Advertisment

லாக்-அப் மரணங்களை தடுக்க டிகே பாசு வழக்கின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்

துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த புள்ளிவிவரங்கள் நன்றாக இருக்கின்றன.ஆனால், பரிதாபமாக குறைந்த அளவே இருக்கின்றன. வெற்றிகரமாக பணீ நீக்கம் செய்யப்படுவது கூட இப்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sathankulam, custodial deaths, tamilnadu news live updates

sathankulam, custodial deaths, tamilnadu news live updates

தண்டனை நடவடிக்கைகள், கடைசி மனிதனுக்கும் அமல்படுத்துதல் என்ற, டி.கே.பாசுவின் நோக்கத்தை செயல்பாட்டுக் கொண்டு வருவதிலும், கடைகோடி வரை அமல்படுத்துவதும், துறைகளுக்கு உள்ளே உள்ள ஒற்றுமையை உடைப்பதில், நெறிகளை மீறி செயல்படும் போலீஸ்காரர்கள், விரைவான உறுதி, திறமையான துறைசார் வற்புறுத்தல் நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்கு என இந்த நாட்டின் மேலும் பல விஷயங்களைப் போலவே நாம் எங்கே நாம் தோற்றுப்போனோம்.

Advertisment

அபிஷேக் சிங்வி

தற்போதைய சூழலில் தமிழகத்தில் நடந்த கண்டிக்கத்தக்க லாக்-அப் மரணங்கள், இதே போன்றதொரு என்னுடைய சொந்த பழைய வழக்கை எனக்கு நினைவுப் படுத்தியது. முக்கியத்துவம் வாய்ந்த டி.கே பாசு தீர்ப்புகள் வழியே 1987-ம் ஆண்டில் இருந்து இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசகராக இருந்துவருகின்றேன். 1986-ம் ஆண்டின் புகார் தொடர்பான ஒரு கடித்துடன் தொடங்கலாம். பின்னர் இது பொது நல வழக்காக மாற்றப்பட்டு, நான்கு முக்கியமான ஒருங்கிணைந்த தீர்ப்புகளுக்கு வித்திட்டது. 1996, 2001-ம் ஆண்டில் இரண்டு முறை, மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 20 கட்டளைகளுக்கும் இது அடித்தளமாக இருக்கிறது.

கூடுதலாக, இது, ஐந்து இதரநடைமுறைகள், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற உத்தரவுகளுக்கும் வித்திடுவதாக இருந்தது. தொடர்ந்து கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நல்ல பாரம்பர்யமாக இருக்கிறது. உண்மையிலேயே டி.கே.பாசுவின் தீர்ப்புகள் ஒருங்கிணைந்த அளவில் அமல்படுத்தப்பட்டால் நடைமுறை சாத்தியத்துக்கு கொஞ்சம் அதிகமான மதிப்பு வாய்ந்த தடைகளற்ற சட்டவலைக் கொள்கைகளை மற்றும் லாக் அப் மரணங்கள், துன்புறுத்தல்களை குறைக்கக் கூடிய நுட்பங்களைக் கொண்டதாக அவை உருவாக்கும். தண்டனை நடவடிக்கைகள், கடைசி மனிதனுக்கும் அமல்படுத்துதல், டி.கே.பாசுவின் நோக்கத்தை செயல்பாட்டுக் கொண்டு வருவதிலும், கடைகோடி வரை அமல்படுத்துவதும், துறைகளுக்கு உள்ளே உள்ள ஒற்றுமையை உடைப்பதில் நெறிகளை மீறி செயல்படும் போலீஸ்கார ர்கள், விரைவான உறுதி, திறமையான துறைசார் வற்புறுத்தல் நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்கு என இந்த நாட்டின் மேலும் பல விஷயங்களைப் போலவே நாம் எங்கே தோற்றோம்.

நீதிமன்றத்தின் ஆலோசகராக, இருத்தியல் குறித்த ரோமனின் குழப்பத்துடன் நாம் தொடங்கலாம்; பாதுகாவலர்களை யார் பாதுகாப்பார், மீட்பர் மட்டுமே உண்ணுபவர் என்று அழைக்கப்படும் சின்ட்ரோம் ஆக இருக்கலாம். நீதிபதி ஏஎஸ் ஆனந்த் என்னுடைய எழுத்துப்பூர்வமான தாக்கல்களை அணுகியதன் அடிப்படையில் இறுதி வரை அதை இயக்கினார். தாராளமாக பாராட்டுகளை சேர்த்தார். சித்தரவதை எப்படி ஜனநாயகத்தில் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்று கண்டறிந்தார். இங்கிலாந்தின் ராயல் கமிஷனை கண்டறிந்தார். இந்தியாவில் போலீஸ் கமிஷன், சட்டகமிஷனை கண்டறிந்தார். ஜோகிந்தர் குமார்(1994), நிலபாத்தி பெஹ்ரா (1993), போன்ற உச்ச நீதிமன்றத்தின் முற்போக்கான சட்டவழக்குகளின் முக்கிய சிக்கல்களை புரிந்து கொண்டு, இன்றும் கூட கரையாமல் இருக்கும் முக்கியமான விஷயங்களை பிடித்துக் கொண்டார். ஒப்பீட்டளவில் முறையான கைதுக்குப் பின்னர், சிறிதளவு அதிகார மீறல் ஏற்படுகிறது. கைது பதிவு செய்யப்படுவதற்கு முன்புதான் பெரும்பாலான அச்சுறுதல்கள் நிகழ்கின்றன. கைது காண்பிக்கப்பட்ட பின்னர்தான், பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மோசமான இந்த அர்த்தமற்ற , தீர்வற்ற சிக்கலான நிலையைத்தான் போலீஸ் படைகள் உபயோகிக்கின்றன.

1996-ம் ஆண்டின் முதல் 11 கட்டளைகள், ஆகையால், செயல்முறை பாதுகாப்புகளில் கவனம் செலுத்துதல்; அனைத்து அதிகாரிகளும் தங்கள் பெயரை, அடையாளத்தை குறிக்கும் பட்டைகளை அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கான மெமோ அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். கைது செய்யப்படும் இடம், கைது செய்யப்படும் நேரம் அடங்கிய அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது அந்த பகுதியை சேர்ந்த மதிக்கத்தகுந்த ஒருவரின் சான்று பெற வேண்டும். கைது செய்யப்படும் இடம் குறித்து குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது நண்பருக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும். அருகாமையில் உள்ள சட்ட உதவி அமைப்புக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்ட வேண்டும். கைது செய்யப்பட்டவர், டி.கே. பாசுவின் உரிமைகள் பற்றித் தெரிந்துகொள்ள வகை செய்ய வேண்டும். போலீஸ் பதிவில் இது போன்ற அனைத்து இணக்க விதிமுறைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். கைது செய்யப்படும் நபருக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு மெமோவில் கைது செய்யப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இது போன்ற அனைத்துத் தகவல்களும் மையப்படுத்தப்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அவசியம் மையப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இதைனை மீறுவோர், மீது கடுமையான துறைரீதியான குற்றநடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கூடுதலாக அவமதிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் தீர்வுகளுக்கு இவை மாறானது அல்ல.

இந்த முதல் தீர்ப்பு மேலும் செல்கிறது. கொள்கையைப் பயன்படுத்தும்போது, தீர்வுகள் இல்லாத உரிமைகள் மாயமானவை மற்றும் பயன்றறவை. எனவே, மேற்குறிப்பிட்ட அனைத்து தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் இத்துடன் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அரசியலமைப்பு சித்தரவதைக்கு முழு சிவில் நாணய சேத உரிமைகோரல்கள் மாற்றாக இருக்கக் கூடாது.

விரிவான தீர்ப்புகளுக்கு இடையேயான பத்தாண்டுகள் கண்காணிப்புகளுக்கான முக்கியமான உத்தரவுகள் மற்றும் இணக்கமான நெருக்கத்துடன் கழிந்தன. ஒவ்வொரு மாநிலமும்,யூனியன் பிரதேசங்களும் நம்முடைய குழுவால் எளிதாக்கப்பட்ட ஒப்பீடுகள் மற்றும் இணைப்புகளை முன்பே வடிவமைக்கப்பட்ட விளக்கப்படங்கள் மூலம் தகவல்களை வலுக்கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். மாநிலங்களிடம் இருந்து அனைத்து தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் பல ஒத்திவைப்புகளுக்குப் பின்னர் பெறுதல் என்பது இந்தியா போன்ற அளவிலான நாட்டில் உச்சநீதிமன்றத்தின் சராசரி சாதனை அல்ல. அதன்பின்னர், அவைகள் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் வாயிலாக மற்றும் பொதுவாக மாநிலங்களுக்கு ஏற்ற உத்தரவுகள் பின்னர் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த முன் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் காணப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

ஆகவே, 2015-ம் ஆண்டு வரையிலான எட்டு இதர இடைக்கால உத்தரவுகள் ஒவ்வொரு அளவிலும், துல்லியமான விரிவான இணக்க அறிக்கைகளை கோரின. அவை வெட்க கேடான குறைபாடுகள், தாமதமான பதில்களாக இருந்தன. எங்கெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் காதுகளாகவும், கண்களாகவும் இருந்து கண்காணித்து அறிக்கை தரும் சிறப்பு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் எந்த ஒரு மாநில மனித உரிமை அமைப்பும் உத்தரவிடலாம். மாநில மனித உரிமை ஆணையம் இல்லாத இடங்களில் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் நிர்வாக ரீதியாக கண்காணிக்கலாம். ஏற்கனவே இருக்கும் எளிமையை இது விரிவாக்கும். குற்றவியல் நடைமுறை சட்டப்படியான மாஜிஸ்திரேட் விசாரணைக்கான ஆற்றல் மிகுந்த சக்திகள் குறைபாடு அற்றவையாக, நான்கு மாதங்களுக்குள் நிறைவு பெறுவதாக இருக்க வேண்டும்.

விரிவாக்கத்துக்கான காரணங்களை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் பதிவுசெய்யா விட்டால், இது இந்தியா முழுவதும் விரைவாக அமைக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு உத்தரவிடும்.

மூன்றாவது கடைசி கட்டம் 2015-ல் முடிவு பெற்றது. முரண்பாடாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இன்னொரு தலைமை நீதிபதி தாக்கூர், மாநில மனித உரிமை கமிஷன்களுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனால், மேலும் முக்கியத்துவமானது என்னவென்றால்,ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் பெரும்பாலான பதவிகள் நிரப்பப்பட வேண்டும். தேசிய மனித உரிமை சட்டம் பிரிவு 30-ன் படி மனித உரிமை நீதிமன்றங்களை அமைப்பதற்கான அதிகாரம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை எனில், செயல்படுவதற்காக உத்தரவிடப்பட வேண்டும். அனைத்து சிறை சாலைகளிலும் ஒரு ஆண்டுகுள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற உத்தரவு அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் என்னால் கேட்கப்பட்டது. இதனை கட்டாயமாக்கும் உத்தரவாக வகுக்காமல் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என்று நீதிமன்ற அறிவுரையாக வழங்கப்பட்டது. சிறைச்சாலைகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் அதிகாரப்பூர்வமற்ற பார்வையாளர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். வழக்குத் தொடுக்க வேண்டியதும், துறை ரீதியான நடவடிக்கையும் தயக்கம் இன்றி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு போலீஸ் மற்றும் அவர்களின் அரசியல் அதிகாரம் படைத்த தலைவர்கள் என இருவரின் அறியாமை மற்றும் பலத்தை கண்டு நான் வியக்கின்றேன். டி.கே பாசு தீர்ப்பு போலீஸ் ஸ்டஷனுக்கு மட்டும்தான் நீதிமன்ற காவலுக்கு இல்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர். இது ஒரு பரிகாசமாகும். பரிதாமான விலகலும் கூட. டிகே பாசு அனைத்தையும் உள்ளடக்கியதுதான், எந்த வித ஒட்டைகளும் இல்லாதது. காவலில் வைப்பதற்கான வகைகளில் வேறுபாடுகள் இல்லை. நமது ஜனநாயக வரி என்பது அதிகமாக உயரமாக இருக்கலாம். நீடித்ததாக இருக்கலாம். 1985-ம் ஆண்டின் சட்ட கமிஷன் அறிக்கையில், நமது ஆதாரங்கள் சட்டத்தில் பிரிவு 114-பி-யை சட்டமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2017-ம் ஆண்டு கடைசியில் ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் காவலில் உள்ள எவரேனும் இறந்து விட்டால் அல்லது சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டால், காவல்துறையினருக்கு எதிரான குற்றசாட்டுக்கு மறுக்கக் கூடிய ஊக்கத்தை மேற்கொள்ளுதல் என்பது இனும் சட்டமாக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து மோசமான விகிதத்தை அடைந்திருக்கிறது.

உண்மையான நம்பிக்கை என்பது கிட்டதட்ட இல்லாததுதான். துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த புள்ளிவிவரங்கள் நன்றாக இருக்கின்றன.ஆனால், பரிதாபமாக குறைந்த அளவே இருக்கின்றன. வெற்றிகரமாக பணீ நீக்கம் செய்யப்படுவது கூட இப்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும்அதிக காலம் தேவையில்லை. நீதிமன்றத்தின் கண்காணிப்பில், ஒவ்வொரு மட்டத்திலும் சுதந்திரமான நடுநிலையான பொது சமூகத்தின் தனிநபர்கள்மூலம் டிகே பாசுவின் பரிந்துரைகள் கண்காணிக்கவும்,அமல்படுத்தப்படவும் வேண்டும்.இந்த வேதனையை குறைக்க இதுவே போதுமானது. துரதிஷ்டவசமாக அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் அருகில் இருப்பதாக தெரியவில்லை.

இந்த கட்டுரை முதலில் கடந்த 1-ம் தேதியிட்ட நாளிதழில் “Guarding the guardians” என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்னாள் தலைவர், இந்தியாவின் முன்னாள் ஏஎஸ்ஜி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர். லாக் அப் மரணங்கள் மற்றும் அத்துமீறல் விஷயங்கள் தொடர்பாக 1987-ம்ஆண்டில் இருந்து நீதிமன்றத்தின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Custodial Murders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment