புன்னகை மன்னன் சர்ச்சை: சம்மதம் பற்றி பேச இது ஒன்றும் தாமதம் இல்லை

புன்னகை மன்னனில் கேள்விக்குரிய காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது தலைமுறைகளால் ஈர்க்கப்பட்டு ஆர்வம் இருந்தாலும், காலம் கடந்த இந்த படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முறையை நாம் மறுக்க வேண்டும்.

punnagai mannan, punnagai mannan kiss, punnagai mannan controversy, kamal haasan kiss, புன்னகை மன்னன், புன்னகை மன்னன் முத்தக் காட்சி, கமல்ஹாசன் முத்தக் காட்சி, கமல்ஹாசன், ரேகா, kamal haasan rekha kiss,புன்னகை மன்னன் சர்ச்சை, rekha kiss, kamal haasan news, punnagai mannan movie, tamil actor rekha, kamal haasan latest news
punnagai mannan, punnagai mannan kiss, punnagai mannan controversy, kamal haasan kiss, புன்னகை மன்னன், புன்னகை மன்னன் முத்தக் காட்சி, கமல்ஹாசன் முத்தக் காட்சி, கமல்ஹாசன், ரேகா, kamal haasan rekha kiss,புன்னகை மன்னன் சர்ச்சை, rekha kiss, kamal haasan news, punnagai mannan movie, tamil actor rekha, kamal haasan latest news

மனோஜ் குமார்
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 1986-ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தால் உணர்வுப் பூர்வமாக பாடப்பட்ட “என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாடலுடன் தொடங்கும். இந்த பாடல் காதல் ஜோடி காதலில் சந்தோஷமாகவும் சுற்றிலும் அருவி, ஒரு நெருக்கமான இடத்தில் அனுபவித்து வருவதாகவும் தோன்றும். ஆனால், பாடல் முடிந்தவுடன் இந்த ஜோடி ஒரு குன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வார்கள்.

இந்த காட்சியில் கமல்ஹாசன் மற்றும் ரேகா காதல் தோல்வி அடைந்த காதலர்களாக நடித்திருப்பார்கள். இந்த காதல் ஜோடி ஒன்று, இரண்டு, மூன்று, என எண்ணிவிட்டு குதிப்பார்கள். கமல் எண்ணத் தொடங்கும்போது, அவர் பதற்றமடைவார். அவர் தன் காதலியைப் போல உறுதியாக இல்லை. அவள் முடிவுக்கு காத்திருக்கையில் அமைதியாக இருக்கிறாள். கமல் எண்ணுவதை நிறுத்திவிட்டு தனது காதலியை இறுதியாக ஒரு பார்வை பார்த்து உதட்டில் ஒரு உணர்ச்சிமிக்க முத்தத்தை கொடுத்துவிட்டு அவளுக்கு கடைசியாக ஒரு இறுக்கமான அரவணைப்பைக் கொடுப்பார். அந்த காட்சியில், கமல் 1,2,3… ஜம்ப் என்று செல்கிறார். பின்னர், அவர் அருவியிலிருந்து உயிர் பிழைக்கிறார். ஆனால், அந்தப் பெண் அவ்வளவு அதிர்ஷ்டசாலி அல்ல.

இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான காதல் காட்சியாக இருக்கிறது. கமல் மட்டுமே இந்த காட்சியை நன்றாக நடித்திருக்க முடியும். வேறு எந்த நடிகரும் அத்தகைய இதயப்பூர்வமான புன்னகையை மரணத்தின் விளிம்பில் கலவையான உணர்ச்சிகளை பனிச்சரிவுக்கு மத்தியில் கொண்டுவந்திருக்க முடியாது.

அனேகமாக அந்த காட்சியை மீண்டும் அதே பார்வையில் பார்க்க முடியாது. ரேகாவின் பழைய நேர்காணலின் ஒரு பகுதி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு பழைய வீடியோவில், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் மற்றும் அவருடன் இணைந்து நடித்த நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் முத்தமிடும் முத்தக் காட்சிக்கு தனது சம்மதத்தை கேட்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், தனது அனுமதியின்றி அவர் முத்தமிடப்படுவார் என்று பாலச்சந்தரும் கமலும் தங்களுக்குள் முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

இப்போது, பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விஷயத்தை ரேகா கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் ஊடக கவனத்திற்காக செய்கிறாரா? அவருடைய உண்மையான நோக்கங்கள் என்ன?

சம்மதம் என்பது இங்கே முக்கிய வார்த்தையாக உள்ளது. இதில், ஒன்று, ஒருவரின் சம்மதம் தெரிவிக்கும் உரிமையை மீறுவது பற்றி பேசுவது ஒருபோதும் தாமதமில்லை. இரண்டு,  அனுபவத்திலிருந்து ஒரு பாடம் அல்லது இரண்டு பாடத்தை கற்றுக் கொள்வதற்கும், பாடத்திருத்தம் செய்வதும் ஒருபோதும் தாமதமில்லை. எனவே பெற்ற முத்தத்தைப் பற்றி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த நடிகை வேறு யாரும் அல்ல ஒரு 16 வயது பெண். கேள்விக்குரிய காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது தலைமுறைகளால் ஈர்க்கப்பட்டு ஆர்வம் இருந்தாலும், காலம் கடந்த இந்த படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முறையை நாம் மறுக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Punnagai mannan controversy kamal haasan rekha kissing scene

Exit mobile version