anti-NEET bill : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் தேர்வு) ரத்து செய்வது என்ற தனது நிலைப்பாட்டில், வாக்குறுதியில் தமிழ்நாடு அரசு உறுதியோடு இருக்கிறது. நீட் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விடுபடுவதற்கான மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பிய ஒரு வார காலத்துக்குள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது, தனது தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பமுடியும் என்ற வலுவான ஒரு செய்தியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவை திருப்பி அனுப்பியபோது, மாநிலத்தில் உள்ள மாணவர்கள் நலனுக்கு எதிராக குறிப்பாக கிராம மற்றும் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டினார். ஆனால், அரசியல் சட்டமானது ஆளுநர் இப்போது எப்படி செயல்பட வேண்டும் என சந்தேகத்துக்கு இடமின்றி என்ன சொல்கிறது என்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி இரண்டாவது முறையாக ஒரு மசோதா அவருக்கு திரும்பி வந்தால், அதற்கு அவர் ஒப்புதல் தர வேண்டும், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்குகோரும் தமிழ்நாடின் நிலை குறித்து அதீத கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பல்வேறு நுழைவு தேர்வுகள் மருத்துவ கல்வி நடைமுறையில் முறைகேடுக்கு வழி வகுக்கும் என்ற நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதன் அடிப்படையில் அகில இந்திய தேர்வுமுறையானது உருவானது. மாநில அரசானது, தனது பாடத் திட்டத்தை நவீனப்படுத்துவதிலும் அதன் பயனுள்ள செயல்பாட்டுக்கு முதலீடு செய்வது வாயிலாகவும், ஒரு பிரிவை சார்ந்த தமிழ்நாட்டு மாணவர்களிடம், நிலவும் சரியாக தேர்வு எழுத முடியாது என்ற அச்சத்தை போக்க முடியும். ஆனால் அவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கான காரணங்களாக இருக்கலாம். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வகையில், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ஆலோசனையை ஏற்று ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டத்தின் உரிமை வலியுறுத்துகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது என்பதையும் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மசோதாவுக்கு அதிமுக உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. இந்த கண்ணோட்டத்தில் இதை புரிந்து கொள்ளும்போது, ஆளுநர் நியாயமற்றும், பெரியண்ணன் மனபான்மையில் நடந்து கொள்வதிலும் அடிப்படை ஆதாரமில்லை என்று முழுமையாக ஒதுக்கி விடமுடியாது என்றே தமிழ்நாடு அரசின் அதிருப்தியை கருதத் தோன்றும். வலுவான மத்திய அரசாங்கங்களால் கூட்டாட்சி ஒப்பந்தத்தில் இருந்து விலகிச் செல்ல ஆளுநர்கள் பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டும் மற்றும் பிஎஸ்பி அதிகார வரம்பு முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி விதிகள் வரையிலான அண்மை காலத்திய மத்திய-மாநிலங்களுக்கிடையேயான சிக்கல்களுக்கிடையே ஆளுநர் ரவியின் தாமதம் அளிக்கும் செயல் , அதீத சந்தேகத்தை வரவழைக்கும். அப்போது அவர், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்பட வேண்டும்.
நீட்விலக்குக் கோரும் மசோதாவின் நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதில் நிச்சயமான நிலை இல்லை. மத்திய அரசுடனான மாநில அரசின் மோதல் போக்குக்கு வழிவகுக்கும் பாதையை இது ஏற்படுத்துகிறது. இது சட்டமாக அமல்படுத்தப்பட வேண்டும் எனில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை. ஆனால் இந்த விவகாரத்தின் போக்கில் போட்டிகள் மற்றும் விவாதங்கள் நிலவும்போது தமிழக ஆளுநர் விதிமுறைகளின்படி இதில் வினையாற்ற வேண்டும்.
இந்த தலையங்கம் முதலில் 10ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘ Play by rulebook’ என்ற தலைப்பில் வெளியானது.
தமிழில்; ரமணி