தமிழில்; ரமணி
கடந்த 10 நாட்களில், ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதான மங்கலான கவர்ச்சியானது, செய்தித்தாள்களில் தலையகங்க செய்திகளுக்கு எதிரே துண்டு செய்திகளாக ஊக்கப்படுத்தப்பட்டன, நேர்மையான ட்வீட்கள் மற்றும் பிரபலமான நபர்கள் சரியாக என்ன உரிமையை கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிய விவாதங்கள் களைகட்டின. நேபாளத்தில் உள்ள ஒரு இரவு விடுதியில் இசை ஒலித்துக் கொண்டிருந்தற்கு மத்தியிலும், மதுபானம் குடித்துக் கொண்டிருந்தோருக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தனது போனை உற்றுப் பார்க்கும் புகைப்படத்தைக் கொண்ட வாட்ஸ்ஆப் ஃபார்வேர்டில் அனைவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. அவரது அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், புன்னகைக்கும் காங்கிரஸ் வாரிசாக வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவராகவே இருக்கிறார் – பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்வில் கட்டாயமாக அத்துமீறி நுழைவதில் தவறில்லை என்பதாகத்தான் இன்ஸ்டாகிராமில் வளர்க்கப்பட்ட ஒருதலைமுறை இதனைப் பார்க்கிறது.
ஒருவரது அரசியல் பார்வை எதுவாக இருந்தாலும், ராகுல் காந்தியாக இருப்பது அவ்வளவு எளிதாக இருக்க முடியாது. உங்கள் ஒவ்வொரு அசைவும் கூறாய்வு செய்யப்படுகிறது. (பெரும்பாலும்) அனைவருக்கும் முன்னால் பல்வேறு வகைகளில் விமர்சிக்கப்படுகிறது – வழக்கமான ஒரு இருப்பாக ஒருவரை நன்றியுணர்வுடன் உணர வைக்கிறது ஒரு மோசமான கருத்து ஒருவரின் மனதில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் என்பதை நான் அனுபவத்தில் அறிவேன். பிரபலமானவர்கள் சமூக ஊடகங்களில் இடைவிடாமல் விழும் கருத்துக்களை கேலி செய்யப் பழக வேண்டும்; அவர்கள் நேருக்கு நேர் வந்தால் ஒருவேளை முகஸ்துதி செய்யும் நபர்கள் தீயவர்களாக மாறுகிறார்கள், பெயர் தெரியாததால் தைரியமாகிறார்கள். கேலிக்குரிய ராகுல் காந்தி என்பதை ஆழமான கண்ணோட்டத்தில் பார்த்தால், தோல்வி குறித்த இந்தியர்களின் கூட்டு அச்சத்தை அது சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், திருமணத்திற்கு ராகுல் காந்தி சென்றது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெறாததால் அவர் வெட்கத்துடன் தலையை குனிந்து, மறைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.
வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள் வாழ்க்கையின் மாறுபாடுகளில் இருந்து மகிழ்ச்சியுடன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று நம்பும் போக்கு உள்ளது. 99% மனித இனம் இருளில் உழன்று கொண்டிருக்கிறது என்ற கருத்தில் அவர்கள் கடினமான ஏணியில் வெற்றியை நோக்கி ஏற முயற்சிக்கின்றனர். அருகாமையில் வெற்றி கிட்டுவதற்கான உத்தரவாதம் அங்கு இல்லை. வாங்கியதோ அல்லது மரபு வழியில் தொடர்வதோ பிரபல்யம் என்பது குறிப்பிடத்தக்க நன்மைகளை ஒருவருக்குக் கொண்டு வருகிறது: குடும்பப் பெயரானது பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் திறக்கிறது. போற்றுதல் என்பது ஈகோவுக்கு ஊக்கமளிக்கிறது, நிராகரிப்பு பற்றிய நமது உட்பொதிக்கப்பட்ட அச்சங்களுக்கு எதிராக ஒரு பெரிய பாதுகாப்பு கவசமாக அது இருக்கிறது. எனவே, நன்மைகளைக் கருத்தில் கொண்டு, அளவுக்கு மீறிய எளிமையான சிந்தனை புறந்தள்ளப்படுகிறது. 24/7 நேரமும் புகழ் வெளிச்சம் என்பது அற்புதமான சலுகைகளுக்கான நியாயமான வர்த்தகமாகும். புகழுக்கான ஆசை எங்கும் பரவி இருப்பதால், சமூகம் அரிதாகவே கடுமையான குறைபாடுகளை கண்டுகொள்கிறது.
பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் உண்மையான நட்பை உருவாக்குவது மிகவும் கடினம். முக்கியமான இணைப்புக்கான அணுகலைப் பெறுவதன் மூலம் மக்கள் உங்களைப் பற்றிக் கொள்கிறார்கள் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரகாசிக்கிறார்கள். உண்மையான உரையாடல்கள் இல்லாத வாழ்க்கையானது, துதிபாடும் அடிமைகளால் சூழப்பட்டால், அது ஒரு பயங்கரமான சலிப்பாக இருக்கும். புகழின் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவென்றால், யாரும் உங்களிடம் உண்மையைச் சொல்லவில்லை என்பதுதான். எனவேதான் உங்கள் சொந்த மகத்துவத்தின் கட்டுக்கதையை நீங்கள் நம்பத் தொடங்குகிறீர்கள். தன்னைத்தானே உயர்வாக எண்ணிக்கொள்ளும் அந்த கிறுக்குத்தனம் நயவஞ்சகமாக உங்களிடம் பரவும் உங்களையே கைப்பற்றக்கூடும். டென்சல் வாஷிங்டன் சமீபத்தில் வில் ஸ்மித்திடம் “மிக உயர்ந்த தருணத்தில்தான் பிசாசு போன்ற கெட்ட குணம் தேடி வரும் ,அப்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ” என்று சொன்னார்.
முரண்பாடுகள் போதுமானது, உண்மையிலேயே பிரபலமானவர்கள் கலவையான உணர்வுகளுடன் இருப்பர், மாறாக, தொடர்ந்து புகழ்வதன் மூலம் கலக்கமடைந்திருப்பர். டெய்லர் ஸ்விஃப்ட் தனியாக வாகனம் ஓட்ட வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்று கூறியுள்ளார். ஒரு தீவிரமான விளக்கமான நேர்காணலில், பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான ஆடைகளை ஏன் அணிகிறார் என்று விவரித்தார், இதன் மூலம் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஊடக வெளிச்சத்துக்கு “சுவாரஸ்யமற்றதாக” இருக்கும் என்று நம்புகிறார். இளவரசர் ஹாரி இங்கிலாந்திலிருந்து தப்பி ஓடினார். பிரபலத்தின் உச்சத்தில், ரசிகர்களைச் சூழ்ந்துள்ள வெறித்தனத்தால் அதிருப்தியடைந்த பீட்டில்ஸ் ரிஷிகேஷில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தனிமையில் ஒதுங்கினார். இவர்கள் அனைவரும் பிரபலம் என்றால் நிறைய (வெறுமையான) கவனத்தைப் பெறுகிறீர்கள் என்பதை கண்டறிந்துள்ளனர். காலப்போக்கில் பழைய பாணியில் கட்டமைக்கப்பட்ட நெருங்கிய உறவுகளால் பாராட்டப்படுவதால் வரும் நல்வாழ்வு உணர்வுகளுடன் இது பொருந்தாது,.
இந்த நாட்களில் எல்லோரும் பிரபலமாக இருப்பது மிகவும் எளிதானது. தனித்துவம் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கூகுள் ட்ரெண்ட்ஸை ஒளிரச் செய்யும் போது, யாரேனும் இருக்கிறீர்களா? என விரைவிலோ அல்லது பின்னரோ கேள்வி எழும். பிரபலத்தின் மையப்புள்ளியாக மலிவான சிலிர்ப்பை பலர் அனுபவிப்பது நல்லது. ஒருவேளை, கௌரவத்திற்கான ஏக்கம் திருப்தியடைந்த பிறகுதான், அதை முற்றிலுமாக நிராகரிக்கும் தெளிவு ஒருவருக்கு வரும்..
எழுத்தாளர் ஹட்கே ஃபிலிம்ஸ் இயக்குனராவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“