The pandemic showed us our collective power: 2020ம் ஆண்டு பெருந்தொற்று தொடங்கியது, கோவிட் 19 காரணமாக முதலாவதாக பாதிக்கப்பட்டவரை நாம் பார்க்கத்தொடங்கினோம். அரசானது நம்மை கோவிட்டுக்கு எதிரான போராளிகள் என்று அழைத்தது. சுகாதார பணியாளர்களுக்கு பூங்கொத்துகள் கொடுத்தோம். அந்த தருணத்தில் நானும் ஒரு போராளியாக உணர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த பெருந்தொற்றானது, நீண்ட நாட்கள் நீடித்த ஒரு உலகப்போருக்குப் பின்னர் மக்கள் இயல்பான நிலைக்கு திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற உணர்வை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. நம் வாழ்க்கை சூழலில் இதற்கு முன்பு நம்மில் யாரும் இதுபோன்ற சூழலை சந்தித்ததில்லை. மீண்டும் இது போன்ற ஒரு சூழலை நாம் சந்திக்கப்போவதும் இல்லை.
ஆனால், இந்த பெருந்தொற்றானது, நம்மை ஒன்றிணைத்திருக்கிறது. ஒரு பேரிடரின்போது சமூக குழுக்கள் எவ்வாறு எழுச்சி பெற்று ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்பதையும் இது எனக்கு வெளிப்படுத்தியது. நமது மருத்துவ சுகாதார வசதிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற படிப்பினையையும் எனக்கு இது கற்றுக் கொடுத்தது. இங்கே நான் பகிர்ந்துள்ள பெரும்பாலான அனுபவங்கள் இரண்டாம் கொரோனா அலை காலகட்டத்தைச் சேர்ந்தவை. நாங்கள் அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினோம். பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். அதிக எண்ணிக்கையிலான மக்களை இதற்கு முன்பு நான் மருத்துவமனைக்கு உள்ளே பார்த்திராத சூழலில் இரண்டாம் அலையின்போது அதிக நோயாளிகளை மருத்துவமனை கொண்டிருந்தது. மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதற்காக காத்திருக்கும் பெரும் கூட்டத்தையும் ஒரு போதும் இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எங்களுடைய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரின் பெற்றோர் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் இதர 6 பேருக்கும் நாங்கள் ஒரே வார்டில் சிகிச்சை அளித்து வந்தோம். நோயாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு தொற்றில் இருந்து குணம் அடைந்ததை நான் காண நேர்ந்தது. வார்டில் உள்ள தன் தாயை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னையும் ஒரு நோயாளியாக அனுமதிக்கும்படி எங்களிடம் கெஞ்சிய ஒரு பாசம் உள்ள மகனையும் நான் பார்த்தேன். தம்முடைய பாட்டியுடன் நாள் முழுவதும் பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டு கோவிட் வார்டில் தங்கியிருந்த ஒரு பெண்ணை நான் பார்க்க(கொரோனா தொற்று முதல் அலையின்போது பெரும்பாலான உறவினர்கள் கொரோனா வார்டுக்குள் நுழையவே தயங்கினார். கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்தபோது அவர்களின் உடலைக்கூட பெற பலர் வரவில்லை) நேர்ந்தது.
ஆக்சிஜன், மருத்துகள் ஏற்பாடுகள் செய்வதற்காக சமூகத்தில் ஒவ்வொருவரும் முன்வந்ததை நான் பார்க்க நேர்ந்தது. குடியிருப்போர் சங்கங்களிலேயே கொரோனா தனிமைப்படுத்தலுக்கான பிரிவையும் மக்கள் உருவாக்கினர். இந்த இடங்களில் தங்கியிருந்த நோயாளிகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்வது குறித்து அறிவுறுத்துவதற்காக பல வாட்ஸ் ஆப் குழுக்களில் நான் தொடர்பில் இருந்தேன்.
சிக்கலான தீர்மானங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நோயாளிகள் மருத்துவமனையின் நுழைவாயிலில் காந்திருந்தபோது, இடம் இல்லாததால் அவர்களை உள்நோயாளிகளாக அனுமதி கொடுக்க முடியாமல் போனது. அவர்களில் சிலர் மிகவும் ஏழைகளாக இருந்தனர். வேறு எங்கும் அவர்களால் செல்ல இயலவில்லை. உள்நோயாளிகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவிற்கு இடையே, என்னுடைய மருத்துவருக்கான உடையை அணியாமல் சாதாரண உடையில் வெளியே சென்று அவர்களில் மோசமான நிலையில் இருந்தவர்களை அனுமதித்தேன். என்னுடைய குடும்பத்தில் உள்ள சில வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க முடியுமா என்று கேட்டனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.
ஒரு நாட்குறிப்பில், வித்தியாசமாக செய்யக்கூடிய விஷயங்களை நான் எழுதினேன். நாம் மீண்டும் அத்தகைய நெருக்கடியில் சிக்கினால் அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான நம் சந்ததியினருக்கான பதிவாக அது இருக்கிறது.
நோயாளிகளை மேலும் மரியாதையுடன் நடத்தினால், மேலும் அவர்கள் வசதியாக இருப்பதை உணர்ந்தால் அந்த சூழலை கையாளுவது நன்றாக இருக்கும். நோயாளிகளின் வசதி என்பது, பெருந்தொற்று காலத்துக்கு முன்பு நாம் நினைத்தது போல இல்லை. பெரும்பாலான நோயாளிகள் ஒரு உறவினருடன் தங்கியிருந்தனர். நேரத்துக்கு எல்லாவற்றையும் கொடுப்பது மட்டும் போதுமானது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடியாமல் இருந்தபோது நோயாளிகள் அச்சமடைந்தனர். இரண்டாவது கொரோனா அலையின் போது, நோயாளிகள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்காக வீடியோ அழைப்பு மையங்களை தொடங்கினோம். வயதானவர்கள் மற்றும் இளம் நோயாளிகளின் உறவினர்கள் சிலரையும் உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் கோவிட்-19 போராளிகள் என்று அரசு சொன்னபோது, அதனை நான் நம்பினேன். நமது நாட்டின் மக்களுக்கு உதவி செய்யும் நமது ராணுவப் படைகளைப் போல நான் செயல்பட வேண்டிய தருணம் என்பதை உணர்ந்தேன். ஆனால், முன் களப்பணியாளர்கள் என்ற வகையில் உங்கள் வாழ்க்கைக்கும் ஆபத்து என்பதும் அதன் பொருளாகும். ஆரம்ப காலகட்டத்தில் தொற்று நோய் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் பல மருத்துவர்கள், செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் தனிப்படுத்தப்பட்ட வார்டுகளில் நுழைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நான் பார்க்க நேர்ந்தது. என்னுடைய குழுவே முன்னணியில் இருந்ததை நான் பார்த்தேன். நேரம் கடந்தும் பணியாற்றினர். நோயாளிகளுக்கு வெறுமனை சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்கள் வசதியாக உணர வேண்டும் என்பதையும் உறுதி செய்தனர். இதுபோன்ற எங்களது எல்லா முயற்சிகளுக்கு இடையேயும் புகார்கள் எழுந்த தருணமும் இருந்தது. அவையெல்லாம் எங்களிடம் ஊக்கக் குறைவை ஏற்படுத்தவில்லை என்று சொன்னால், பொய் சொன்னதாக ஆகி விடும். ஆனால், ஏதேனும் ஒரு நோயாளியிடம் இருந்து ஒரு வாழ்த்து அட்டையோ அல்லது ஊக்கப்படுத்தும் ஒரு செய்தியானது எங்களை முன்னெடுத்து செல்கிறது. நோயாளிகளுக்கு உணவு அளிப்பதன் வாயிலாகவும், உயிரிழந்தோரை எடுத்து செல்வதற்கும் பிறர் உதவினர். இது போன்ற இரக்க குணத்துடன் கூடிய செயல்கள் அந்த மோசமான நிலையைக் கடக்க எங்களுக்கு உதவியது.
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து தாங்கிக் கொண்ட அந்த சிக்கலான தருணத்துக்குப் பிறகு என்னுடைய நாட்டின் அனைத்து மக்களுக்கும் நான் சொல்வது, ஒரு கதாநாயகனாக அழைக்கப்பட வேண்டும் என்பது போன்ற சிந்தனையெல்லாம் இல்லாமல், இரக்ககுணத்துடன் கூடிய இது போன்ற செயல்களில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஒரு போரில் மிக சிலரே கதாநாயகர்கள் இருக்கலாம். ஆனால், ஆனால் எண்ணற்ற பெயர் தெரியாத வீரர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானது.
இந்த பத்தி முதலில் ஜனவரி 28ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Stepping up, together’.என்ற பெயரில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் டெல்லி லோக் நாயக் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவராக உள்ளார்.
-தமிழில் ஆகேறன்