Gajendra Singh Shekhawat
கடந்த ஆறுமாதங்களில் இந்தியா, ஒரு நீண்ட தீர்க்கமான அடி எடுத்து வைத்திருப்பதை காணமுடிகிறது. புதுப்பிக்கப்பட்ட தன்முனைப்பு , கவனத்துடன் இந்த அரசானது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நடைபோடுகிறது.
வளர்ச்சி பொருளாதாரம் என்ற பொருளுக்காக 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டியூஃப்லோ, தவிர நோபல் பரிசு பெற்ற இன்னொருவரான ராபர்ட் லூகாஸ் போன்ற மரபார்ந்த பொருளியலாளர்கள், தேசத்தின் வறுமையை விரட்டுவது எது? என்று நீண்டநாட்களாக விவாதித்து வருகின்றனர். எந்த ஒரு தேசமும், அதன் சீரான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை காணும் போது, வறுமையின் நிலை சீராக குறைவதை காணலாம் என்று மரபார்ந்த பொருளியலாளர்கள் வாதிடுகின்றனர். மாதிரி இடைவெளிகளில் பரிசோதனைகள் செய்யவும், மேம்படுத்தவும் செய்வது மக்களின் பொருளாதார நோக்கங்களை தெரிந்து கொள்ள நமக்கு உதவும். நல்ல பொருளாதார விருப்பங்களை உருவாக்க அரசுக்கு உதவிகரமாகவும் இருக்கும் என்று வளர்ச்சி பொருளியலாளர்கள் சொல்கின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்ட இப்போதைய மத்திய அரசு இந்த இரண்டையும் செய்கிறது. மரபார்ந்த பொருளியலாளர்களுக்கு அதீத மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 2024-25ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் நோக்கத்தை இந்த அரசு கடைமையாக கொண்டுள்ளது. வளர்ச்சி பொருளியலாளர்களை மகிழ்ச்சியடைய வைக்க பல்வேறு சமூக திட்டங்கள், நிகழ்ச்சிகள் வழியே மக்களின் பொருளாதார நோக்கங்களை வடிவமைக்கவும் இந்த அரசு தீர்மானித்திருக்கிறது. முந்தைய ஆட்சி காலத்தின் சிறப்பான பணிகாரணமாக வானவில் நம்பிக்கை எனும் சவாரியில் இந்த அரசு ஈடுபட்டிருக்கிறது. முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு துணிச்சலுடன் செயல்படுகிறது.
அரசின் சாதனைகள் எண்ணற்றவை. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, எந்த ஒரு அரசையும் விட பெரிய சாதனைகளில் இருந்து நான் தொடங்குகின்றேன். அரசியல் சட்டத்தின் பிரிவு 370, 35 ஏ –யின் கீழான சிறப்பு விதிகள் நீக்கம். காஷ்மீருக்கான சிறப்பு விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டதைவிடவும், நாட்டில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான விஷயம் வேறு ஏதும் இல்லை. தலைமுறைகளைக் கடந்த இந்தியர்கள் அரசுக்கு கடைமைப் பற்றிருக்கிறார்கள்.
பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களில் ஒரு முக்கிய மறு அளவீடு தேவை என்பதை புரிந்து கொண்டு, ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமான கட்டமைப்பு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் கொடுக்க அமைச்சரவைகளுக்கு இடையேயான விரைவுக்குழுவை மத்திய அரசு அமைக்கத் தொடங்கியிருக்கிறது. முதல் முக்கிய துறையாக ரியல் எஸ்டேட் துறையின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. 1.12 கோடி வீடுகள் தேவை என்ற நிலையில் 93 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 28 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 56 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 64,26,238 பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட 20,757 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுகாதரத்துடன், பெண்களுக்கு அதிகாரம் அளித்தலும் இந்த அரசின் முக்கியப் பணியாக இருக்கிறது. முத்தலாக் எனும் பிற்போக்கு நடைமுறையால் திருமணம் ஆன முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டதுடன் சட்டத்தை மீறி முத்தலாக் சொல்வோருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டன என்ற சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019 ஊதியங்கள் குறியீடு என்ற முறையின் மூலம், ஊதிய சம மின்மையும் சரி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள், ஆற்றல் திறன் உருவாக்குவதில்தான் எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.
இந்தியாவில் நிறுவப்பட்ட மரபுசாரா எரிசக்தி திறன் 80,000 மெகாவாட் என்ற மைல்கல்லை ஜூன் 30-ம் தேதியே தாண்டிவிட்டது. புலிகளுக்கான, மிகவும் பாதுகாப்பான வாழ்விடங்களைக் கொண்டது இந்தியா என்ற நிலை உருவாகி இருக்கிறது. இது அரசின் முயற்சிகளுக்கும் எதிர்கால பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுக்கும் ஒரு சான்றாகும்.
சிறுதொழில்நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான வாகனங்களாகும். ரூ.25 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு உறுதி அளிக்கப்பட வரி விலக்கு பெற முடியும். ஏன்ஜல் வரி விதிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கியமான முதலீட்டு ஊக்கமாகும். தவிர இந்த அரசு, வான் தன் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய சந்தையுடன், 1.92 லட்சம் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 28,211 குறுந்தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2,25,288 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான 25 சதவிகித மூலப்பொருட்களை குறு, சிறு தொழில் நிறுவனங்களில் இருந்து பெற வேண்டும் என்பதை இந்த அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன் அடிப்படையில் 61641 குறு, சிறு தொழில்நிறுவனங்களில் இருந்து ரூ.16,746 கோடி மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த அரசின் கொள்கையில் விவசாயிகள் தான் மையப்புள்ளியாக இருக்கின்றனர். பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இன்றைய தேதி வரை 7.33 கோடி விவசாயிகளுக்கு ரூ.34,873 கோடி தரப்பட்டுள்ளது. 60 வயதான விவசாயிகள், வர்த்தகர்களுக்கு மாதம் தோறும் ரூ.3000 குறைந்த பட்ச உறுதியளிபு பென்ஷன் வழங்கப்படுகிறது. நல திட்டங்கள், ரபி மற்றும் காரீப் பருவத்துக்கு உற்பத்தி செலவில் இருந்து 1.5 மடங்கு உறுதியான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை நமது விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. கிராம பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கின்றன. இந்த அரசு பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து, வளர்ச்சியுடன் கூடிய அதிகாரம் அளித்தல் என்பது மந்திரமாக கடைபிடிக்கப்படுகிறது. 75வது சுதந்திரம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அனைத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் மின் இணைப்பையோ, சமையல் எரிவாயு இணைப்பும் பெற்றுள்ளனர்.
ஒரு பாராட்டத்தக்க சாதனையாக, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இலக்கு தேதிக்கு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே 8 கோடி எல்.பி.ஜி எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
நீர் பாதுகாப்பு குறிக்கோளை அடையும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும். ஜல் ஜீவன் இயக்கத்தின் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சாம்பல் நீர் மறு உபயோகம் மேற்கொள்ளப்படும். ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், 3.56 லட்சம் குடிநீர் பாதுகாப்பு திட்டங்கள், 1.23 லட்சம் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்கள், 1.5 லட்சம் ஏக்கர் மழை நீர் சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் அரசின் நோக்கத்தை அறிந்திட முடிகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜல்-ஜீவன் இயக்கம் அடுத்த முக்கியமான சாதனையாகும். கடந்த ஆறுமாதங்களில் பிரதமரே உதாரணமாக திகழ்ந்துள்ளார்; மகாபலிபுரம் கடற்கரையில் குப்பைகளைப் பொறுக்கிய பிரதமரின் வீடியோ, ஒவ்வொரு இந்தியருக்கும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. நிலையான அபிவிருத்தி இலக்குகள் மீதான இந்தியாவின் கடைமையை மறு உறுதி செய்யும் வகையில் சர்வதேச கோல் கீப்பர் விருதை பிரதமர் பெற்றுள்ளார். ஹவுடி மோடி என்ற நிகழ்வின் மூலம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள், நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் அரிய காட்சியாக ஒன்றிணைந்தனர்.
மகாபலிபுரத்தில் நடந்த இந்தியா-சீனா இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய விடியலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆறுமாதங்களில் இந்தியா, ஒரு நீண்ட தீர்க்கமான அடி எடுத்து வைத்திருப்பதை காணமுடிகிறது. புதுப்பிக்கப்பட்ட தன்முனைப்பு , கவனத்துடன் இந்த அரசானது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நடைபோடுகிறது.
இந்த கட்டுரை முதன் முதலில் டிசம்பர் 3, 2019 தேதியிட்ட செய்தி தாளில், ‘Goals within reach’. என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றிருந்தது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்.
தமிழில்; கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.