சமஸ்கிருத மொழி இந்தியாவில் அழியும் அபாயம் - மொழி ஆர்வலர்களே கவனம்
Sanskrit in india : சமஸ்கிருதம் குறிப்பிட்ட சிலரால் பேசப்படுவதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்ட சில பண்டிதர்களே காரணம். அவர்கள் சமஸ்கிருதத்தை வெகுஜனங்களை அடைய விடமாட்டார்கள்.
sanskrit language, sanskrit in india, india sanskrit pandits, sanskrit endangered language, indian express
கீதா சௌத்ரி
Advertisment
மொழி குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்க முடியாது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிகளை பேசினாலும் தங்களுக்குள் புரிதலுடன் இருக்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் ஒரு கலாச்சார பிணைப்பு. அது அவர்களை பிரிக்காது. முற்காலத்தில், இந்துக்கள் ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசியிருந்தார்கள் என்றால், இந்தியா, பழமொழி பன்முகத்தன்மையை இழந்திருக்கும். அல்பேருணி காலத்தில் இருந்து ராம் மோகன் ராய் காலம் வரை, இந்திய முஸ்லீம்கள் சமஸ்கிருதம் கற்பதையும், இந்துக்கள் பாரசீகம் படிப்பதையும் பார்த்திருக்கிறது. இன்று ஆங்கிலம் பரவலாகப் பேசப்படும் மொழியாக இருக்கிறது. அமெரிக்கர்கள், பிரிட்டிஷார், ஆஸ்திரேலியர்கள் மற்றும் கனடாகாரர்களைவிட இந்தியர்கள் ஆங்கிலத்தின் மீது உரிமை கோருகிறார்கள். ஒரு முஸ்லீம் சமஸ்கிருதம் கற்றுக்கொடுப்பதோ, ஒரு இந்து, அரபிக் கற்றுக்கொள்வது இந்தியாவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisement
சமஸ்கிருதம் குறிப்பிட்ட சிலரால் பேசப்படுவதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்ட சில பண்டிதர்களே காரணம். அவர்கள் சமஸ்கிருதத்தை வெகுஜனங்களை அடைய விடமாட்டார்கள். அதனால், பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளில் பிரெஞ்சுவைப்போல், மேற்காசியாவில் அரபிக்கைப்போல், இந்தியாவில் சமஸ்கிருதம் முதல் மொழி கிடையாது. வெகுஜன மக்களால் பேசப்படாத ஒரு மொழி, இயற்கையாகவே அழிந்துவிடும். சமஸ்கிருதத்தை அனைவரிடமும் பரப்பாவிட்டால், பிறந்த நாட்டிலே அது அழியக்கூடிய நிலையை அடையும்.
நல்லவேளை நான் இந்தியாவில் பாரசீக மொழி படிக்கும் இலக்கிய மாணவி ஆவேன். இந்த துணை கண்டத்திலே உயர்ந்த இலக்கிய வளம் கொண்ட மொழியாக பாரசீகம் உள்ளது என நான் நினைக்கிறேன். நிறைய பண்டிதர்கள் பாரசீக மொழி ஆய்வாளர்களாக முகலாயர்கள் காலத்தில் இருந்துள்ளனர். அதில் சந்திரா பான் பிராமின், மதுரா தாஸ், வரசடமால் சாயல்கொட்டி, பிந்த்ராபேன் தாஸ் குஷ்கு, லக்ஷ்மி நாராயண சாபிக் ஔரங்காபாத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் வெகு சிலரே இருந்துள்ளனர். அதேபோல், கீதை, ராமாயணம், மகாபாரதம், உபநிடதங்கள் போன்ற சமஸ்கிருத பாடங்களும் பாரசீகத்தில் முஸ்லிம் ஆய்வாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சமஸ்கிருத மொழியில் இருந்த நிறைய பாடங்கள் தற்போது அம்மொழியில் இல்லை. இதை பாரசீகத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களில் இருந்து அறிய முடிகிறது. கற்றல் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இனம், மதம், ஜாதி, நிறம் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி, கல்வி கற்கவேண்டும் என்பவர்களை சரஸ்வதி ஆசிர்வதித்துள்ளார். அதனால்தான் அல்பேருணி சமஸ்கிருதமும், ராம் மோகன் ராய் அரபிக் மற்றும் பாரசீகமும் கற்க முடிந்தது.
மிர்சா காலிப் ஒரு சமஸ்கிருதவியலாளர் என்று கூறுவது மிகக்கடினம். ஆனால் பனாரஸ் இந்து பல்கலைக்கழக சமஸ்கிருத துறையில், இன்று பைரோஸ்கானை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரைவிடவும் அவருக்கு சமஸ்கிருத கலாச்சாரம் குறித்த சிறப்பான புரிதல் இருந்தது. பாரசீக மொழியில் கோயிலின் ஒளி என்ற அவரது கவிதை பனாரசுக்கு ஒரு வண்ணமயமான பாராட்டு. அதில், இந்துக்களின் ஜெபமாலையில் உள்ளதைப்போல், 108 ஈரடி கவிதைகள் உள்ளன. இந்த கவிதை பனாரசின் அழகிய இந்து, பிராமணர்களின் கோயில்கள் மற்றும் மற்ற வழிபாட்டு சிலைகளின் நிழல் கங்கையில் விழும் அழகை குறித்து இயற்றப்பட்டதாகும். அவர் 1827ம் ஆண்டு கொல்கத்தா வரும் வழியில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் தங்கினார். அவர் சங்கு ஊதுபவர்களின் நகரத்தை இந்தியாவின் மெக்காவாக பார்த்தார்.
பழங்காலம் முதல் சமஸ்கிருதம் இந்தியாவின் முக்கிய மொழியாகும். அதில் அதிக அறிவும், ஞானமும் உள்ளது. இரானியர்களும், அரேபியர்களும் பழங்காலத்திலும், இடைக்காலத்திலும், ஐரோப்பியர் நவீன காலத்திலும், ஆர்வத்துடன் சமஸ்கிருதத்தின் பாரம்பரிய பாடங்களை மொழிபெயர்த்தனர். இதை செய்வதன் மூலம் அவர்கள் சமஸ்கிருதத்தை அவமதிக்கவில்லை. மாறாக, சமஸ்கிருத பண்டிதர் செய்யாமல் விட்டதை சர்வதேச அளவிற்கு எடுத்துச்சென்று மரியாதை செய்துள்ளனர். சமஸ்கிருதம் பெரியளவில் பிரபலமடையாததற்கு காரணம் அவர்களின் பழமைவாதமே. இதனால்தான் சமஸ்கிருதம் இந்திய எல்லையை கடக்கவில்லை. நாகரீகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் வாகனமாக அமையவில்லை.
இந்தியர்கள் அடிக்கடி “வசுதெய்வ குடும்பகம்” என்பதை இந்திய நாகரிகம், அவர்களின் பரந்தமனப்பான்மை, பெருந்தன்மை, பண்பாடு ஆகிவற்றை குறிப்பதற்காக மேற்கோள் காட்டுவார்கள். சமஸ்கிருதத்தின் வளர்ச்சி ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டால், அது தொடர்ந்து வெல்லும்.
எந்த துறவியைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தாலும் அது அவரது அறிவை குறித்து மட்டுமே இருக்க வேண்டும்யன்றி அவரது ஜாதியை பற்றியதாக இருக்கக்கூடாது என்று காபிர் தாஸ் சரியாக கூறியுள்ளார்.
தமிழில் : R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil