ராஜ்மோகன் காந்தி
பிரிவினைக்கு நேரு மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அந்த வலி நிறைந்த சம்பவத்திற்கு, நேரு மீது பழிபோடுவதற்கு எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை. பிரிவினை மட்டும் நடக்காமல் இருந்தால், இன்றைய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அனைத்து குடிமக்களும், இந்தியாவின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வசிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவைவிட்டு வெளியேறு என்று அழைப்புவிடுத்த சில மாதங்கள் கழித்து, பிரிட்டிஷ் பேரரசின் இந்தியாவைவிட்டு வெளியேறு பிரச்சாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கண்டித்து 1943ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைதியாக இருந்த காந்தி 21 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த மாதத்தில் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கை குறித்து, தன்னை சிறையில் சந்திக்க வந்த, அந்த நேரத்தில் சிறையில் இல்லாத ஒரே காங்கிரஸ் தலைவர் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவைவிட்டு வெளியேறு இயக்கத்தை வெளிப்படையாக மறுத்ததால், அந்த நேரத்தில் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்களின் புனே பேச்சுவார்த்தையில், காந்தி மற்றும் ராஜகோபாலச்சாரி ஆகியோர் பின்னாளில் சிஆர் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். ஒப்பந்தம் என்னவெனில், சுதந்திரத்திற்கான பொதுவான பிரச்சாரத்தில் முஸ்லிம் லீக் கலந்துகொண்டால், பிரிக்கப்படாத இந்தியாவில் வடமேற்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள இடங்களில் சுதந்திரத்திற்கு பின் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதாகும். பொதுவாக்கெடுப்பு பிரிவினைக்கு சாதகமாக இருந்தால், ராணுவம், வணிகம் மற்றும் தொடபுர்கள் குறித்து கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.
விடுதலையான காந்தி, 19 மாதங்களுக்குப்பின்னர், 1944ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 14 முறை, ஜின்னாவை, சிஆர் ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக மும்பையில் சந்தித்தார். அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. அதன் அளவு பெரியதாக இல்லை என்பது ஒரு காரணம். இதில் மேற்கு வங்காளமும், கிழக்கு பஞ்சாப்பும் சேர்க்கப்படவில்லை. போதிய ஆட்சி தலைமை உரிமை இல்லை என்பது இரண்டாவது காரணம். முன்மொழியப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தில், ஆட்சி தலைமை உரிமை குறிபிடப்படவில்லை. மூன்றாவதாக, முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் பாகிஸ்தான் மீதான வாக்குரிமையை வழங்கியது. ஜின்னா முஸ்லிம்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று விரும்பினார். நான்காவதாக, காந்தி பிரிவினைக்காக பொது வாக்கெடுப்பை விரும்பினார். ஆனால், ஜின்னா இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் பிரிட்டிஷ் அரசு பிரித்துத்தரவேண்டும் என்று விரும்பினார்.
இறுதியாக, காந்தி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பிரிக்க ஒப்புக்கொண்டபோதும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு என்பதை ஏற்க மறுத்தார். இதுகுறித்து ஜின்னா குற்றம்சாட்டினார். எனவே காந்தி, தங்கள் இருவருக்கும் வழிகாட்ட அல்லது நடுநிலைவகிக்க மூன்றாவது நபர் அல்லது நபர்களை அழைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார். ஜின்னா அதை ஒப்புக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காந்தி வழங்கிய வேறு எதுவும் அல்லாத பாகிஸ்தான் பகுதியை ஜின்னா பெற்றுக்கொண்டார். அதை எவ்வித ஒப்பந்தமுமின்றி பெற்றுக்கொண்டார். 1947ம் ஆண்டு காந்தி பிரிவினையை ஏற்றுக்கொண்டது சோகமான ஒன்றுதான். ஆனால், காந்தியோ அல்லது காங்கிரசின் மற்ற முக்கிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், ராஜகோபாலச்சாரி, மவுலானா ஆசாத் அல்லது ராஜேந்திர பிரசாத்தோ இந்து மற்றும் முஸ்லிம்கள் அடங்கிய இரண்டு தேசத்தைதான் விரும்பினர்.
ஆனால், சந்தேகமேயின்றி 1947ம் ஆண்டு நடந்தது என்வென்றால், ஒரு இந்து நாடும், ஒரு முஸ்லிம் நாடும் உருவானது. துணைகண்டத்தின் வடமேற்கு மற்றும் கிழக்கில், முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகள் பிரித்து மட்டுமே கொடுக்கப்பட்டது. பின்னாளில் பாகிஸ்தான் முஸ்லிம் நாடாகவே மாறியது. ஆனால், இந்தியாவோ, அனைவருக்குமான நாடாக இருக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமை வழங்கக்கூடிய அரசியலமைப்பு சூழ்ந்த, மதம், இனம், மொழி, ஜாதி, பாலின பாகுபாடற்ற நாடாக இந்திய திகழ்கிறது.
பிரதமர் மோடி பிரிவினைக்கு நேரு மீது குற்றம்சாட்டியுள்ளார். அந்த வலிநிறைந்த சம்பவத்திற்கு, நேரு மீது பழிபோடுவதற்கு எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை. பிரிவினை மட்டும் நடக்காமல் இருந்தால், இன்றைய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அனைத்து குடிமக்களும், இந்தியாவின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வசிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இதை உணர்ந்த பாஜகவின் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, பிப்ரவரி 9ம் தேதி, இந்தியக்குடியுரிமை வழங்கப்பட்டால், பங்களாதேஷின் பாதி மக்கள் தொகை இந்தியாவுக்கு இடம்பெயரும் என்று கூறினார்.
இக்கட்டுரையின் நோக்கம் பிரிவினைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதல்ல. ஆனால், இடம்பெயரும் மக்கள் குறித்து கவனிக்கிறேன். 1940ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு தேசங்கள் கோட்பாடு, 1937லே இந்து மகாசபாவால் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் 1947 பிரிவினை இரண்டு தேசம் கோட்பாட்டை உறுதிசெய்யவில்லை என்பதை நினைவுகூர்ந்து பார்ப்பது என் குறிக்கோள்.
எல்லா சமூகத்திலும் அறியாமை இருக்கிறது. அதனால் தன்னுடையது அல்லாத மற்ற குழுக்கள் பற்றி தவறான எண்ணம் ஏற்படுவது உள்ளது. ஆனால் மற்ற பொருட்களை விட, மனிதனின் வரலாறு, நாம் அனைவரும் ஒரே மரத்தின் கிளைகள் என்பதே உண்மை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
கொரிய திரைப்படம் அமெரிக்காவில் ஆஸ்கார் வெல்லும்போதும், ஆசியாவைச் சேர்ந்தவர்கள், ஜரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பல நாடுகளில் பலம்வாய்ந்த அரசியல் தலைவர்களாக வரும்போதும், அமெரிக்க காங்கிரசில் இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒரு நாள் வெள்ளை மாளிகைக்கு இந்தியரே செல்வார் என்ற நம்பிக்கை கொள்ள முடியும்போது, இரண்டு தேச கோட்பாடு பழமைவாதத்தை கடைபிடிக்கும் பிற்போக்கான சிந்தனையாக இருக்கும்.
முந்தைய காலங்களில், உண்மையில் மக்கள் மற்ற பழங்குடியினர்கள், இனத்தினர், மதத்தினர், அல்லது ஜாதியினர் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் அல்லது மிரட்டுபவர்கள் அல்லது அடிபணிபவர்கள் என்று எண்ணியிருந்தனர். ஆனால் இன்று நமக்கு நன்றாக தெரியும். இந்த இரண்டு தேசங்கள் கோட்பாடு முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். மதத்தின் அடிப்படையில் எந்த சட்டமும், யாரையும் பாரபட்சமாக நடத்தாது என்பதை ஒத்துக்கொள்வது மட்டும் போதாது. குறிப்பிட்ட மதத்தை சார்ந்த, குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வழியை அடைப்பது, வெளிப்படையாக இரண்டு தேச கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாகும். அது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் சமத்துவத்துக்கும் எதிரானது.
இன்று குடிபெயர்ந்தவர்களுக்கு பொருந்துவது, நாளை பல நூறாண்டுகளுக்கு முன்னர் அவர்களின் முன்னோர் இங்கு வாழ்ந்துள்ள, நமது குடிமக்களுக்கே எதிரானதாக அமையும். இறுதியில் அது அண்டை வீட்டாருடன் சண்டையையே ஏற்படுத்தும். அதனால் இதை நாம் அதை ஆதரிக்கக்கூடாது. எந்த ஒரு நிர்பந்தத்தின் காரணமாகவும் அதை ஏற்கக்கூடாது.
இதை எழுதியவர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியர்.
தமிழில்: R.பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.