வெங்கடேஷ் கண்ணையா,
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்மின் தென் இந்தியாவின் கன்சல்டிங் எடிட்டர்
Tamil Nadu’s cutout culture will be hard to abandon: இளம் பெண் சுபஸ்ரீயின் மரணம் தமிழ்நாட்டின் பேனர் மற்றும் கட் அவுட் சமூக நடைமுறைகளை கைவிடுவதற்கு சரியான நேரம் அல்ல. இந்திய சாலைகளில் நடந்த எல்லா மோசமான விபத்துகளைப் போல, சுபஸ்ரீயின் விபத்தும் நடக்க இருந்தது. தகவல் சுமை மிகுந்த இந்த காலத்தில், ஒரு பேனர் மேலே விழுந்ததால் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததால், பரபரப்பான சென்னை சாலையில் லாரி மோதி 23 வயது பெண் இறந்ததை நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்.
சுபஸ்ரீயின் மரணம் அரசியல் வர்க்கத்துக்கு எதிரான கோபத்தை பற்றி எரியச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கட் அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தின் முக்கிய குற்றவாளிகளான அவர்கள் இந்த கோபத்தில் புத்திசாலித்தனமாக சேர்ந்துகொண்டு பகுதி நேர செயல்பாட்டாளர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டுகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களது நடுத்தர வர்க்க நட்பு முகங்களை தொலைக்காட்சி நிலையங்களுக்கு எரியும் தீயை அணைப்பதற்கு அனுப்புவார்கள். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டனம் செய்வார்கள். நடவடிக்கை எடுக்க கோருவார்கள். மேலும், தங்களுடைய தொண்டர்களிடம் கட் அவுட்டுகள் அல்லது பதாகைகளை வைக்க வேண்டாம் என்று தங்கள் ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். சிலர் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று எச்சரிக்கலாம். ஆனால், ஒருவர் இதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். இது போன்ற எச்சரிக்கைகள் விரைவிலேயே முன்பு மறக்கப்பட்டிக்கின்றன.
தமிழ்நாட்டில் கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவை வெவ்வேறு வடிவங்களிலும் அளவிலும் வந்து வெவ்வேறு அரசியல் மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எம்.ஜி.ஆர், கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை சினிமா துறை அரசியல்வாதிகள் எழுந்தது இந்த போக்குக்கு வழிவகுத்தது. இந்தப் போக்கை பெரிய அளவில் பொதுமக்களும் பின்பற்றுகிறார்கள்.
இருப்பினும், பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் தான் பிரதான குற்றவாளிகளில் அடங்குவர். இந்த வரிசையில் இரண்டாவதாக திரைப்பட நட்சத்திரங்களின் ரசிகர் மன்றங்கள் உள்ளன. மேலும் இது திருமணங்கள், பிறந்த நாள், கண்ணீர் அஞ்சலி, மஞ்சள் நீராட்டு ஆகிய விழாக்களையும் பேனர் அல்லது கட்அவுட்டுகள் மூலம் அறிவிக்கப்படுவதால் மாநிலத்தின் பிற பிரிவுகளிலும் இது மிகவும் பரவலாகிவிட்டது.
தமிழக அரசியலில் உள்ள அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களும் தமிழகத்தின் தனித்துவமான அரசியலை உருவாக்க்கிய திமுகவுடன் தொடங்கியிருக்கும். 1991-96 காலப்பகுதியில் ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில்தான் கட்அவுட் கலாச்சாரம் ஆபாச நிலையை எட்டியது. நகரத்தில் ஏதேனுமொரு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவிருந்தபோது, கட்அவுட்கள் அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, அவர் கூட்டத்தில் உரையாற்ற உள்ள இடம் வரைக்கும் செல்லும். இது அரசியல் கூட்டம் அல்லது கூட்டம் சேர்ப்பதை விளம்பரப்படுத்துவது இல்லை. ஆனால், தலைவரை சிரிக்கவைப்பதே இதன் நோக்கம். 6 அல்லது 7 கி.மீ நீண்ட பயணத்தில் ஒவ்வொரு 15 அடிக்கும் சிறிய கட்அவுட்கள் வைக்கப்படும். இவை அடிப்படையில் ஜெயலலிதா புன்னகைப்பதாகவும் கைகளை அசைப்பதாகவும் இருக்கும். இவைகளின் ஒரே பார்வையாளர் ஜெயலலிதா மட்டும்தான் வேறு யாரும் இல்லை. ஒரு மூலையில் சாய்ந்திருந்து 10 அடி குறுகிய இடைவெளியில் உள்ள பேனர்களில் அந்த தலைவர் தனக்குத்தானே கை அசைப்பதை பார்க்க முடியும். இவைகள் தலைவருக்கு சிறியதாக இருக்கலாம். அவ்வப்போது இடைவெளிவிட்டு பரபரப்பான பகுதிகளில் 40 அடி முதல் 150 அடி வரை கட் அவுட்டுகள் சாதனை படைக்கும் அளவில் பெரியதாக இருக்கும்
இதற்கு தலைவரின் ஒப்புதல் ரகசியமாக வெளிப்படுவதால் கட்சியும் கட்அவுட்கள் மற்றும் பதாகைகளுடன் பயணம் செய்கிறது. மாவட்ட அளவிலான தலைவர்களும் அமைச்சர்களும் அவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் அதைப் பிரதியெடுக்கத் தொடங்கினர். அங்கேயும் கட் அவுட்களில் மீண்டும் ஜெயலலிதா மட்டுமே இருப்பார். கட் அவுட்டில் அமைச்சர்கள் சிறிய அளவில் ஆனால், மரியாதைக்குரிய அளவில் ஒரு இடத்தைப் பெற்றிருப்பார்கள். அந்த கட் அவுட்களில் அமைப்பாளர்களும் இருப்பார்கள் கட்சியில் அவர்களின் பதவிக்கு ஏற்ற சிறிய படங்களுடன்.
அரசியல் கட்அவுட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கணம் உள்ளது. இது கட்சிக்குள்ளான படிநிலை மற்றும் செல்வாக்கின் நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. இதை ஒரு அனுபவமிக்க ஒருவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். யார் ஒரு கட்அவுட்டை வைக்க முடியும்; எந்த நேரம், எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் சொல்லப்படாத விதிகள் உள்ளன. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் ரசிகர் மன்றங்கள் தங்களுடைய தெரு அளவிலான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதை ஒரு பகுதியாக அனுபவிக்கிறனர்.
இலக்கணம் தவிர, நடவடிக்கைகள் களத்தில் உள்ளன. உள்ளூர் ரவுடி யார் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் அனைவரும் அரசியல் கட்அவுட்களில் இருப்பார்கள். உள்ளூர் கடைக்காரர்கள் அவர்களை நன்கு அறிவார்கள். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்கூட அவர்களை நன்கு அறிவார்கள். இது ஒரு வகையில் அரசியல் அரங்கில் அவர்கள் வருவதைப் பற்றிய அறிவிப்பாகும். மேலும், காவல்துறையினரும் பிற அதிகாரிகளும் அவர்களை தனியாக பார்க்கவும் விலகி இருக்கவும் எச்சரிக்கிறது. இந்த கட்அவுட்களின் நடைமுறை மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளதால் எந்த காலத்திலும் அது ஒழியப்போவதில்லை. முன்னணி பெரிய கட்சிகளில் புதிய தொண்டர்களின் வருகையை குறிக்கும் ஒரு அடிமட்ட அரசியல் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். கட்சியில் சில ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் எந்தவொரு கட்சியும் இப்போது இந்த கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது.
இரண்டாவதாக, ரசிகர் மன்றங்கள் வந்து ஒரு படத்தின் வெளியீட்டை அறிவிக்கின்றன அல்லது அவர்களின் வயதான ஹீரோக்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன. இது முழுவதும் ஆண்கள் களம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நட்சத்திரத்தின் ஆளுமை மீதான உண்மையான உற்சாகம், பக்தியாகவும், உள்ளூர் சமூக அரங்கில் அவர்களின் வருகையைப் பற்றி அறிவிப்பதாகவும் இருக்கிறது. சில நேரங்களில், அரசியல் மற்றும் திரைப்பட கட்அவுட்களின் பெயர்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. மேலும் ஒருவர் திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு தடையின்றி நகர்கிறார். வேறு வழி இல்லை.
மூன்றாவது வகைக்கு உரியவர்கள் பிறந்தநாள், தங்கள் அன்புக்குரியவர்களின் மரணம், அவர்களுடைய திருமணங்கள், மஞ்சள் நீராட்டு என்று அறிவிப்பவர்கள் ஆவர். அவர்கள் உள்ளூர் பிரபலம் ஒருவரை அழைத்தால், அவர் சமூகத்தில் சில நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் நீருபிக்க வேண்டும். அதை ஒரு கட் அவுட் மட்டுமே தீர்க்கமாக நீருபிக்க முடியும்.
இத்தகைய அடித்தட்டு சமூக நிகழ்வுகளில் தாழ்ந்த மற்றும் கீழ் தடுத்தர வர்க்கங்கள் தாங்கள் புதியதாக அடைந்துள்ள முக்கியத்துவம் மற்றும் வளத்தை அறிவிக்கின்றன. இது ஒரு பரந்த சமூக ஏற்பைக் கொண்டுள்ளதை உயர் நடுத்தர வர்க்கங்கள் பெரிய அளவில் நம்பிக்கையற்று கேலி செய்கின்றன.
சுபஸ்ரீயின் மரணம் துயரமானது. ஆனால், களத்தில் உள்ள கோபம் என்பது விவாதத்துக்குரிய கேள்வி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.