Advertisment

மக்களின் கற்பனையை மட்டுமல்ல எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ள தூய்மை இந்தியா திட்டம்

Swachh bharat mission : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் திறந்தவெளி மலம் கழித்தல் முறை ஒழிப்பு திட்டத்தில், சர்வதேச நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gandhi jayanti, gandhi jayanti 2019, mahatma gandhi, 150 birth anniversarry mahatma ganhdi, swachh bharat mission, swachh bharat campaign, open defecation, open defecation india

gandhi jayanti, gandhi jayanti 2019, mahatma gandhi, 150 birth anniversarry mahatma ganhdi, swachh bharat mission, swachh bharat campaign, open defecation, open defecation india,தூய்மை இந்தியா திட்டம், காந்தி ஜெயந்தி, மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, காந்தியின் கனவு, திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிப்பு

பரமேஸ்வரன் அய்யர்

Advertisment

கட்டுரையாளர், ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளராக உள்ளார். இந்த கட்டுரை The people’s policy’. என்ற பெயரில், அச்சு வடிவமாக அக்டோபர் 02,2019 அன்று வெளியாகியுள்ளது.

Swachh Bharat mission மகாத்மா காந்தியின் கனவான திறந்தவெளியில் மலம் கழித்தல் முறை ஒழிப்பு தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் திறந்தவெளி மலம் கழித்தல் முறை ஒழிப்பு திட்டத்தில், சர்வதேச நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி எட்டி நின்று வேடிக்கை பார்க்காமல், தானே களத்தில் இறங்கி செயல்பட துவங்கியதால், அவர் சார்ந்த அமைச்சர்களும் களம் இறங்கினர். நாட்டு மக்களின் அடிநாதத்திற்கு திறந்தவெளி மலம் கழித்தல் முறை அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அறிந்த மத்திய அரசு, விரைந்து அதேசமயத்தில் துரிதமாக செயல்பட்டு சுகாதார விவகாரத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய சாதனையை கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு, குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள், திறந்தவெளி மலம் கழித்தல் முறை ஒழிப்பு திட்டத்தை பிரதானமாக கொண்டு செயல்பட துவங்கியுள்ளன. இதற்காக தூய்மை இந்தியா திட்டம் கிராமீன் குழு, இந்திய சுகாதார துறையில் மேலும் பல மைல்கல்களை எட்டும் பொருட்டு, நான்கு அம்ச வழிமுறைகளை வகுத்துள்ளது.

அரசியல் தலைமை

தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ள முக்கிய காரணி. இதனை உணர்ந்த பிரதமர் மோடி, நாட்டின் நலன் மற்றும் மக்களின் சுகாதாரம் தொடர்பான தமது அக்கறையை, தான் வகித்து வரும் பதவி மற்றும் அதிகாரத்தின் துணைகொண்டு தான் செயல்ப்பட்டதோடு மட்டுமல்லாது, தனது அமைச்சர்களையும் செயல்பட தூண்டினார். தலைமைச்செயலாளர் முதல் மாவட்ட கலெக்டர் வரையிலும், பஞ்சாயத்து தலைவர் முதல் பொதுமக்கள் வரையிலும் இந்த திட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

பொது நிதி

தேசிய அளவிலான இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், நிச்சயமாக மிகப்பெரும் அளவிலான நிதி வேண்டும். நாட்டின் சுகாதாரம் விவகாரத்தில் புரட்சி நிகழ்த்த விரும்பினால், அதற்கு குறைந்தது ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு நிதி தேவைப்படும். இதற்காக தன்னார்வ தொண்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதி பெற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரும், கழிப்பறை வசதியை பெறும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 கோடி மக்களில் இதுவரை 90 சதவீதத்தினர் கழிப்பறை வசதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டு முயற்சி

தூய்மை இந்தியா திட்டத்தை யாரும் தனித்து நிறைவேற்றி விடமுடியாது என்பதால், தூய்மை இந்தியா திட்டம் - கிராமின் குழு, சமூகநல ஆர்வலர்கள், சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகள், ஊடக அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் துறைகள், பிரபலங்கள் உள்ளிட்டோர்களின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

மக்களின் பங்களிப்பு

தூய்மை இந்தியா திட்டம் - கிராமின் குழுவினர், தன்னர்வ நல தொண்டர்கள், கிராமவாசிகள் என பல்லாயிரக்கணக்கானோருக்கு, திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிப்பு முறை குறித்து விளக்கிக்கூறி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம், மற்றவர்களும் பயன்பெறும் இத்திட்டத்தை பிறரிடம் விளக்கிக்கூறி புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளனர். மரங்களை காக்க ஏற்படுத்தப்பட்ட ஜன் அண்டோலன் திட்டத்தை போன்று தூய்மை இந்தியா திட்டமும் மக்களிடயே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் கற்பனைகளை தூய்மை இந்தியா திட்டம் நிஜமாக்கி காட்டியதால், மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று அழியாப்புகழும் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை இத்தோடு நிறுத்திவிடாமல், வருங்கால தலைமுறையினரும் பல்லாண்டு காலம் பயன்பெறும் வகையில் விரிவாக்க திட்டங்களோடு அதனை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல ஒர்க்ஷாப், வாட்சப் குரூப், தன்னார்வ நல ஆர்வலர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தை நீண்ட கால திட்டமாக வரையறுத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த திட்டம் நிறைவடைந்துவிடவில்லை. அடுத்த 10 ஆண்டுகால திட்டமாக மீண்டும் ஒரு அருமையான மக்களின் நலனுக்கு உகந்ததான அம்சங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. இதைத்தான் பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மக்களுக்கு சுதந்திர தின செய்தியாக எடுத்துரைத்தது இதைத்தான் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு. இந்த திட்டத்தையும் மக்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றி,இதிலும் புரட்சி நிகழ்த்த மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

தமிழில் - டி.கே. குமரன் பாபு

Narendra Modi Swachh Bharat Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment