முஸ்லீம்களை வெறுக்கும் ஒரு ‘இந்து பாசிஸம்’ தான் இந்தியாவை வழிநடத்துகிறது என்று இம்ரான் கான் கூறிய வார்த்தைகளை நிஜமாக்குவது போன்று தான் நரேந்திர மோடியின் பெயரை சொல்லுபவர்கள் உள்ளனர் . பொதுக் கூட்டத்தில் பேசும்போதும் , ட்வீட் செய்யும்போதும் அல்லது தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும்போதும், இவர்கள் ஒவ்வொரு இஸ்லாமியர்களை ஜின்னாவின் வாரிசுகளாகவே நினைத்து வெறுக்கின்றனர் , இஸ்லாமியத்தை ஒரு ‘சகிப்புத்தன்மையற்ற’ மதமாகவும் சித்தரிக்கின்றனர்.
இந்தியா நாட்டில் இனிவரும் காலங்களில் இந்துக்களைப் போல் இஸ்லாமியர்களுக்கு உரிமை இருக்காது என்று பக்கத்து தேசத்திலிருந்து கூறப்படும் குற்றச்சாட்டுகளை மோடியின் பெருமைமிக்க ஆதரவாளர்களாய் இருந்து உறுதிப்படுத்து கின்றனர்.
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, இம்ரான் கான் பேசிய அனைத்து உரைகளிலும், 'மோடி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையம் வெறுக்கிறார்' என்ற இந்த வாக்கியமே அடிநாதமாய் இருந்து வருகிறது. காஷ்மீரின் மக்கள் தொகை பெரும்பாலும் முஸ்லீம்களாக இருப்பதால் மட்டுமே சிறப்பு அந்தஸ்த்து அகற்றப்பட்டது என்று அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது உரையில் ‘பாசிச இந்தியா' என்ற வார்த்தையை முதன்மைபடுத்தினார், பின் அவர் பங்கேற்ற ஒவ்வொரு சர்வதேச தொலைக்காட்சி சேனல்கள் நேர்காணலிலும் இந்த வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தார். அமெரிக்கா சுற்றுப் பயணம் திரும்பி அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பெருமக்கள் அடங்கிய கூடத்தில் பேசும்போது, 'அல்லாஹ்வின் பெயரால் ஜிகாத் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் அறிவித்தார்'. காஷ்மீரில் பெரிய இனப் படுகொலைக்கு இந்தியா தயாராகி வருகிறது, முஸ்லீம்களைக் கொள்வதை நம்பிக்கையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் மனிதராய் இருக்கும் மோடியுடன் சமாதானப் பேச்சுக்கு வழி பிறக்காது, என்றும் கூறினார்.
இதெற்கெல்லாம் மோடி பதிலளிக்கவில்லை, அரசியல் தர்க்க ரீதியாக பார்த்தால் இது நல்லது. ஹூஸ்டனில் தனக்கு வழங்கப்பட்ட அற்புதமான வரவேற்பு, ‘130 கோடி இந்தியர்களை’ பிரதிநிதித்துவப்படுத்துவதால் கிடைத்தது என்ற அடிப்படை உண்மையையும் அவர் நமக்கு நினைவூட்டத் தவறவில்லை என்பதும் நல்லது. இவர்களில் சுமார் 25 கோடி பேர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரது சில அமைச்சர்கள் மற்றும் ட்விட்டர் ஆதரவாளர்களால் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட விஷம வார்த்தைகள் எல்லாம் - தன்னையும், தனது ஆட்சியின் உணர்வையும் பிரதிபலிக்கவில்லை என்பதை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த சொல்லப்பட்ட விஷம வார்த்தைகளை நான் மீண்டும் இங்கு சொல்லவரவில்லை , ஏனென்றால் அவை சொல்லதகுதியற்றவை , இவகைளைச் சொல்லி அவர்களுக்கு விளம்பரத்தை தேடித் தரவும் மனமில்லை . ஆனால், பிரதமர் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கின்றேன். அவர் தனது முதல் பதவியில் பசு பாதுகாப்புக்கான கும்பல் தாக்குதல்களை கண்டிக்க அதிக நேரம் எடுத்து கொண்டார் . எனவே அதற்குள் முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்த கும்பல் தாக்குதல்களில் தலித்துகளும் குறிவைக்கப்பட்டனர்.
அவரது இரண்டாவது பதவிக்காலத்திலும் அதே கும்பல் தாக்குதல் நடைமுறை தொடரத்தான் செய்கிறதென்றாலும் , தற்போது , ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஒரு புதிய அசிங்கமான போக்கு நம் சமூகத்தில் வஞ்சக காற்றாய் பரவி வருகிறது. இந்த வஞ்சகத்தை திணிக்க நினைத்தவர்கள் ஒரு மோசமான கால கட்டத்தில் தான் இந்த செயலை செய்து வருகின்றோம் என்று இன்னும் நினைக்க வில்லை போலும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கைக்கான எந்த அறிகுறியும் இன்னும் ஏற்படவில்லை. 370 வது பிரிவை அகற்றுவதற்கு எடுத்த முயற்சியை விட காஷ்மீரில் அமைதி கொண்டு வருவதற்கு இன்னும் அதிக முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். 370 வது பிரிவு அகற்றப்பட்டதாலும், கடுமையான கட்டுபாட்டு விதியினாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஏராளமான முஸ்லீம்கள் ஏற்கனவே அந்நியப்படுத்தப்பட்டு துயரத்தில் உள்ளனர். இந்நேரத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் முஸ்லீம்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்களை மேலும் அந்நியப்படுத்துவது புத்திசாலித்தனமா?
மோடிக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மையான மக்களின் மனநிலை முஸ்லீம்களின் மீது வெறுப்புக் கொண்டதாக உள்ளது என்பது உண்மைதான். முஸ்லீம்கள் இனப்பெருக்கத்தின் மூலம் மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவை கைப்பற்ற நினைக்கின்றார்கள் என்ற அவர்களின் வாதத்தை நான் அவ்வப்போது கடந்து வந்திருக்கின்றேன். மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லை பிரிவின் போது தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களையும் பற்றி அவர்கள் பேசியதை நான் கேட்டிருக்கின்றேன். அந்த காலங்களில் இந்த மனவேதனையைத் தீர்க்கவோ, புலம்பவோ அவர்களுக்கு நேரமில்லை. ஏனெனில், சிதைந்து போன வாழ்க்கையை ஓட்ட வைப்பதற்கே அவர்களுக்கு அப்போது நேரம் சரியாய் இருந்தது.
நான் ஒரு பத்திரிகையாளராகி, ஆராய்ச்சிகளுக்காக ஒரு சில ஆர்.எஸ்.எஸ் ‘ஷகாக்களில்’ கலந்துகொண்ட பிறகுதான், எல்லா முஸ்லீம்களுக்கும் எதிரான உண்மையான கசப்பையும், வெறுப்பையும் மோடியின் ஆதரவாளர்கள் ஏன் கொண்டுள்ளனர் என்ற உண்மையை புரிந்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இஸ்லாமியர்களுக்கான வெறுப்பு உணர்வுகள் மிகவும் ஆழமாக இயங்குகின்றன. மேலும், சமீப காலமாக பள்ளத்தாக்கில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிதர்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டதன் காரணாமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கோபத்தாலும் வெறுப்பு அதிகரித்துள்ளன.பாகிஸ்தானில் இருந்து வந்த ஜிஹாதி பயங்கரவாதமும் விஷயங்களை மோசமாக்கியுள்ளது.
எனவே, மோடி தனது ஆதரவாளர்களை அந்நியப்படுத்தும் விதமாக எதையும் வெளிப்படையாக சொல்ல ஏன் தயங்குகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நான் தாழ்மையுடன் சில ஆலோசனைகளை வழங்க முனைகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷிமோன் பெரெஸ் (இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி) மற்றும் யாசர் அராபத் (பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர்) ஆகியோருக்கு இடையிலான உரையாடலை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது . அந்த தருணம் மிகவும் பதட்டமாக இருந்தது. உரையாடலின் போது , தனது மக்களுக்கு இழைத்த/இழைக்கின்ற கொடுமைகளைப் பற்றி இஸ்ரேல் ஷிமோன் பெரெஸ்ஸிடம் கடுமையாக பேசினார் அராபத் . இதையெல்லாம் அமைதியைக் கேட்ட பெரஸ் சிறிது நேரம் கழித்து , ' தலைவர்களுக்கு சில நேரங்களில் பின்பற்ற வேண்டும் , வழிநடத்துவதற்கான நேரத்தை தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும்' என்று அமைதியாய் அராபாத்துக்கு பதில் கூறினார் ஷிமோன் பெரெஸ். மரியாதைக்குரிய மோடி, வழி நடத்துவதற்கான நேரம் உங்களுக்கு வந்து விட்டதாய் நினைக்கின்றேன் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.