scorecardresearch

மதசார்பற்ற ஜனநாயகத்துக்கு உள்ள அச்சுறுத்தலை எதிர்ப்போம் : இந்தியாவை பாதுகாப்போம்

இந்தியா 21ம் நூற்றாண்டில் ஒரு சக்தி வாய்ந்த நாடாகும் அளவுக்கு திறன் பெற்ற நாடாகும். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடுமாகும்

delhi riots india deaths, riots in new delhi, india citizenship law, caa protest in india, ban ki moon india caa
delhi riots india deaths, riots in new delhi, india citizenship law, caa protest in india, ban ki moon india caa

சுதந்திர, ஒருங்கிணைந்த, கூட்டு அணிதிரட்டல் மூலமே இந்தியா அமைதி, நீதி மற்றும் வளத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உங்கள் நாட்டை உருவாக்கியவர்கள் அதை நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, அவர்களின் கனவுகளை உங்கள் நெஞ்சங்களில் சுமப்பது அவசியம்.

பான் கீ – மூன்

இந்தியா 21ம் நூற்றாண்டில் ஒரு சக்தி வாய்ந்த நாடாகும் அளவுக்கு திறன் பெற்ற நாடாகும். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடுமாகும். அதன் திறமை வாய்ந்த குடிமக்கள், உலகளவில் வியாபாரம், கல்வி, தொழில்நுட்ப துறை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதித்து வருகின்றனர். அதன் அகிம்சை வழி மற்றும் ஜனநாயகத்தின் பாரம்பரியம் என இந்தியா இந்த உலகத்திற்கு கற்பிக்க வேண்டியது அதிகம் உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை நான் உள்பட, அதன் நண்பர்கள் அனைவரையும் பெருத்த ஏமாற்றமடையச்செய்தது.

இந்திய சுதந்திரபோரில் தலைமை ஏற்ற மகாத்மா காந்தியால், கவரப்பட்டு அவரை எடுத்துக்காட்டாகக்கொண்டு, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் அவரை பின்பற்றி வருகின்றன. அவரின் மிகச்சிறந்த அபிமானி நெல்சன் மண்டேலா, அவரை தனது உடன்பிறந்தவராக அங்கீகரித்து, பாகுபாட்டையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்தவர். 2008ம் ஆண்டு மண்டலோவுக்கு காந்தி பரிசு கொடுக்கப்பட்டபோது, இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றாக இணைந்து பணி செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் மற்றும் சமஉரிமையும் சாத்தியமாகும் என்று பேசினார். இப்போதும் அவரின் வார்த்தைகள் உண்மையை உரைக்கின்றன.

உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் மண்டேலா நிறுவய, சுதந்திர உலக தலைவர்கள் குழுவின், மூத்தவர்களுக்கான அமைப்பின் துணைத்தலைவராக இருந்து பேசும்போது, இன்று குறுங்குழுவாத வன்முறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியல், காந்தியின் கனவுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று உணர்கிறேன். டெல்லியில் ஏழைகள், பணியாளர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தாக்குதலையும், பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை வழியாக மறுவரையறை செய்யப்பட்ட இந்திய குடியுரிமை மற்றும் அதற்கு தகுதியானவர்களையும் பிரித்துப்பார்க்க முடியாது.

இந்தியாவின் சட்டப்பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும்போது, இந்த நடவடிக்கைகள் அதற்கு பொருந்தாது. மேலும் இவை இந்தியாவின் எதிர்கால ஜனநாயகத்தின் மீதும், உலகத்தில் அதன் இடத்தையும் குறித்து கேள்வி எழுப்புகின்றன. சுதந்திர தேசமான இந்தியாவில் வன்முறை பிறப்பதற்கு அதன் கடுமையான ஏகாதிபத்தியம் தான் சூத்திரிதாரி. இன்று இந்தியர்கள் மட்டுமே அவர்கள் நாட்டின் போக்கிற்கு காரணமாகிறார்கள். இவ்வாறு இரு மதக்குழுக்களுக்கிடையே போரை மூட்டிவிட்டு, சில இந்தியர்களை மட்டும் இரண்டாம்தர குடிமக்களாக்கி, இந்தியா, அதன் வளர்ச்சிக்கான சவால்களை கடந்து வருவதற்கு வழிகள் இல்லை. இது பிரதமர் மோடி அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளின் துல்லியமான குறிப்போ என்று நான் அஞ்சுகிறேன். மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்கும் குடியுரிமை, ஒரு மதத்தை சேர்ந்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்றால், அண்மையிலான மனித வரலாற்றின் இருண்ட காலங்களை அது நினைவுபடுத்துகிறது.

நான் உள்பட அனைத்து சர்வதேச கண்காணிப்பாளர்களும், மாட்டிறைச்சி உண்பது, பசுக்கொலை, இனவாதத்திற்கு இடையில் தனிப்பட்ட உறவுகளை மேற்கொள்வது உள்ளிட்டவை அதிகரித்து வருவதற்கு, வதந்திகளின் அடிப்படையில் முஸ்லிம்களை தன்னிச்சையாக தாக்குவது குறித்து இந்தியாவை எச்சரித்தோம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்துடன் ஒட்டியிருப்பது மற்றும் சமூகத்தின் ஜனநாயக தன்மை ஆகியவை மீது தீங்குவிளைவிக்கும். மேலும் இந்தியா தொடர்ந்து பாகுபாடு, தேசியவாதம் என்ற இதே பாதையில் பயணிக்குமெனில், அது சமூக, அரசியல் தளங்களில் பேரழிவை ஏற்படுத்துவதுடன், நாட்டின் வளர்ச்சியை பல தலைமுறைகளுக்கு பின்னோக்கிச் இட்டுச் செல்லும். புதிய குடியுரிமை திருத்தச்சட்டம் முதலில் சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அஸ்ஸாமில் நடந்த போராட்டம் நாடு முழுவதையும் எச்சரித்த முன்னோடியாகும். அது குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறுத்திவிட்டு, அதன் குடிமக்களிடம் கருத்து கேட்கவும் அறிவுறுத்தியது. 1.9 மில்லியன் இந்துக்களும், முஸ்லிம்களும் அடங்கிய மக்கள் அஸ்ஸாமில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் மாநிலமற்றவர்கள் என்று 2021ம் ஆண்டு நடக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் ஆகிய இரண்டிற்கும் எதிரான போராட்டங்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரையும் இணைத்தது. மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குரல் கொடுத்தனர். ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் கூடிய இந்த கூட்டம், அண்மையில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும், டெல்லியில் பணிபுரியும் சிவில் சமூகத்திற்கான ஆதாரம்.

நானும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் எல்டர் க்ரோ ஹெர்லம் ப்ரண்ட்லாண்டும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லியில் உள்ள மொகல்லா மருத்துவமனைகளை பார்வையிட்டோம். அதன் வசதி, மதம், வர்க்கம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, அனைவருக்குமான, இலவசமான, உலகத்தரம் வாய்ந்த சேவையால் கவரப்பட்டோம்.

சுதந்திர, ஒருங்கிணைந்த, கூட்டு, அணிதிரட்டல் மூலமே இந்தியா அமைதி, நீதி மற்றும் வளத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உங்கள் நாட்டை உருவாக்கியவர்கள் அதை நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, அவர்களின் கனவுகளை உங்களில் நெஞ்சங்களில் சுமப்பது அவசியம்.

இக்கட்டுரையை எழுதியவர் உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் மண்டேலா நிறுவிய, சுதந்திர உலக தலைவர்கள் குழுவின், மூத்தவர்களுக்கான அமைப்பின் துணைத்தலைவர்

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Riots in new delhi india citizenship law caa protest in india ban ki moon india caa