உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மீண்டும் தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தீர்ப்பு வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின்னும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
ப.சிதம்பரம்
கட்டுரையாளர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.
தோசை வெறியர்களுக்காக ஒரு கடை
2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை ஜம்மு& காஷ்மீர் முற்றிலுமாக மூடப்பட்டது. அந்த இரவில்தான் மனித உரிமை மீதான தாக்குதல் தொடங்கியது. கவர்னர், ஆலோசகர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் உள்ளிட்ட புதிய குழு மாநிலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இந்திய அரசியல் சட்டத்தின் மீதான மரியாதையில் குறைவு ஏற்பட்டது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் போன் இணைப்புகள், இன்டர்நெட் இணைப்புகள், தரைவழி போன்கள் துண்டிக்கப்பட்டன. மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசுத்தலைவர் அரசியல் சட்ட உத்தரவு 272-ஐ பிறப்பித்தார். இதன் மூலம் ஜம்மு& காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் பறிக்கப்பட்டன. அந்த மாநிலத்தை யூனியன் பிரதேச பகுதிகளாக மாற்றக் கூடிய அனைத்து இந்திய அரசியல் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டன. அதே நாளில் மாவட்ட நீதிபதிகள் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 144ஐ அமல்படுத்தினர். மக்கள் நடமாடுவதற்கும், கூடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். எந்த வித குற்றசாட்டுகளும் இல்லாமல் மூன்று முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர். இன்னும் கூட அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, குலாம் நபி ஆஷாத் எம்.பி., காஷ்மீர் டைம்ஸ் பொறுப்பாசிரியர் அனுராதா பாசின் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த கருத்தைத் தவிர மனுதார ர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. தமது செய்தித்தாளை பிரசுரிக்க முடியவில்லை என்றும் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் அனுராதா பாசின் வாதிட்டார்.
2019-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், தேசிய நலன், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. ஆனால், இயல்புநிலை திரும்பவில்லை. சில கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மத்திய அரசு அளித்த தகவலை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. இருப்பினும், மத்திய அரசு, மாநில அரசுகள் இதனை ஏற்று எந்த இடைகால உத்தரவையும் பிறபிக்கவில்லை. ஜம்மு&காஷ்மீரின் நிலை குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
விவகாரங்கள், பதில்கள்
வழக்கின் விசாரணை பல நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்புக்காக வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 27-ம்தேதி ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 10ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஐந்து விவகாரங்களை நீதிமன்றம் பதிவு செய்தது. அந்த விவகாரங்களை சுருக்கமாக இங்கே குறிப்பிடுகின்றேன். இதற்கு நீதிமன்றம் கொடுத்த பதில்கள்.
1.பிரிவு 144-ன் கீழ் உத்தரவுகளை பிறப்பிப்பதில் இருந்து அரசு விலக்குப் பெற முடியுமா?
பதில்; இல்லை
2. பேச்சு சுதந்திரம், இணைய அடிப்படை உரிமை மீது வணிகத்தை முன்னெடுபதற்கான சுதந்திரம் இருக்கிறதா?
பதில்; ஆம். பிரிவு 19(1)(a) மற்றும் (g) இரண்டும், இணைய முடக்கத்துக்கான ஒவ்வொரு உத்தரவும் ஏழு நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட வேண்டும். (முந்தைய ஆய்வுக்கு பின்னர் ஏழு நாட்களுக்குள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.)
3. இணையத பயன்பாடு ஒரு அடிப்படை உரிமையாக இருக்கிறதா?
பதில் அளிக்கப்படவில்லை.
4. பிரிவு 144-ன் கீழான கட்டுப்பாடுகள் செல்லுபடியாகுமா?
பதில்; முன் எச்சரிக்கை, சூழலை மேம்படுத்துதல் குறித்த அந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டபிறகு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ற கொள்கையின் அடிப்படையில் உரிமைகள், கட்டுப்பாடுகள் கொண்ட நடுநிலைத் தன்மையோடு உத்தரவுகள் இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நீதிமன்றம், “தொடர்ச்சியான உத்தரவுகளின் தேவை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
5. பத்திரிகை சுதந்திரம் மீறப்பட்டதா?
பதில்; சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்ற கோட்பாட்டினை ஆய்வு செய்தபின்னர், அந்த செய்தித்தாள் வெளியிடலாம் என்று கருதப்படுகிறது. “பொறுப்புடைமை கொண்ட அரசானது, எல்லா காலங்களிலும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பது அவசியம் என்று சொல்வதை விடவும் இந்த பிரச்னையில் நாங்கள் ஈடுபடுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதவில்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நடுநிலையைப் பேணுதல்
நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள், சில விஷயங்களில் ஆச்சர்யம் அளிக்கவில்லை. தீர்ப்பின் தொடக்கத்திலேயே தமது அணுகுமுறையை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது; சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை இரண்டுக்கும் இடையேயான நடுநிலையை பேணுவது எங்களது வரையறுக்கப்பட்ட நோக்கம். குடிமக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் உயர்ந்தபட்ச அளவில் வழங்குவதை உறுதி செய்வதற்கு மட்டும்தான் நாங்கள் இங்கே இருக்கின்றோம். இது போன்று கொடுக்கப்பட்ட சூழலின்போது, பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வரை 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டும், பாதுகாப்பு படையினர் எட்டுப்பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். எனினும், இந்த அரசு இயல்பு நிலை நிலவுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறது.
இந்த கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வரையிலும் கூட இணையதளம், மக்கள் நடமாட்டம், பொதுமக்கள் கூடுவது, அரசியல் நடவடிக்கைகள், எழுத்துரிமை, பேச்சுரிமை, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிறர் செல்வது என அனைத்திலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. எந்த ஒரு குற்றசாட்டும் இன்றி அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், உண்மையில் ஏதேனும் மாறியிருக்கிறதா?
“தற்காலிகமான சிறிய அளவிலான பாதுகாப்பைப் பெறுவதற்காக, அவசியத்தேவையான சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பவர்கள் சுதந்திரம் அல்லது பாதுகாப்புக்கு தகுதி அற்றவர்கள்” என்று பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சொல்லி இருக்கிறார். இந்த சூழல் வித்தியாசமானது. இருப்பினும், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு இடையே எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அவரது மொழி ஒரு உன்னதமானதாக மாறி விடுகிறது. நீதிமன்றம் பெஞ்சமின் ஃப்ராங்கிளினின் மொழியை வழிகாட்டும் கொள்கையாக கொண்டிருந்தால், முடிவு என்பது வித்தியாசமானதாக இருந்திருக்கும்.
ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?
நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசாங்கத்தை அதன் அதிகாரத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும். காஷ்மீர் விவகாரத்தில் ராணுவ அணுகுமுறையை ஏற்படுத்தும். ஆனால், அரசு தொடங்கிய இடத்தில் இருந்தே மீண்டும் ஆரம்பிக்கும் என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்களது சுதந்திரம் மீட்டெடுக்கப்படும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் 70 லட்சம் மக்களும் இந்த தீர்ப்பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனினும், ஏழு நாட்களுக்குப் பின்னும் அது நடப்பதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை.
பதில் மனுதார ர ர்கள் (மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள்), தங்களது நடவடிக்கைகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால் அவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். உண்மையில் நிவாரணம் கிடைக்கவில்லை என்று மனுதாரர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். சட்டம் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது.
தனியுரிமை வழக்கினைப்(நீதிபதி புட்டாசுவாமி) போல நீதிமன்றம் மேலதிகமாக செயல்பட்டுள்ளது. ஒரு வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையில் (கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை இருக்கும் என்று நீங்கள் பந்தயம் கட்டலாம் ) அல்லது அடுத்த வழக்கின் விசாரணையின் போது மேலதிகமாக செயல்படக் கூடும். சில நேரங்களில் சட்டமும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
தமிழில் : கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.