Advertisment

Tavleen Singh Writes : ஹவுடி மோடி நிகழ்வை செய்தியாக்கிய விதம் என்னை வெட்கப்பட வைக்கின்றது

எனவே அவர் பிரதமரானபோது ஏர் இந்தியா ஒன்னில் பத்திரிகையாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதையும்  நிறுத்தினார். ஒருவேளை, இது அவருக்குத் தேவையில்லை என்னவோ? 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kashmir 370, Article 370 abrogation,Imran khan , Narendra Modi , Mob Lynching

Kashmir 370, Article 370 abrogation,Imran khan , Narendra Modi , Mob Lynching

நாற்பது வருடங்களுக்கு மேலாக ஊடகத் துறையில் பெருமையோடு பங்களித்தவர் என்கிற முறையில் சொல்கிறேன்,"ஹவுடி மோடி சுற்றுப்பயணத்தை நமது தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய விதம், செய்தியாக்கிய விதம்   என்னை சற்று வெட்கப்படவே வைத்தது. எந்த மிகைப்படுத்தல் இல்லாமல் இந்த சுற்று பயணத்தை ஏதேனும் டிவி சேனல்கள் காட்டுமா ? என்ற எனது தேடல் கடும் தோல்வியிலேயே முடிவடைந்தது. பழைய காலங்களில்  இந்தியாவின் ஒரே டிவி சேனல் தூர்தர்ஷனின் நிருபர்கள் என்றுமே அதிகாரத்திற்கு அடிபணிந்து போவோர்களாய் இருந்தாலும், அவர்களின் நிருபர் பணியைக் கண்ணியத்தோடும், கட்டுக் கோப்பாகவும் பாதகாத்து வந்தனர். ஆனால், இன்று பத்திரிக்கைச் சுதந்திரம் என்று சொல்லிக் கொள்ளும் மீடியாக்களிடம் இந்த சுயமரியாதையும்,கண்ணியமும் இல்லாமல் போனதாகவே உணருகிறேன்.

Advertisment

இந்த ஹவுடி மோடி சுற்றுபயனத்தை செய்தியாக்கிய விதத்தில் நாம் ஏன் இவ்வளவு அவமானகரமான வெறியோடு இருந்திருக்கிறோம் என்பதை நான் யோசிக்கையில் எனக்கு புலப்பட்டது ஒன்றே ஒன்றுதான். "அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விட இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நல்ல முறையில் வரவேற்க்கப்பட்டார்.... என்பதே முதன்மையாக்கவே அனைவரும் போராடி வந்தனர்.

இந்தியாவின் பிரதமரை அமெரிக்க பிரமுகர்களே நேரில் வந்து சிவப்புக் கம்பளம் அழைத்தனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் சவுதி மன்னரின் ஜெட்டில் சென்றார், அவருக்கு சிவப்புக் கால் மிதி அளவு தான் வரவேற்ப்புக் கிடைத்தது.... என்கிற அளவிற்கு நமது டிவி சேனல்களின் செய்திகள் இருந்தன. டோனால்ட் டிரம்ப் நிருபர்களிடம் நடத்திய  உரையாடலின் போது, நீங்கள் இம்ரான் கான் குழுவைச் சேர்ந்தவரா ? என்று ஒரு நிருபரைப் பார்த்துக் கேட்டார். ஆனால், இந்த நிகழ்விற்கு இந்தியாவின் டிவி நியூஸ் சேனல்கள் ஏன்.... களிப்படைந்தனர் என்பது எனக்கும் இன்னும் புரியவில்லை. உண்மையில், டோனால்ட் டிரம்ப் கேட்டக் கேள்வி இவர்களுக்கும் பொருந்தும் என்பது இவர்கள் மறந்து விட்டனரோ?

ஹூஸ்டன் நகரத்தின் ஒரே முக்கிய நிகழ்ச்சியாக ஹவுடி மோடி இருந்ததால்  இதை முன்னிலைப்படுத்தி கவரேஜ் செய்தது நம்மால் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், மோடி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு (யு.என்.ஜி.ஏ) வந்த செய்தி எங்குமே முதன்மைப் படுத்தப்படவில்லை. இந்த முறை,   ஐ.நா பொதுச் சபை விவாதிக்கப் பட்டவைகள் எல்லாம்  தீவிரமானவை மற்றும் முக்கியமானவை. அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் பதற்றம், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப் போர், கிரெட்டா துன்பெர்க் காலநிலை பேச்சு, போரிஸ் ஜான்சன் செயல்பாடுகள்... போன்ற எந்த விஷயங்களுமே இந்திய மீடியாக்களுக்கு பிடித்தவைகளாகத் தெரியவில்லை. மோடி அமெரிக்கா சென்றார், மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, பாகிஸ்தான் பிரதமரை விட மோடி நன்கு கவுரப்படுத்தப்பட்டார், பாகிஸ்தான் பேச்சு ஏடு பட வில்லை..... என்பதைத் தாண்ட எந்த பத்திரிக்கையாளருக்கும் மனம் வரவில்லை.

இந்த நாட்களில், செய்தி சேனல்களில் பாகிஸ்தான் பற்றிய ஆவேசம் எனக்கு மிகவும் சங்கடம் தருவதாகவே இருக்கிறது.  பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, காஷ்மீர் பற்றி தினமும் செய்தி சேனல்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விவாதங்கள் நடத்தப்படுகின்றன. எல்லா விவாதங்களிலும் பாகிஸ்தானிய வர்ணனையாளர்கள் கலந்துக்கொள்ள வைக்கப்படுகின்றனர். அவர்களும் எப்போதுமே ஒருதலைப்பட்சமாகவே கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள், பின் நமது சீனியர் நிருபர்களால் அவமானப் படுத்தப் படுகிறார்கள். மீண்டும் அடுத்த விவாதத்தில் அவரையே அழைத்து பேசுவது.....  மீண்டும் அவர் கூச்சலிடுவது, மீண்டும் அவரை அவமானப்படுத்துவது பத்திரிக்கைப் பணி போன்று தெரியவில்லை மாறாக முத்திய- தேசியவாதம் என்றே சொல்லவேண்டும்.

இந்த வகையான தேசியவாதம் பொதுவாக வேறு எவரையும் விட ஆதரிக்க விரும்பும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும், இது ஏற்கனவே நடந்ததற்கான திட்டவட்டமான அறிகுறிகள் உள்ளன.  இந்தியாவும் பாகிஸ்தானும் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் தங்களுக்குள் உள்ள வேறுபாட்டை முதன்மைபடுத்துவதை  நிறுத்திவிட்டன, ஆனால் இந்திய ஊடகங்கள் நம்முடைய சிக்கலான வேறுபாடுகளைப் ரிப்போர்ட் செய்த  விதம் காரணமாக, தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பகைமை தற்போது முக்கியத்துவம் ஆக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம்  ஊடகங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து  நான் ட்வீட் செய்தபோது, "​​ஊடகங்களை மட்டும்  ‘பிரத்தியேகமாக’ குற்றம் சாட்ட முடியாது, பாகிஸ்தானுடனான பகையின் மூலமாக  தேசியவாதத்தை வரையறுக்கும் தற்போதைய தலைவர்களிடம்தான் தவறு இருக்கிறது"  என்று  ராம் குஹா எனக்கு நினைவூட்டியது தற்போது நியாபகத்திற்கு வருகிறது.

எதிர் நாட்டுப் பகையின் மூலம்  தேசியவாதத்தை தூண்டும் நாடாக பாகிஸ்தான் இருந்தது, இருந்து வருகிறது என்பதில் எந்த சிறு சந்தேகமும் எனக்கு இல்லை. அது எப்போதுமே இந்தியாவுடனான  நித்திய பகைமையால் தன்னை அடையாளம் கண்டது. இந்த எண்ணத்தால் தான் பாகிஸ்தான் ஒரு சிறிய, குட்டி நாடு போல் எனக்கு தோன்றியது. எனவே இந்தியாவும் அதே போன்று மன நிலையோடு செல்கிறது என்பதை நாம் இங்கு வருத்தத்தோடு புரிந்துக் கொள்ள வேண்டும் .

அரசியல் தலைவர்கள்  இந்த விரோத மனப்பான்மை உருவாக்கும் போது, இது கவலை வாய்ந்ததாகவே உள்ளது. ஆனால், பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்ளும்போது, அது மிகவும் மோசமானது.

பத்திரிகைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு அடிப்படையில் சிக்கலானது மற்றும் சவாலானது என்பது எனக்கு பத்திரிகைத் துறையில் கற்பிக்கப்பட்ட முதல் விதி. அரசாங்கம் செய்யும் எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பதில் நம் வாழ்க்கையை செலவிட வேண்டும் என்று மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக , காசு வாங்கி அரசாங்கத்திற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்பவர்களைப் போல் நடந்துக் கொள்ளக் கூடாது என்பதும் இதற்குப் பொருள்.

முரண்பாடாக, முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஊடகங்களுடன் எப்போதும் கடினமான உறவைக் கொண்டிருந்தவர் மோடி தான்.  எனவே அவர் பிரதமரானபோது ஏர் இந்தியா ஒன்னில் பத்திரிகையாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதையும்  நிறுத்தினார். ஒருவேளை, இது அவருக்குத் தேவையில்லை என்னவோ?

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment