குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன என்பது முக்கியமல்ல. ஷாகீன் பக் போராட்டக்காரர்களின் மன உறுதி, விடாமுயற்சிக்கும் மாற்று வழி வேறு இல்லை. தவிர அவர்களின் இந்த போராட்ட வலிமை யார் ஒருவராலும் கண்டுகொள்ளப்படவில்லை.
ஷாகில் எம். பக்
புதுடெல்லியில் உள்ள கலிந்தி குன்ஜ்-ஷகீன் பக் சாலை பகுதி நாட்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான களமாக மாறி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. தலைநகரில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் காலம் நிலவுகிறது என்பது முதல் இந்த போராட்டத்துக்கு சிலர் பணம் கொடுக்கிறார்கள் என்ற குற்றசாட்டு வரை ,ஷாகீன் பக் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். வலுவாக, கூர்மையாக, பெரும் அளவில் மென்மையாக, பதில் அளிப்பதில், இதர வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் ஊடக ஆர்வலர்கள் என தங்களை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். போராடுவது தங்கள் உரிமை என்று தங்கள் தரப்பில் அதிகாரத்தை நோக்கி உண்மையை சொல்ல மூன்று விவேகமான பெண்கள் ஒரு தொலைகாட்சி சேனலில் நீண்ட விவாதங்களில் பங்கேற்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன என்பது முக்கியமல்ல. ஷாகீன் பக் போராட்டக்கார ர்களின் மன உறுதி, விடாமுயற்சிக்கும் மாற்று வழி வேறு இல்லை. தவிர அவர்களின் இந்த போராட்ட வலிமை யார் ஒருவராலும் கண்டுகொள்ளப்படவில்லை. தங்களுக்கு எதிரான பொய்கள், வெறுப்புகளை எப்படி எதிர்கொள்வது என்று போராட்டக்காரர்கள் இப்போது நன்றாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் நல்லெண்ண போராட்டத்தின் மரியாதையை குறைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விஷம பிரசாரத்தை எதிர்கொள்வதையும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக அவர்கள் விரைவாக அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஹேஸ்டேக்-களை உருவாக்குகின்றனர். அவதூறான கருத்துகளை புறம்தள்ள நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள். செய்திச் சுழற்சியில் தொடர்ந்து இயங்குகின்றனர். ஏற்கனவே அவர்கள் இரண்டு டிவிட்டர் கணக்குகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த கணக்குகளை ஆயிரகணக்கானோர் பின் தொடர்கின்றனர். ஒரு விக்கிப்பீடியா பக்கத்தையும் நிர்வகித்து வருகிறார்கள். எனினும் உண்மையான போராட்டம் என்பது கள அளவில்தான் இருக்கிறது. ஷாகீன் பக் போராட்டக்காரர்கள் இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். போராட்டக்களத்தில் அவர்கள் குரானில் இருந்தும், பைபிளில் இருந்தும் கருத்துகளை படிக்கிறார்கள். ஹோமம் நடத்துகின்றனர். சீக்கிய வழிபாடு நடத்துகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை கொண்டாடுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, ஷாகீன் பக் போராட்டக்காரர்கள் காஷ்மீர் பண்டிட்களுடன் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.
இது மட்டுமல்ல. போலி செய்திகள் எனும் சாத்தான் சுற்றிச்சுற்றி வருகின்றன. வெளியில் இருந்து போராட்டத்துக்காகத் தூண்டப்படுகின்றனர் என்ற பரபரப்பு கிளப்பும் ஸ்டிங் ஆபரேஷன்களில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகின்றன. போராட்டத்தில் களத்தில் இருக்கும்பெண்களோ தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்து, தங்களுக்கு கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள, உச்சப்பட்ச குளிர் காலத்தின் ஒரே ஒரு இரவை போராட்ட களத்தில் செலவிடுங்கள் என்று சவால் விடுகின்றனர்.
அவர்கள் இத்துடன் நின்று விடவில்லை. இது போன்ற குற்றசாட்டுகளை கூறுபவர்களில் ஒரு தரப்பான ஆளும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் களத்தில் வைத்திருக்கும் பெரிய பதாகையில், “ரொக்கப்பணம் இல்லை, பேடிஎம் இல்லை, கணக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம்நடத்துகின்றனர் என்ற புகார்களைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் இப்போது பள்ளி வேன்களுக்கு வழி விடுகின்றனர். பள்ளி வேன்கள் செல்லும்போது, நாங்களும்கூட குழந்தைகள்தான் என்கின்றனர். ஆம்புலன்சை வரவேற்கின்றோம்என்று பெரிய பதாகை வைத்துள்ளனர். அவசரகால சேவை என்று வரும் எந்த ஒரு வாகனத்துக்கும் வழி உண்டு என்றும் அடிக்கடி அறிவிக்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் மத்தியில் போராட்டக்காரர்கள் இபோது எப்படி நாள்தோறும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்படும்போது, முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு இருக்கிறது என்ற கவனத்தை ஈர்க்கின்றனர். தவிர குறிப்பாக அரசியல் தளத்தில் கற்றுக் கொள்கிறார்கள்.
கவிதைகள், முழக்கங்கள், போராட்ட ஓவியம் தொடங்கி, பிரபலங்களின் வருகை, எங்களுடன் தேநீர் அருந்தியபடியே எங்களின் மான்கி பாத்-தை கேட்க வாருங்கள் என்று பிரதமர் மோடியை அழைக்கும் #TumKabAaoge அல்லது தலைமை நீதிபதிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்புவது என்பது போன்ற கற்பனை திறம் மிக்க இயக்கங்கள் என ஷாகீன் பக் களம் வித்தியாசமானவற்றை உருவாக்குகிறது. இது ஒரு தனிநபர் அல்லது ஒரு கட்சியின் சார்பில் உதித்த ஒன்றல்ல. பல்வேறு முகம் தெரியாத மக்களின் கூட்டு முயற்சி இதில் இருக்கிறது.
நாட்டின் எதிர்ப்பின் முகமாக, இப்போது பலரால் நம்பப்படும் ஒரு போராட்டமாக, முழுவதும் அமைதியான வழியில், பாராட்டத்தக்க வகையில் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு மருத்துவ முகாம் இருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்கும் தாய்மார்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தற்காலிகமான காப்பகம் இருக்கிறது. ஒரு சிறிய நூலகம் இருக்கிறது. உணவுக்காக பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் ஒரு தற்காலிக சமையல் அறையை அமைத்துள்ளனர். இவையெல்லாம் போராட்டக்களத்தில் உள்ளவர்களை எப்போதும் ஆற்றல்படுத்தும் வலு சேர்ப்பதற்கான முயற்சிகள்.
ஷாகீன் பக் போராட்டம் தொடர்ச்சியாக முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும்போது, , நாட்டின் பல்வேறு இடங்களில் இது போன்ற போராட்டங்களை நடைபெறுவதற்கான ஒரு மாதிரியாக இது மாறக்கூடும்.