Stalin’s firm rejection of sycophancy : முதல் இந்திய கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, பெரியார் மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோர் தமிழக அரசியலை முன்னெடுத்த காலம் ஒன்று இருந்தது. பிறகு கட்அவுட்டுகள் அரசியலை வரையறை செய்யும் காலம் ஒன்றும் வந்தது. மு. கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் தங்களுக்கான கருத்துகளை கொண்டிருந்தனர். ஆனால், ஆனால் அரசியலில் ஒரு நட்சத்திரத்தால் இயக்கப்படும் சினிமாவின் செல்வாக்கு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான உறவை தலைவர் மற்றும் தொண்டராக மாற்றியது. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தின் போது, தொண்டர்களின் முழுமையான அர்பணிப்பை கோரினார். மூத்த அமைச்சர்கள் துவங்கி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்த குறிப்பை எடுத்துக் கொண்டு முழுமையான பொதுமக்கள் பார்வையில், சிலர் அவரின் கால்களில் விழுந்து வணங்கவும் செய்தனர். விளம்பர பலகைகள், அரசு விளம்பரங்கள், பொது போக்குவரத்து, அலுவலகங்கள், இலவசங்கள் என அனைத்திலும் நிறைந்திருக்க துவங்கினார் ஜெயலலிதா.
ஆனால் கருணாநிதியின் வாரிசும், தமிழகத்தின் முதல்வருமான மு.க. ஸ்டாலின், கடந்த வாரம், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பேசும் போது தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறினார். அதற்கு அடுத்த நாள் கூடலூர் எம்.எல்.ஏ. ஜி. ஐயப்பன் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது முதல்வரை வாழ்த்த துவங்கிய போது ஸ்டாலின் எழுந்து, தன்னுடைய உத்தரவை மீறி செயல்படும் பட்சத்தில் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி; மோகன் பகவத்தை சந்தித்த போப்டே
அவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருப்பதை கூட ஒப்புக்கொள்ள மறுத்த நாட்களை கடந்து முன்னேறிவிட்டது மு.க. ஸ்டாலினின் முதல் 100 நாட்கள். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் கடுமையான போட்டியாளர்களாக இருந்த போது, ஒருவர் முதல்வராக இருக்கும் போது மற்றவர் அவைக்கு வருவதை கூட தவிர்த்துவிடுவார். ஆனால் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குழுவினரையும் நட்புடன் பாராட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கும் பள்ளி புத்தகப்பைகள் மற்றும் இதர இலவச திட்டங்களை திரும்பப் பெற வேண்டாம் என்றும் கூறிவிட்டார். பழைய பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல இறக்க துவங்கியுள்ளன. ஆனால் ஸ்டாலினின் சகாக்கள் தங்கள் தலைவரின் பேச்சை பின்பற்றுகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், இப்போதைக்கு, ஒவ்வொரு பொது நிதியுதவித் திட்டத்தையும், நிகழ்ச்சியையும் ஒரு சந்தர்ப்பமாகவும் வாய்ப்பாகவும் மாற்றிக்கொள்ள விரும்புபவர்கள், தமிழ்நாட்டில் இருந்து இந்த பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
செப்டம்பர் 1ம் தேதி 2021ம் ஆண்டு பிரசுரமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ‘No praise, please’ என்ற தலைப்பின் கீழ் இந்த கட்டுரை வெளியானது.