Advertisment

பீகார் பாட புத்தகத்தில் பாகிஸ்தான் சிறுமி!

யுனிசெப் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகள் சந்திக்கும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வினை புகைப்படங்கள் மூலமாக சமூகத்திற்கு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pakistan-girl-booklet-bihar-1

கிருஷ்ண குமார்

Advertisment

பீகாரின் ஜாம்ய் மாவட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக அடிக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார அறிக்கையில் ஒரு சிறிய பிரச்சனை உருவாகியிருக்கின்றது. அந்த அறிக்கையின் முகப்பில் மிக அழகான ஒரு பள்ளி சிறுமியின் உருவம் அது. வெள்ளை நிற துப்பட்டாவும், நீல நிற மேலாடையும் அணிந்து இருக்கும் அக்குழந்தையின் புகைப்படத்தினை குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சபையான யுனிசெப்பின் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, அதை இந்த விழிப்புணர்வு புத்தகத்தில் பிரசுரித்திருக்கின்றார்கள். அதனால் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால், அந்த புகைப்படத்தில் அக்குழந்தை எதையோ வரைந்து கொண்டிருக்கின்றது. ஆனால் குற்றம் கண்டுபிடிக்கவே பிறந்திருக்கும் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் அப்புகைப்படத்தில் அக்குழந்தை வரைந்து கொண்டிருந்தது பாகிஸ்தானின் தேசியக் கொடி என்றும் அக்குழந்தை ஒரு பாகிஸ்தானி என்றும் ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுருக்கின்றார்கள். பீகார் மாநிலத்தில் பெரிதும் அறியப்படாத ஜமாய் மாவட்டத்தில் இதனை ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கின்றார்கள்.

இதனை ஒரு பிரச்சனையாக மாற்ற, இதனைத் தொடர்ந்து ஜமாய் மாவட்ட அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் இது உருவாகியிருக்கின்றது என்று, பீகாரின் முதலமைச்சரான நிதீஷ் குமார் வரை இப்பிரச்சனை சென்றுள்ளது. இப்பிரச்சனைப் பற்றி விசாரிக்கக் கூறி, இந்த விழிப்புணர்வு அறிக்கையில் இருக்கும் புகைப்படம் நீக்கப்படும் வரை யார் கையிலும் சென்று சேரக் கூடாது என்றும் உத்தரவிட்டுருக்கின்றார்கள் அதிகாரிகள். ஜமாய் மாவட்டத்தில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளால் இதனை எப்படி சரி செய்வது என்றும் கூட குழப்பத்தில் இருக்கின்றார்கள்.

சார்க் போன்ற மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இங்கு யாருக்காவது தெரிய வாய்ப்புகள் இருக்கின்றதா என்று தான் முதலில் யோசிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்த இந்தியா சில தீர்மானங்களை முன்னின்று நடத்தியது. சில தீர்மானங்கள் தெற்காசியாவில் இருக்கும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் போன்ற மிக முக்கியமான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக இந்த தெற்காசிய நாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு அதை முறையாக செயல்படுத்தி வருகின்றார்கள். கல்வி மற்றும் அது தொடர்பான மேம்பாட்டிற்காக திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில் தான் டெல்லியில் தெற்காசிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக இந்த விழிப்புணர்வு அறிக்கை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

ஜமாய் பகுதியில் இருந்த காந்தி வழிப் பள்ளியான காதி கிராமில் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆச்சரியா ராமமூர்த்தி மற்றும் வித்யா பெஹன் ஆகியோரை சந்திக்க நேர்ந்த்து. அவர்கள் போன்ற ஆசிரியர்களால் மாணவர்கள் அதிகமான சந்தோசத்துடனும், நிம்மதியுடனும் படித்தார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு முறை அப்படியாக இருந்தது. ஜெயப் பிரகாஷ் நாரயண் மூலமாக உருவாக்கப்பட்ட சம்பூரண கிராந்தி போன்ற திட்டங்களில் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார் திரு. ஆச்சரியா. பின்பு நாடு முழுமைக்குமான கல்வி திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக மத்திய அரசால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். அமைதியே கற்றலின் மூலம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தவர். ஆச்சரியா இன்று உயிரோடு இருந்திருக்கும் பட்சத்தில் நிதீஷிடம் அறிவுரை கூறி இந்த அறிக்கைப் பிரதியினை அரசு விழாவாக எடுத்து மக்கள் மத்தியில் வெளியிடச் சொல்லியிருப்பார்.

ஜாமய் மாவட்ட அதிகாரிகள் கொஞ்சம் பதற்றத்துடன் இருப்பதற்கும் காரணம் இருக்கின்றது. அவர்களை சுற்றியிருக்கும் அரசு எந்திரம் அப்படியாக இருக்கின்றது, எதிரி நாட்டில் இருக்கும் ஒரு மாணவியின் புகைப்படம் அரசு அறிக்கையில் வெளிவந்தால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் அவர்கள் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

யுனிசெப் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகள் சந்திக்கும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வினை புகைப்படங்கள் மூலமாக சமூகத்திற்கு தெரிவித்து வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தியாவின் விழிப்புணர்விற்காக பாகிஸ்தான் மாணவியின் புகைப்படத்தைப் போட்டிருப்பது ஒரு நல்ல முன்னெடுப்பாக நித்தீஷ் குமார் எடுத்துச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 30.05.18 அன்று டெல்லி பல்கலை கழக பேராசிரியர் கிருஷ்ணகுமார் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : நிதியா பாண்டியன்

Nitish Kumar Unicef
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment