இரத்தத்திலும் துரோகத்திலும் எழுதப்பட்ட இந்திய ஜனநாயகத்தின் கதை

Jammu and Kashmir Crisis:சமச்சீரற்ற கூட்டாட்சி வாதத்தை நாகாலாந்திற்கு வழங்கும்போது,காஷ்மீருக்கு நம்மால் எப்படி மறுக்க முடியும்?

By: Updated: August 6, 2019, 05:03:50 PM

பிரதாப் பானு மேத்தா

(பிரதாப் பானு மேத்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் கான்ட்ரிபியுட்டிங் எடிட்டர் ஆவார். அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மைய தலைவராகவும் இயங்குகிறார். )

எல்லா குடியரசு நாடுகளும்  அது தன்னை ஜாக்பூட்டாகக் காட்டும் சந்தர்ப்பங்களில் மாட்டுகின்றன . இப்போது காஷ்மீரில் நாம் அந்த தருணத்தையே காண்கிறோம் .ஆனால் இந்த தருணம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அரசியல் அவமதிப்புக்கான ஒரு முன்னோட்டமாகும் . 370 வது பிரிவை பயனற்றதாக மாற்றுவதன் மூலமும், மாநிலத்தை பிளவுபடுத்துவதன் மூலமும் இந்த பாஜக அரசின் உண்மையான தன்மையை நாம் காண்கிறோம். இந்த அரசிற்கு புரியும் ஒரே மொழி அதிகாரம் தான். இது சட்டம், சுதந்திரம் மற்றும் அறநெறி தடைகளை அங்கீகரிக்காத ஒரு அரசாகும் . இந்த அரசு நமது ஜனநாயகத்தையும் அதன் விவாதத்தையும் கேலி செய்கிறது . இதன் உளவியல் கோட்பாடு வெறும் பயமே.

இந்த பெரிய மாற்றத்திற்கு அரசாங்கத்தின் வாதங்கள் நமக்கு பரிட்சயமான ஒன்றே. உதாரணமாக ,சரத்து 35 ஒரு பாரபட்சமான நடைமுறையாகும், சரத்து 370 சட்டப்படி பிரிவினையைத் தான் ஊக்குவிக்கிறது ஒற்றுமையை அல்ல, நமக்கு அடர்த்தியான வரலாறு இருந்தாலும் காஷ்மீரில் நாம் கையாலாத தன்மையாய் உள்ளோம் , காஷ்மீரில் தீவிரமயமாக்குதலை ஒடுக்க வேண்டிய சூழல், காஷ்மீரி பண்டிதர்களுக்குத் தேவையான நீதி, வெறும் பழிவாங்குதலால் மட்டும் அந்நீதியை கொடுக்க முடியாத தன்மை. உலக அரசியல் நமக்கு சாதகமாக உள்ள சூழல் . சீனா விலிருந்து நாம் ஏன், பாடம் கற்றுக் கொள்ள கூடாது?என்ற புலம்பல் , பாகிஸ்தானுக்கும், தாலிபான்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்க இதுவே சரியான நேரம் என்ற மனக் கணக்கு. இந்த காஷ்மீர் விவகாரங்களில் அரசின் வாதங்கள் இவைகளாகவே உள்ளன.

அரசின் வாதங்களில் சில உண்மைகள் இருக்கலாம். சரத்து 370 உண்மையில் காஷ்மீரிகளுக்கு நன்மை பயக்கவில்லை என்பது நடைமுறை எதார்த்தம் தான். இந்த உண்மைக்கான பதிலை தேடும் அரசாங்கம், தீர்வை நடைமுறைப்படுத்திய விதம் ஒரு மனிதாபிமானமற்றதாகவும், மரியாதையற்றதாகவும் உள்ளது.

திட்டத்தின் பரந்த மாற்றங்களைப் பற்றி சிந்தியுங்கள். இதன் மூலம், இந்தியா தனது சொந்த அரசியலமைப்பு வாக்குறுதிகளை மறந்து நிற்கிறது . இந்தியாவில் காஷ்மீருக்கு வெளியே பல சமச்சீரற்ற கூட்டாட்சி ஏற்பாடுகள் உள்ளன. இந்த செயல் அவை அனைத்தையும் செல்லாததாக்குவதற்கான முன்னுதாரணத்தை அமைக்கிறது. சமச்சீரற்ற கூட்டாட்சி வாதத்தை நாகாலாந்திற்கு வழங்கும்போது, காஷ்மீருக்கு நம்மால் எப்படி மறுக்க முடியும்? தற்போதுள்ள எந்தவொரு மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக அறிவிக்க முடியும் என்பதே இதன் உட்பொருள். இந்திய அரசியலமைப்பிற்கும் இந்த உட்பொருள் ரொம்ப புதியது. நாம் வெறுமனே யூனியன் பிரதேசங்களின் ஒரு கலவையாக இருக்கிறோம், மத்திய அரசாங்கம் நினைத்தால் மட்டுமே அவை மாநிலங்களாக இருக்கும்.

ஏற்கனவே தனிமை படுத்தப்பட்ட மக்களுக்கு இது மீண்டும் ஒரு அவமானத்தைத் தரும். இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இருக்கும் இடத்தை ஒரு மாநிலமாக கருதலாமா? என்ற கேள்வியை அம்மாநில மக்களைப் பார்த்து கேட்பது போல் உள்ளது.

அரசாங்கத்தின் இந்த அதிரடி மாற்றம் தாற்காலிகத்தில் ராணுவத்தின் உதவியால் அங்கு சிறு அமைதியை ஏற்படுத்தலாம் . மாற்றம், அமைதி துப்பாக்கியால் இல்லாமல், அந்த மக்களின் வாழ்விலிருந்து பிறக்க வேண்டும்.

இந்த சம்பவங்கள் இந்திய ஜனநாயகத்தின் ஒரு தோல்வியின் குறியீடாகும். இந்த ஜனநாயகம் பெரும்பான்மையினர்க்காக மாற்றப் பட்டுவிட்டது. எல்லாம் அரசியல் வாக்குகளுக்காகத்தான் . இங்கு போராடவும் இடமில்லை. அறப் போராட்டம் நடத்த அரசியல் துணிவும் நமது கட்சிகளுக்கு மனமும் இல்லை.

சமீப காலமாக நாம் கடந்து வந்த வார்த்தைகளை யோசித்து பாருங்கள்.. UAPA சட்டம் , அயோத்யா விவகாரம். இந்த வரிசைகளில் தான் நம்மால் காஷ்மீர் பிரச்சனையை பார்க்க முடிகிறது. இந்த அடுக்கான சம்பவங்கள் நம்மை பயம் கொள்ள வைக்கின்றன.

இதில் மிகவும் கவலைப்படவேண்டிய அம்சம் என்னவென்றால் நமது வாழ்க்கை முறையும் இந்த அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்துகிறது . இன்று தேசியவாதத்தில் நமக்கு வந்துள்ள நாட்டம் தான் இங்கு நடக்கும் எல்ல பிரச்சனைகளுக்கும் ஒரு மூலக் காரணம்.

காஷ்மீரை இந்தியமயமாக்கப் போவதாக பாஜக கருதுகிறது. ஆனால், அதற்கு பதிலாக, நாம் பார்ப்பது இந்தியாவை காஷ்மீர் மயமாக்கலைதான். இந்தியாவின் ஜனநாயகம் இரத்தத்திலும் , தூரோகத்தாலும் எழுதப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

Web Title:Pratab bhanu mehta opinion about jammu and kashmir

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X