டி.ஜேக்கப் ஜான், எம்.எஸ்.ஷேஷாத்திரி; ஒமிக்கிரான் வகை கொரோனா தொற்றானது இளம் வயதினரிடம், ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் லேசான அறிகுறிகளையும், அதேநேரத்தில் வயதானவர்களிடமும், எளிதாக பாதிக்கப்படக் கூடியவர்களிடமும் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும்.
கர்நாடகா மாநிலத்தில் ஒமிக்கிரான் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாத த்ததுக்குள் இந்தியாவில் ஒமிக்கிரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரண்டாவதாகபெரும் அலையாக உருவெடுத்த டெல்டா வகை கொரோனா தொற்று முடிவுக்கு வந்த தருணத்தில் ஏறக்குறைய 6 மாதமாக அதாவது கடந்த ஜூலை மாத த்தொடக்கத்தில் இருந்து டிசம்பர் கடைசி வாரம் வரையிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சதவிகிதம் குறைவான காலகட்டமாக இருந்தது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தினசரி தொற்று எண்ணிக்கையானது கணிசமாக 10,000த்துக்கும் கீழ் இருந்தது.
டிசம்பர் 29ம் தேதிக்கும் ஜனவரி 6ம் தேதிக்கும் இடையே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையானது 90,000-த்தை தாண்டியது. தினசரி தொற்று பரிசோதனை எண்ணிக்கையானது தொடர்ந்து அதே எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.இதன் வாயிலாக நாட்டில் மூன்றாவது அலை தொடங்கி விட்டது என்பது உறுதியாகி இருக்கிறது. கேரளா, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெல்டா வகை கொரோனா தாமதமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. தாமதமான தொற்று நோய் உச்சங்கள் இந்த போக்குக்கு விதிவிலக்காக இருந்தன.
ஒமிக்கிரான் வகை கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் கடந்த நவம்பர் 26ம் தேதி தமது கவலையை வெளியிட்டது. பெரும் அளவிலான நோய் தொற்று எண்ணிக்கையுடன் அடுத்த அலையை எதிர்பார்க்கலாம் என்று அனைத்து நாடுகளுக்கும் உரிய நேரத்தில் உலகின் சுகாதார முகமை எச்சரிக்கை கொடுத்தது. இதில் ஒரே ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி என்பது, டெல்டா வகை கொரோனா தொற்றை விட வலு குறைந்ததாகவும் நோய் தொற்றுகளின் சதவிகிதம் குறைந்ததாகவும் இருக்கும் என்பதுதான்.
முந்தைய அலைகளை விடவும், காய்ச்சல், நிமோனியா, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனினும், வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அல்லது கடுமையான நோய்கள் தாக்குவதற்கான அதிக அபாயத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும். அவர்கள் இறக்கக் கூடிய அபாயமும் அதிகம் உள்ளது.
சீரான வேகத்தில் தொற்று பரவுவதை நாம் எதிர்கொள்ள நேரிடும். நோயின் அலையானது கணிக்கமுடியாத அளவு இருக்கும்.இது இரண்டாவது அலையை விட குறைவான தாக்கத்தில் அதே நேரத்தில் முதல் அலைக்கு சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களிடம் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தொற்றை இல்லாமல் செய்யும் வகையில், புதிய அவதாரமாக உருவெடுத்திருக்கும் வைரஸ் பாதிப்புக்கு ஏற்றவாறும் விஞ்ஞானிகள் தடுப்பூசியை உற்பத்தி செய்யவில்லை என்றும் இந்தியாவில் பலரும் இதனை சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த கருத்து அபாயகரமானதாகும்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலும் தீவிர பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தீவிர தொற்று காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கிறது. இளைய வயதினர், ஆரோக்கியமாக இருப்போரிடம் ஒமிக்கிரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் மிகவும் குறைவானதாகும். ஆனால், முற்றிலும் தாக்கம் ஏற்படுத்தாது என்று சொல்ல முடியாது. இதனால்தான் அறிவியல் பூர்வமற்ற சரியான புரிதல் இல்லாமல் இருப்பது மற்றும் நீதிக்கு மாறான சூழலும் ஏற்படுகிறது.
முதல் அலையை ஒழிப்பதற்கு நம்மிடம் தடுப்பூசி இல்லை. இரண்டாவது அலை குறையத் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் நம் நாட்டில் தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வந்தது. எனினும், அப்போது போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லாததாலும் போதுமான திறன் வாய்ந்த விநியோகம் இல்லாத தாலும், இரண்டாவது அலையையும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது அலையின் போது பெரும்பாலானோர் தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழக்க நேர்ந்தது. நமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் தீவிரமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்-எதிர்கொண்டும் வருகின்றனர். ஒமிக்கிரான் தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கும்போதே உலக சுகாதார நிறுவனம் அதுகுறித்து எச்சரிக்கை விடுத்தது. தொற்றின் பாதிப்பு சுமையை குறைப்பதற்கான தனித்தன்மை வாய்ந்த வாய்ப்பு நமக்கு இருக்கிறது. நோய் தொற்றின் தாக்குதலை தணிக்க முடியும்.
தொற்று பரவும் வேகம் குறைதல் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்தல் என்பது ஏமாற்றமளிக்கும் வகையில் மிகக் குறைவாக உள்ளது. இது குறித்து முடிவுகள் எடுக்க கொள்கை உருவாக்குவோர் ஏன் ஒரு மாதம் காத்திருந்தனர் என்பது குறித்து புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லை. முந்தைய தொற்றுடன் தடுப்பூசி மற்றும் பெரும் அளவிலான பூஸ்டர் தடுப்பூசி இயக்கத்தை விரைவாக முன்னெடுத்தல் தடுப்பூசி போடுவதை அதிகரித்தல் ஆகிய இரண்டு செயல்முறைகளும் சீராக நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கான விருப்பமாக நம்மிடம் இருந்தன. ஆனால், அரசியல் ரீதியான முயற்சிகள் குறைவாக இருந்ததற்கான காரணங்கள் தெரியவில்லை.
தென் ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் கொரோனா தொற்று வகை குறித்து கவலை தெரித்த இரண்டு நாட்களுக்குள் உலக சுகாதார மையம் இரண்டு வித பண்புகளைக் கொண்ட ஓமிக்கிரான் குறித்து உடனுக்குடன் அறிவித்தது. டெல்டா வகை கொரோனா தொற்றை விட அதீத பரவும் தன்மை கொண்டது என்றும், கடந்த தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தொற்று ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது. அதிக எண்ணிக்கையில் பிறழ்வுகளால் புரத மரபணுவில் தற்காலிக அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக இந்த பண்புகள் வாயிலாக தெரியவருகிறது. டெல்டா வகை கொரோனாவானது வைரஸின் முக்கிய பகுதியான புரோட்டினில் இரண்டு பிறழ்வுகளை ஏற்படுத்துகிறது.
ஒமிக்கிரான் 15 பிறழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் வாயிலாக ஆன்டிபாடி பிணைப்பில் இருந்தும் பாதுகாப்பு தேவையில் இருந்தும் தப்பித்து விடுகிறது. அசல் வைரஸின் புரோட்டின் உயர்வுக்கு எதிரான ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகிறது. செலுத்தப்படும் அனைத்து வகையான தடுப்பூசிகள் (பெரும்பாலானவை சுவாச நோய்களை ஏற்படுத்துகின்றன.) ஒமிக்கிரானுக்கு எதிராக போதுமான திறன் கொண்டிருக்காது. எனினும், குறிப்பாக நோயின் தீவிர தன்மை அதிகரிப்பால் மருத்துவமனையில் அனுமதிப்பதில் இருந்து பூஸ்டர் டோஸ்கள் வழங்கும் பாதுகாப்பின் விளைவாக உயர்ந்த பட்ச அளவான ஆன்டிபாடிகளை அண்மை கால அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வாய்ப்பால், இது மாறுதல் அடையும் என்பது நமது ஒரே நம்பிக்கை. இல்லையெனில் ஆபத்து நிறைந்த நோய் அலை நிராகரிக்கப்படும்.
இங்கிலாந்தின் அனுபவம், பூஸ்டர் தடுப்பூசியை வலுவாக ஆதரிக்கிறது. இங்கிலாந்தில் இப்போது உபயோகிக்கப்படும் எந்தவொரு ஷாட்களிலும் தடுப்பூசி செயல்திறன் என்பது, ஒமிக்கிரான் வகை கொரோனா தொற்றில் இருந்து தூய்மையான நிகழ் நேர பாதுகாப்பை வழங்குகின்றன. இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் இருந்து 2 முதல் 24 வாரங்களுக்குள் ஒமிக்கிரான் தொற்று ஏற்பட்டால் 72 சதவிகித பாதுகாப்பை வழங்குகின்றன. 25 வாரங்களுக்கு பிறகு இந்த சதவிகிதம் 52 ஆக குறைகிறது. அதே நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்ட 2 வாரங்களுக்குள் 88 சதவிகித பாதுகாப்பை வழங்குகின்றன. அத்தகைய தரவு இந்தியாவில் கிடைக்கும் நேரத்தில், நாட்டில் ஏற்பட்ட இந்த மூன்றாவது அலை இயல்பாகவே குறைந்திருக்கும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது என்பதானது, ஒமிக்கிரான் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எனும் பெரிய தடுப்பு சுவராகும். 18 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கும் நிலையில் புதிய கொள்கையானது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குகிறது. சில வாரங்களுக்குள் ஒமிக்கிரான் அலை அதிகரித்து விடலாம் என்பதுடன், முதல் டோஸ் தடுப்பூசி போட்ட ஆறு வாரங்கள் கழித்துத்தான் நோய் எதிர்ப்பு கட்டமைக்கப்படும் என்பதாலும் இந்த நிலைபாட்டை மேற்கொள்வது ஒரு தாமதமான செயலாகும்.
இரட்டை முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் இருப்பது, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் என ஒவ்வொருவரும் தனிநபர் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக கடைபிடிக்கவேண்டும்.
இந்த பத்தி முதலில் 2022 ஜனவரி 7ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Taming the third wave’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையாளர் ஜான், வேலூர் சிஎம்சியில் வைராலஜி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்னொரு கட்டுரையாளர் சேஷாத்திரி சிஎம்சியில் மருத்துவ உட்சுரப்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
-தமிழில் ஆகேறன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.