scorecardresearch

செய்தியின் பின்னால் ஒரு தலைவனின் பயணம் 

ராகுல் காந்தி தனது யாத்திரைக்கு அரசியல் அல்லது தேர்தல் நோக்கம் இல்லை என்றும், அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்புவதே தனது ஒரே நோக்கம் என்றும் பலமுறை கூறி வருகிறார். இவற்றை ‘அரசியல்’ அல்லது ‘தேர்தல்’ என்று முத்திரை குத்த முடியாது. இந்த பாத யாத்திரையால் பாஜக மற்றும் பிற விமர்சகர்கள் கலக்கமடைந்துள்ளனர். யாத்திரையை விமர்சிக்க பாஜக நியாயமற்ற காரணங்களைக் கண்டறிந்துள்ளது

Rahul Gandhi
Rahul Gandhi

ப சிதம்பரம் 

அரசியல் நோக்கமின்றி ஒரு அரசியல் தலைவர் யாத்திரையை  மேற்கொள்ள முடியும் என்பதை மக்கள் நம்புவது கடினம் என்பதை நான் அறிவேன்.  இதற்கு  வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன: ஆதி சங்கரா (700  பொது ஆண்டு , மதம்), மாவோ சேதுங் (1934-35, ராணுவம்), மகாத்மா காந்தி (1930, ஒத்துழையாமை இயக்கம் )  மார்ட்டின் லூதர் கிங் (1963, 1965, சிவில் உரிமைகள்) என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கட்டுரையை  நீங்கள் படிக்கும் போது, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 135 நாட்களில் சுமார் 4,000 கி.மீ. கடந்து முடிந்திருக்கும். இதை கண்டனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த யாத்திரை துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் உடல் சகிப்புத்தன்மை ஆகியவற்றின்  ஒன்றிணைந்த கலவை  என்பதை மறுக்க முடியாது.

பாஜகவின் எச்சரிக்கை ஒலி

திரு, காந்தியின் கருத்துப்படி இந்த யாத்திரைக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை. அன்பு, மத சகிப்புத்தன்மை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்துவதற்காகவே நடத்தப்படுவதாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இந்த யாத்திரையை அரசியல் சார்ந்தது என்றோ, தேர்தல் நோக்கம் கொண்டது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதனால் பாஜகவினர் இதற்கு பதில் கூற முடியாமல் கலக்கமடைந்துள்ளனர். யாத்திரையை விமர்சிக்க பாஜக நியாயமற்ற காரணங்களைக் கண்டறிந்துள்ளது. கோவிட் பரவலாம் என்ற அடிப்படையில் யாத்ராவை நிறுத்தக் கூட பாஜக அரசு முயன்றது.  இதனால் திரு. காந்தி கலக்கமடையவில்லை. தன் மீது வீசப்பபடும் கண்டனக்கணைகளை பொருட்படுத்தாமல் தனது நோக்கம் மக்களை சென்றடைவதிலேயே கவனம் செலுத்தினார். அவரது நோக்கத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. முக்கியமாக  பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு அடியில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் தனது பார்வையை செலுத்துகிறார். அவரை  பார்க்கவும் கடைநிலை மக்களே திரண்டனர்.

இந்தியாவில் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பிரதான பிரச்சனைகள் என்பதை அவரே நேரில் பார்த்தார். முக்கியமாக விலைவாசி உயர்வு. மக்கள் இதை தாங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வெறுப்பை வளர்ப்பவர்கள் எப்போதும் சமூகத்தில் இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகம் தற்போது பிளவுபட்டு  பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்து சாலையோர பொதுக்கூட்டங்களில், பிரதான கூட்டங்களிலும் மக்களிடம் வேதனையுடன் பேசியிருக்கிறார் திரு. காந்தி. இந்த யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பாஜக ஏன் இத்தனை பீதி கொள்கிறது? சில விஷயங்களை நாமே நேரில் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணியில் நான்  குமரிமுனை உட்பட மைசூரு, தில்லி நகரங்களில் நடந்தேன். எல்லா இடங்களிலும் ஏராளமான வரவேற்பு. நான் செல்லாத இடங்களில் திரண்ட கூட்டத்தை பத்திரிக்கைகளிலும், காணொலிக் காட்சிகளிலும் பார்த்துக் கொண்டேன்.  ஆனால் கூடிய கூட்டம்  கூட்டப் பட்டதல்ல. யாரும் பேருந்துகளை கூட்டு யாரையும் கூட்டி வரவில்லை.. யாருக்கும் பணம் தரப்படவில்லை. யாருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவில்லை. ஆனாலும் இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் நடந்தனர். முதியவர்கள் நடக்க முடியாமல் போனால் கூட பார்த்து ரசித்தனர். இளைஞர்கள் மற்றும் பெண்கள் பூக்களை தூவினர். கைகளை அசைத்தனர். குரல் எழுப்பினர். தமது அலைபேசி மூலம் படங்கள் எடுத்தனர். நான் பார்த்த அனைத்து மக்களுமே தமது அலைபேசியை பயன்படுத்தி நிகழ்ச்சியை தரணியெங்கும் பரப்பினர்.

படித்தவர், பாமரர், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டாலும்  மிக முக்கியமான பார்வையாளர்களாக நான் கருதுவது ஏழை மக்களான  சாமானியர்களை தான்.  திரு. காந்தி பேசியதை அவர்கள் கேட்டு சென்றனர்.  புரிந்து கொண்ட செய்தியை மௌனமாக விட்டு சென்றனர். இது இந்திய சமூகத்தை ஆழமாக பிளந்து புரிந்து கொண்ட செய்தி. சுற்றிலும் வெறுப்பும்,  மௌனம்  மற்றும் வன்முறைக்களம் இருந்தாலும் இதற்கு சரியான  பதிலடி அன்பு, தோழமை, சமூக ஒற்றுமை தழுவுவதே சரியான பதிலடியாக இருக்கும் என்பதே  சாமானிய மக்கள் விட்டு சென்ற செய்தி.

தமிழில் :த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi bharat jodo yatra p chidambaram columns

Best of Express