினைவு சொற்பொழிவை நிகழ்த்தியபோது, அவர் பட்டியல் சாதியினரின் வளர்ச்சி குறித்த செயற்குழுவின் கூற்றுகளை மேற்கோள் காட்டி, "ஒரு நாட்டின் எந்தவொரு அமைப்பும் இவ்வளவு காலத்திற்கு இவ்வளவு பங்களிப்பு செய்திருப்பது அரிது. இந்திய சமூகம் பட்டியல் சாதியினருக்கு கடன்பட்டிருக்கிறது". என்றார்.
அவரைப் பொறுத்தவரை, சமூக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கு என்பது, கிருஷ்ணனின் கூற்றுப்படி "இந்தியாவின் நாகரிக தவறு" ஆகும். இருப்பினும், அவர் ஒரு புரட்சியை அரிதாகவே ஆதரித்தார். தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புள்ள அரசியலமைப்பாளராக இருந்தார், ஆலோசனை மற்றும் விவாதத்தின் மூலம் ஒருமித்த கட்டமைப்பின் சக்தியை நம்பினார். அம்பேத்கர், பெரியார், காந்தி முதல் நாராயண குரு, சுவாமி விவேகானந்தர் வரையிலான சிந்தனையாளர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். செயல்பாடுகள் மற்றும் கல்வித்துறை இரண்டிலும் அவரது அனுபவத்தின் வளம் என்பது சமூகத்திற்குள்ளும் வெளியேயும் இருப்பவர்களிடம் கொண்ட அளவிலா தொடர்புகள் மூலம் பெறப்பட்டதாகும்.
தலித் இயக்கத்திற்கு அவர் அளித்த மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று கருத்தியல் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். அவர் தனது பொது வாழ்க்கை முழுவதும், தீவிர தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகியவர்களோடு மேடையை பகிர்ந்து கொண்டார். கிருஷ்ணனைப் பொறுத்தவரை, காரணம் மிகப் பெரியது. வளர்ந்து வரும் பல தலித் ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அவரது வாழ்க்கையிலிருந்து இந்த உத்வேகத்தை பெற முடியும். தலித் செயற்பாட்டாளர்களாக நாம் பெரும்பாலும் கருத்தியல் பிளவுகள் எனும் வலையில் விழுகிறோம். இது சமூகத்தின் நலன்களுக்கு பெரும் கேடு விளைவிப்பதாகும். பெரும்பாலும் அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதிகாரம் கொண்ட பதவிகள் வகிக்கும் மக்களுடன் நாம் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று கிருஷ்ணன் அடிக்கடி சொல்லியிருந்தார்.
சமகால தலித் கதைகளில் உயர் சாதியினரை, குறிப்பாக பிராமணர்களை ஏளனம் செய்வது கிட்டத்தட்ட நாகரீகமாகிவிட்டது. தற்போதுள்ள சமூக ஒழுங்கில் சிக்கல்கள் உள்ளன, அது கட்டாயம் ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். அம்பேத்கர் எப்போதுமே தனது போராட்டமும் எதிர்ப்பும் பிராமணர்களுக்கு எதிராக முன்னெடுத்ததல்ல, மாறாக பிராமணியத்தின் கருத்துகளுக்கே எதிராக இருந்தது. அம்பேத்கர், மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட் மூலம் தனது கல்விக்கு மட்டுமல்லாது, தனது ஆரம்ப கட்ட வேலைவாய்ப்பிற்கும் நிதி உதவி பெற்றார். கிருஷ்ணனும் கேரளாவில் ஒரு உயர் சாதி குடும்பத்தில் பிறந்தவரே. அவரது வாழ்க்கை சமூக ஒருங்கிணைப்புக்கான முன்னெடுப்புக்கு ஒரு சான்றாகும். தலித்துகள் அல்லாதவர்கள் தலித்துகளின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்ததற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. கிருஷ்ணனின் மறைவு நிச்சயமாக அடுத்த தலைமுறை தலித் ஆர்வலர்களுக்கு சமூகத்தின் நலனுக்காக உழைக்க தூண்டுகோலாக இருக்கும்.
இயக்கத்தில் எப்போதும் பிளவுகள் இருக்கும். ஆனால் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ தலித் நலன்களின் ஒரே பாதுகாவலராக உரிமை கோர முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிருஷ்ணனுக்கு உண்மையான அஞ்சலி என்பது, சமூகத்தின் நலன்களுக்காக தலித்துகள் குறித்த விவாதத்தை மேலும் ஆலோசிக்கவும், எதிர்ப்புகள் குறையச் செய்வதுமேயாகும்.