Advertisment

குடியரசு தலைவர் தேர்தல்; நம் சமகாலத்தில் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அடுத்ததாக யார் இருப்பார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடரும் நிலையில், இன்றைக்கு குடியரசு நாட்டுக்கு எப்படிப்பட்ட குடியரசுத்தலைவர் தேவை?

author-image
WebDesk
New Update
குடியரசு தலைவர் தேர்தல்; நம் சமகாலத்தில் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்

Neerja Chowdhury writes | Presidential Poll: Choosing a president for our time: புதிதாக பதவி ஏற்க உள்ள குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

Advertisment

எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக போட்டியிடுவதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் இருக்க விரும்புவதாக கூறியது - தங்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவதில் ஆளும் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். பவாரின் அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற அவரது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளைக் கருத்தில் கொண்டு, பா.ஜ.க அல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெற சிறந்தவராக இருந்தார். தான் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ள அவர், இப்போது குடியரசு தேர்தலில் தோல்வியடையும் அபாயத்தை விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்: P Chidambaram writes: பாஜக.. நவீன கிராமபோன் நிறுவனம்!

தேசிய ஜனநாயக க் கூட்டணி 48 சதவிகித வாக்குகளைக் கொண்டுள்ளது.  மீதி 52 சதவிகித வாக்குகள் எதிர்கட்சி வரிசையில் பிளவுபட்டுள்ளது. 15ம் தேதியன்று மம்தா பானர்ஜி ஒருமித்த கருத்தை உருவாக்க அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டத்தில் பா.ஜ.க அல்லாத ஐந்து கட்சிகள் பங்கேற்கவில்லை. அவை பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவையாகும். இந்தக் கட்சிகள் திறந்தமனதோடு இருக்கின்றன.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக பா.ஜ.க.,வை விமர்சிப்பதால், அவை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் செல்ல வாய்ப்பில்லை. தேசிய அரங்கிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் என்ற ஒருமித்த தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என நம்பலாம். ஆனால் இதுவரை சிலர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.

மேலும் குறிப்பாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (பிஜேடி) மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (ஒய்எஸ்ஆர்சிபி) ஆகியோர் என்டிஏவை ஆதரிப்பது குறித்து திறந்த மனதுடன், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இரண்டு கட்சிகளும் 7 சதவிகிதம் வாக்குகளைக் கொண்டுள்ளன; இரண்டு கட்சிகளில் ஒரு கட்சியின் ஆதரவு கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வசதியான வெற்றியை உறுதி செய்யும். ஆனால் அந்த கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும், சமீபத்திய ராஜ்யசபா தேர்தலில் நாம் பார்த்தது போல், எப்படியாவது சாதிக்க மிகப்பெரிய முயற்சியை மேற்கொள்ளும். சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் பேசி, வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்கும் நிலையை உருவாக்கும். பெரிய கட்சிகளில் அதிருப்தியாளர்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த இரண்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் கூட்டணி மாறி வாக்களிப்பதில் பெயர் பெற்ற ஜனதா தளத்தை பா.ஜ.க தனது பக்கம் வைத்துக்கொள்ளும். இந்த கட்சிகள் தாங்கள் அளிக்கும் ஆதரவிற்கான பிரதிபலனை பெற முடிந்த அளவுக்கு பா.ஜ.க.,வை வலியுறுத்தும்.

அப்போது, ​​தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜ.க போதுமான வெற்றியை பெறாமல் இருந்திருந்தால், அது நடக்காமல் இருந்திருந்தால் கதை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் அவையில் மட்டும் பிளவு பட்டிருக்கவில்லை. தவிர காலதாமதமான செயல்பாடும் இருந்தது. முதலில் சோனியா காந்தி சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசினார். அப்போதுதான் மம்தா பானர்ஜி 22 கட்சிகளை கூட்டத்திற்கு அழைக்க முடிவு செய்தார். எதிர்கட்சி அணியில் இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வில், பங்கேற்பது என காங்கிரஸ் முடிவு செய்தது. மேலும் சஞ்சலத்தில் உள்ள ஆம் ஆத்மி, டிஆர்எஸ் போன்ற கட்சிகள், கருத்தொற்றுமையுடன் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட எவருக்கும் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தல் முன் தயாரிப்புக்காக பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச சாத்தியமான ஒற்றுமைக்கான சாதகத்தை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இப்போது அக்னி பாத் விவகாரம் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களின் வெறுப்புப் பேச்சுகள் பாதகமாக இருக்கும் சூழலில் பிரதமர் தன் பங்கிற்கு, வெற்றி பெறுவதற்கு ஒவ்வொன்றும் தேவை என்று தெரிந்து கருத்தொற்றுமை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர்களை அணுகி பேசுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அடுத்ததாக யார் இருப்பார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடரும் நிலையில், இன்றைக்கு குடியரசு நாட்டுக்கு எப்படிப்பட்டகுடியரசுத் தலைவர் தேவை? என்ற அடிப்படைக் கேள்வி எழுந்திருக்கிறது. குடியரசுத் தலைவராக இருப்பவர் அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க வேண்டுமா அல்லது குடியரசு தலைவரின் பணி என்பது அதற்கு அப்பாலும் இருக்கிறதா?

நமது கட்டமைப்பில் உள்ள குடியரசு தலைவர் என்ற பதவியானது நிறைவேற்றும் அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை. அவசரநிலைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 42வது அரசியலமைப்புத் திருத்தம், அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு குடியரசு தலைவர் கட்டுப்பட்டவர் என்பதை சொல்கிறது. இந்திரா காந்தியால் இயற்றப்பட்ட பல கொடூரமான சட்டங்களை ஜனதா அரசாங்கம் ரத்து செய்தபோதிலும், குடியரசுத்தலைவரின் அதிகாரத்தை உள்ளடக்கிய விதியில் அந்த அரசு எந்த ஒரு திருத்தத்திலும் கைவைக்கவில்லை.

ஒவ்வொரு பிரதமரும் தனக்கு விருப்பமான குடியரசு தலைவரே பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். பெரும்பான்மையைக் கொண்ட நரேந்திர மோடி, இந்திரா காந்தி போன்ற சக்திவாய்ந்த பிரதமர்கள் தங்கள் வழியில் செல்வதை இது எளிதாக்குகிறது.

குடியரசுத்தலைவர் ஒரு பிரமுகராக இருக்கலாம், ஆனால் பிரதமரை நியமிக்கும் விஷயத்தில், மறுபரிசீலனை செய்யும்படி  அல்லது தாமதப்படுத்தும்படியும் மற்ற விஷயங்கள் குறித்து  மற்றவற்றவர்களுடன் அமர்ந்து முடிவுகளை எடுக்கவும் அமைச்சரவையை கேட்டுக்கொள்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

1987 இல் ஜைல் சிங் போன்ற ஒரு குடியரசுத்தலைவர், முன்எப்போதும் இல்லாதவகையில் 414 மக்களவை எம்.பி.க்களின் பெரும்பான்மை இருந்தபோதிலும், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை பதவி நீக்கம் செய்யும் தீவிர எண்ணத்தில் இருந்தார், அவருக்குப் பதிலாக துணை குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கடராமனை பிரதமராக பதவியேற்க சொன்னார். ஆனால் அதற்கு ஆர்.வி மறுத்துவிட்டார், மேலும் வி.பி.சிங் அதற்கு முன்வந்தார். அதிர்ஷ்டவசமாக, ஜைல் சிங் அந்த தீவிர எண்ணத்தில் இருந்து பின்வாங்கினார்.

ஆனால் மறுபுறம் 1975 ஜூன் நள்ளிரவில் இந்திரா காந்தியின் கொடூரமான அவசரநிலைப் பிரகடனத்தில் எந்த வித ஆட்சேபனையும் எழுப்பாமல் கையெழுத்திட்ட குடியரசு தலைவராக ஃபக்ருதீன் அலி அகமது மிகவும் வளைந்து கொடுப்பவராக இருந்தார்.

இந்த இரண்டு வெவ்வேறு வகையான உச்சக்கட்டங்களில் இருந்த குடியரசுத் தலைவர்களுக்கு இடையே உள்ள நடுநிலை பாதையில் பல குடியரசுத்தலைவர்கள் பயணிக்க முயன்றனர், அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை நசுக்கினார்கள், கட்டுப்படுத்தினர் அல்லது தணிக்கை செய்தனர், ஆனால் "லக்ஷ்மண் ரேகை" என்ற வரம்பைக் கடக்கவில்லை. ஷங்கர் தயாள் சர்மா 1992 இல் பாபர் மசூதி இடிப்பு பற்றி விமர்சித்தார். 1997 இல் உ.பி.யில் பிஜேபி அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்திய அவரது கூட்டணி அரசாங்கத்தில் இருந்தவர்களைக் கட்டுப்படுத்த கே.ஆர். நாராயணன் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுக்கு உதவினார்; குஜரால் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாராயணன் கேட்டுக் கொண்டார்.

R வெங்கடராமன் மூன்று கொந்தளிப்பான பிரதமர்களை வழிநடத்தினார் - VP சிங், சந்திர சேகர் மற்றும் PV நரசிம்ம ராவ் ஆகியோருடன், அவர் சில சமயங்களில் உடன்படவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் ஒரு காங்கிரஸ்காரராகவே இருந்தார், "அரசியலமைப்பு ரீதியாக சரியான" குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடியுடன் சுமூகமான உறவைப் பேணி வந்தார், ஆனால் அவசரச் சட்டங்களை நிறைவேற்றியது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இல்லாமல் செயலிழந்ததை விமர்சித்தார்.

அரசியலமைப்பின் பாதுகாவலர், தேசத்தின் தலைவர், நாடாளுமன்றத்தின் அங்கம், படைகளின் தளபதி, மத்தியப் பல்கலைக்கழகங்களின் கவுரவ பேராசிரியர் என இருக்கும் குடியரசுத் தலைவர் நண்பராகவும், தத்துவஞானியாகவும், அரசின் அமைப்புகள் திறம்பட செயல்படுவதற்கான வழிகாட்டியாகவும் இருக்க முடியும். தேவைப்பட்டால், திரைக்குப் பின்னால் இருந்து பிரச்னைகளை சரி செய்பவராகவும் கூட இருக்க முடியும். ஆனால் அவரின்  அந்தஸ்து, அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட உறவுகள் மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கும் திறன்கள் - மற்றும் பிரதமருடன் இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே இது நடக்கும். அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆகவோ, பிரதமருக்கு போட்டியான அதிகார மையமாகவோ இல்லை.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரின் குடியரசு தலைவர் என்ற கொடுக்கப்பட்ட சூழ்நிலையை பகற் கனவு என  சந்தேகம் கொண்டவர்கள் அழைப்பார்கள். ஆனால், அப்போது ("உமீத் பர் ஹீ துனியா கயம் ஹை") நாங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்.

எழுத்தாளர் : மூத்த பத்திரிகையாளர் நீரஜ் சௌத்ரி

தமிழில்; ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

President Of India India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment