கலீத் அகமது
பாகிஸ்தானின் இராணுவ தினத்தினை சிறப்பிக்க, பாகிஸ்தானின் இராணுவத் தலைமை அதிகாரி திரு. கமர் ஜாவேத் பஜ்வா, இந்திய இராணுவத் தூதரையும், அவரின் குழுவினையும் பாகிஸ்தானிற்கு அழைத்திருந்தார். அவ்விழா முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து, இந்தியாவுடன் அமைதியான உறவுமுறையையே பாகிஸ்தான் விரும்புகின்றது என்றும், இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
பொருளாதாரத்தால் மிகவும் பின்னடைவினை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் அத்தனை எளிதாக அதனுடைய பதற்றம் நிறைந்த கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை யாருக்காகவும் எப்போதும் விட்டுத்தராது. ஆனால் அதனுடைய அண்டை நாடுகளுடனான உறவினை சுமூகமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று பாகிஸ்தான் இருக்கின்றது. பாகிஸ்தான் தவற்றை சரி செய்து கொள்ளும் நாடு என்ற பார்வை உலக அரங்கில் தெரிந்தோ தெரியாமலோ நிலைப்பட்டுவிட்டது. அதனால் தான், பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாக்குதல்கள் அனைத்தையும் சரி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.
ஜெனரல் பஜ்வா, அனைத்தையும் சரி செய்கின்றோம் என்று பாகிஸ்தான் எடுத்திருந்த பழைய தவறான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டும். மாற்றங்களை செயல்படுத்தும் நோக்கில் 1999ல் பாகிஸ்தானிற்கு பயணித்து இந்திய பிரதமர் திரு. வாஜ்பாய், அங்கு, அன்றைய பாகிஸ்தான் பிரதமரான திரு. நவாஸ் செரீஃப் அவர்களுடன் லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அன்று பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக இருந்த திரு. பர்வேஷ் முஷரப் அவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தில் பெரிய உடன்பாடில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan Peopels Party) அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதில் தோல்வியும் கண்டது. 2013 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, செரீஃபும் அவருடைய கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸும், இந்தியாவுடனான சுமூகமான உறவுக்கு உறுதியளித்து தேர்தலில் வெற்றியும் அடைந்தது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அணுகுவதற்கு முன்பு, ஜெனரல் பஜ்வா, பாகிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றது. பாகிஸ்தானிற்கான இந்திய உயர் கமிஷ்னர் திரு. அஜய் பிஷரியா, லாகூரில், பாகிஸ்தானுடைய இந்திய உறவினை மேம்படுத்த திறம்பட வேலைகளை செய்து வருகின்றார். டெல்லியில் பாகிஸ்தான் அதிகாரிகளை இந்திய அரசாங்கம் எப்படி நடத்துகின்றது என்பதை அஜய் ந்னன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார். இருப்பினும் இந்தியாவுடனான வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தையினை செரீஃப் தொடங்கும் போது அதை சிறப்பாக நிறைவேற்றித் தர அஜய் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட்டு ஒரு அறிக்கையினை வெளியிட்டார். எல்லையில் இருக்கும் விசா பிரச்சனைகளை சரி செய்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வளர்ச்சி 30 பில்லியன் டாலர் வரை தொடும் என்கின்றது அவ்வறிக்கை. 70 வருடங்களில் இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டைகளும் பிரச்சனைகளும் இந்த வர்த்தக மதிப்பினை வெறுமனே 2.2 பில்லியன் டாலர் என்ற அளவிலேயே வைத்திருக்கின்றது.
பாகிஸ்தான் தற்போது அதனுடைய அண்டை நாடுகளுடன் சுமூகமாக இணங்கிப் போக வேண்டிய நிலையில் இருக்கின்றது. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்கும் வழி வகை செய்திருக்கின்றது பாகிஸ்தான். அதனால் பாகிஸ்தானில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் வளர்ச்சிகள் குறித்தும் பாகிஸ்தான் அறிந்து கொண்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்றுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது பாகிஸ்தான். அதைப்பற்றி பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. சியாவுதீன் பேசும் போது, “நாங்கள் இரஷ்யாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுவோம். இந்தியா, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானிற்கு வர்த்தகத்தினை இவ்வொப்பந்தம் வழிவகை செய்யும். இதன் மூலம் இந்தியா மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு சீன எல்லை வரை வர்த்தகத்தினை இன்னும் துரிதமாக மேம்படுத்தலாம். சீனாவும் காஷ்மீரினை மையப்புள்ளியாக வைத்து இந்தியாவின் மேற்கு பகுதியில் தன்னுடைய வர்த்தகத்தினை விரிவுப்படுத்தலாம்.
வர்த்தகம், போர் என்ற வார்த்தைக்கு முற்றுப் புள்ளியாக இருக்கும். இருதரப்பினருக்கும் இடையான புரிதலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. இரு நாடுகளுக்குமிடையேயான செழிப்பிற்கு காரணமாக இந்த வர்த்தகங்கள் அமையும். இவ்வுறவு மேம்பட்டால் எல்லைகள் காணாமல் போகும். இந்தியாவோ பாகிஸ்தானோ புதிதாக ஒரு அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அது போருக்காகத்தான் இருக்கும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல உடைந்து போகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 12.05.18 அன்று, கலீத் அகமது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
கட்டுரையாளர் கலீத் அகமது, பாகிஸ்தானை சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டுங்களாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகிறார்.
தமிழில் : நித்யா பாண்டியன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.