நரேந்திர மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போல எனக்கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசிய பேச்சை விட அவர் பேசிய இடத்தினால்தான் பரபரப்பு கூடியிருக்கிறது.
நாட்டின் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த பணிகளின் சிறப்புகளை ஆவணப்படுத்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மத்தியில் ரஜினி இப்படி பேசியது தான் பரபரப்புக்குக் காரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் அமைப்புச் சட்டம் 370 ன் ஷரத்துகளை விலக்கி கொண்டதற்கு ரஜினி மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நடவடிக்கையில் மோடி அரசின் சாதுர்யத்தையும் தைரியத்தையும் பாராட்டிய ரஜினி, அவர்களது நாடாளுமன்ற உரைகளையும் பாராட்டினார். மேலும் மோடி அமித்ஷாவை கிருஷ்ணன் – அர்ஜுனன் என்ற இரட்டையர் என பாராட்டினார். இந்தப் பாராட்டுதான் தற்போது அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த எதிர்வினைகளையும் உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்திலும் 370 நீக்கத்துக்கு பேராதரவு இருக்கிறது என்பது ரஜினி மூலம் நாட்டின் பிறபகுதிகளுக்கும் சென்றுவிட்டது. இதைத்தான் தமிழ் போராளிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்குப் பெயர் பெற்ற காஷ்மீரில் இப்படி ஒரு சாதனை என்பது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
கடந்த டிசம்பரில் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்த போது பாஜகவின் செல்வாக்கு குறைகிறது என விமர்சித்தார் ரஜினி. ரஜினியை பாஜகவாகப் பார்க்கும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் அதை கொண்டாடினர். நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினி ஒதுங்கிவிட்டார். இதுவும் மோடி எதிர்ப்புக்கு உதவி செய்தது. எந்த நிலையிலும் ரஜினி மோடிக்கு ஆதரவாக வந்துவிடக்கூடாது என்பதில் பலர் அக்கறை காட்டி வந்தனர். சட்டமன்றத் தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறிவந்த ரஜினியை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னான ரஜினியின் இந்த திடீர் பிரவேசம் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
370 இன் ஷரத்துகள் நீக்கப்பட்டபோது,
தமிழக எம்பி ஒருவரை தவிர மற்ற அனைவரும் நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆதரித்த அதிமுக வின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. எதிர்ப்புக் குரல் மட்டுமே தமிழகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்தது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவு என்பது எதிர்ப்புக் குரலை மட்டுப்படுத்தி தமிழகத்தின் ஆதரவாய் பார்க்கபட்டுவிட்டது. இதுவே போராளிகளின் அதிர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இதன் காரணமாக என்ன பேசுவது என்று தெரியாமல் ஆளாளுக்கு எதிர்ப்புக் குரல் மட்டும் கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘இனி என்ன நடக்கும் பாஞ்சாலி சபதமா கீதாஉபதேசமா’ என்று கேட்கிறார். மகாபாரத யுத்தம் தர்ம யுத்தம், அதன் கதைகள் தாம் இவை இரண்டும் என அவர் புரிந்து கொள்ளாதது வேடிக்கை.
* மோடி -அமித் ஷாவுக்கு ஆதரவாக, யார் குரல் கொடுத்தாலும், குரல் கொடுத்தவருக்கு எதிராக அணி சேர்ந்து தாக்குதல் நடத்துவது தமிழக வழக்கமாகி இருக்கிறது.
* கிருஷ்ணன் உபதேசித்தான், அர்ஜுனன் செய்து முடித்தான். இங்கே இருவரும் செயல்வீரர்கள். அப்படியானால் யார் அந்த கிருஷ்ணன்?
பல கோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்களை எப்படி கிருஷ்ணராகவும்அர்ஜூனனாகவும் கூற முடியும் என்கிறார் கே எஸ் அழகிரி. எந்த உரிமையும் பறிக்கப்பட வில்லை, மாறாக சலுகை என்ற பெயரில் இஸ்லாம் அல்லாதவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையின் காரணமாக அந்த சலுகைகள் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன என்பதை அழகிரி உணர்ந்து கொள்ள வேண்டும். மகாபாரதமும் உரிமைக்கான யுத்தம் என்பதுதான் இங்கு சுவாரஸ்யம்.
பக்தி இலக்கியம் படித்துள்ள ரஜினி வரலாற்றையும் படிக்க வேண்டும் என்கிறார் கார்த்தி சிதம்பரம். இவர் தனக்கு எந்த வரலாற்று அறிவும் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தியதில்லை.
ஏற்கனவேதான் போர் தொடுத்தாகி விட்டதே என்கிறார் சீமான். யார் மீது என்ற கேள்விக்கு, அது உங்களுக்கே தெரியும் என்று பதிலளிக்கிறார். இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் சினிமாத் திறன் சீமானுக்கு என்றுமே உண்டு. யதார்த்தத்தில் ஒரு துளி ரத்தம் கூட சிந்தப்படாமல் காஷ்மீர் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்குப் பெயர் பெற்ற காஷ்மீரில் இப்படி ஒரு சாதனை என்பது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
பொதுவாக தமிழக சூழலில் பாஜகவுக்கு ஆதரவாக, மோடி -அமித் ஷாவுக்கு ஆதரவாக, யார் குரல் கொடுத்தாலும், குரல் கொடுத்தவருக்கு எதிராக அணி சேர்ந்து தாக்குதல் நடத்துவது தமிழக வழக்கமாகி இருக்கிறது. பாஜக காலூன்ற கூடாது என்று பேசி, வளர்ந்து விட்ட பாஜக மீது வளரவில்லை என்ற மாயக் கருத்தை உருவாக்கும் ஒரு கூட்டம் இதை திட்டமிட்டு செய்து வருகிறது.
தமிழகத்திலும் 370 நீக்கத்துக்கு பேராதரவு இருக்கிறது என்பது ரஜினி மூலம் நாட்டின் பிறபகுதிகளுக்கும் சென்றுவிட்டது. இதைத்தான் தமிழ் போராளிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
சரி முக்கிய விஷயத்துக்கு வருவோம். இவர்கள் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போல இரட்டையர் என்று கூறிய ரஜினி, ஆனால் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்றுதான் புரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரை இருவருமே அர்ஜுனர்கள் தான், கிருஷ்ணன் வேறு இடத்தில் இருக்கிறார் என்று விளக்கமளிக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன்.
ஆம், அப்படித்தான் தோன்றுகிறது கிருஷ்ணன் உபதேசித்தான், அர்ஜுனன் செய்து முடித்தான். இங்கே இருவரும் செயல்வீரர்கள். அப்படியானால் யார் அந்த கிருஷ்ணன்?
இந்த அர்ஜுனர்களுக்கு கொள்கைப் பிடிப்பும் செயல்திறனும் அளித்த, அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கும் ‘அந்த நாகபுரத்து ‘ இயக்கத்திலிருந்து தான் அர்ஜூனர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது அனைத்து கட்சியினருக்கும் தெரியுமே!
அவர்களின் 70 ஆண்டு தவம் அல்லவா காஷ்மீரை இன்று இந்தியாவுடன் முழுவதுமாக இணைத்திருக்கிறது!
( கட்டுரையாளர் நம்பி நாராயணன், பாஜகவின் இருவார இதழான ஒரேநாடு பத்திரிகையின் ஆசிரியர் )