scorecardresearch

Tavleen Singh: நவீன இந்தியாவில் இந்துத்துவா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டு ஆச்சரியம்!

Hindutva in modern India Surprised: நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் உலகின் நான்காவது நாடாக நாம் மாற முயன்ற நாளில், மும்பை செய்தித்தாளில் பசுக்களைப் பற்றிய இந்தக் செய்தியைப் படித்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

Hindutva in modern India, Surprised Hindutva in modern India, Vinayak Savarkar, RSS, BJP, Mohan Bhagwat, இந்துத்துவாவின் முக்கியத்துவம், நவீன இந்தியா, Tavleen Singh writes on important of Hidutva, Modern India, Mahatma Gandhi, Tamil Indian Express
Hindutva in modern India, Surprised Hindutva in modern India, Vinayak Savarkar, RSS, BJP, Mohan Bhagwat, இந்துத்துவாவின் முக்கியத்துவம், நவீன இந்தியா, Tavleen Singh writes on important of Hidutva, Modern India, Mahatma Gandhi, Tamil Indian Express

தவ்லீன் சிங், கட்டுரையாளர்
Hindutva in modern India: 
சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் உலகின் நான்காவது நாடாக நாம் மாற முயன்ற நாளில், மும்பை செய்தித்தாளில் பசுக்களைப் பற்றிய இந்த செய்தியைப் படித்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.“பெண் மாடுகளை இனப்பெருக்கம் செய்வது கும்பல் தாக்குதலுக்கு முடிவுக்கட்ட உதவும்: கிரிராஜ்” என்று அந்த செய்தியின் தலைப்பு கூறியது. அதன்பிறகு வந்த செய்தியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரும்பாலும் பெண் கன்றுகள் பிறப்பதை உறுதி செய்வதற்காக மாடுகளை செயற்கையாக கருத்தரிக்கும் திட்டத்தில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது கால்நடை விவசாயிகளை தங்கள் விலங்குகளை கைவிடுவதை நிறுத்த தூண்டுகிறது என்றும் இது கும்பல் தாக்குதலைக் குறைக்க உதவும் என்றும் அமைச்சர் நம்புவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்களும் தலித்துகளும் அதிக அளவில் கும்பல் தாக்குதலால் கொல்லப்படுவது கால்நடைகளின் கணக்கு காரணமாக அல்ல என்பது கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருக்குத் தெரியாதா?

முஸ்லீம் பால் விவசாயிகள் தங்கள் சொந்த மாடுகளை கொண்டு செல்லும்போது தாக்கப்பட்டுள்ளனர். அவை தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகள் அல்ல. மேலும், தோல், மருந்து மற்றும் தொடர்புடைய தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதற்காக இறந்த மாடுகளை தோலுரிக்கும்போது தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் தாக்குதல் தொற்றுநோய் பால் விவசாயிகளை வயதான பசுக்களை கசாப்பு கடைக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை அநாதையாக கைவிட கட்டாயப்படுத்தியுள்ளது. அது தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையை ஆபத்தான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், அவைகள் இப்போது கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஒரு வயதான பெண்மணி சமீபத்தில் ஒரு பசுவால் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் வீடியோ பதிவேற்றப்பட்டது. வட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் காட்டு மாடுகளின் கூட்டம் பயிர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன. இந்த அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு வேலி அமைப்பதற்கு தங்களுடைய சொற்ப வருவாயை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமைச்சரின் கருத்துக்களைப் பற்றி எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்னவென்றால், பசுக்களைப் பாதுகாப்பதற்கான இந்த ஆவேசம் பழமையான வெறுப்புகளையும் கொடூரமான வன்முறையையும் எங்கள் அன்பான தாய்நாட்டின் பரப்பில் எழுந்திருப்பதை அவர்கள் எனக்கு நினைவூட்டினர். மேலும், இது நமது நிலா கனவுகளில் மிகவும் மோசமானதாக பொருந்திப் போகிறது.

இந்த பத்தியில் நான் பெரும்பாலும் இந்துத்துவாவின் பசு கண்காணிப்பு மீது குற்றம் சாட்டியிருக்கிறேன். நான் கருதியது தவறு. கடந்த வாரம், நான் இந்துத்துவாவின் தந்தை விநாயக் சாவர்க்கரின் இரண்டு சுயசரிதைகளைப் படித்தேன். அவர் முற்றிலும் மறுத்த விஷயங்களில் ஒன்று பசு வழிபாடு என்பதைக் கண்டுபிடித்தேன். விக்ரம் சம்பத் தனது வாழ்க்கை வரலாற்றில் மேற்கோள் காட்டியபடி சாவர்க்கர் கூறிய வார்த்தைகளை அப்படியே குறிப்பிடுகிறேன். “இந்துத்துவத்தின் சின்னம் பசு அல்ல, ஆனால், மனித-சிங்கம் அல்லது நரசிம்மர் … பசுவை தெய்வீகமாகக் கருதி அதை வணங்குவது முழு இந்து தேசத்தையும் பசுவைப் போலவே அமைதியாக்கியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

நம்முடைய வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து காங்கிரஸ் கட்சி அழித்த புரட்சியாளரைப் பற்றி நான் படித்த இரண்டு சுயசரிதைகளிலிருந்து இந்துத்துவா பற்றி நான் முற்றிலும் தவறாக கருதியிருந்ததைக் கண்டுபிடித்தேன். நமது அண்டை இஸ்லாமிய குடியரசின் பிரதமர் நம்புவது போல, நாஜிசத்திற்கு ஒத்த ஒரு சித்தாந்தமாக இருப்பதற்கு பதிலாக, அது இந்து சீர்திருத்த சித்தாந்தமாக இருக்கிறது. சாவர்க்கர் சாதி முறையை நிராகரித்து, இந்துக்கள் அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை மதிக்க ஒரு தீவிர பாதையை உருவாக்கினார். பீகார் பூகம்பத்தில் தீண்டாமையின் மீது குற்றம் சாட்ட காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி மட்டுமல்லாமல், சாதி முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளால் தான் அது நிகழ்ந்தது என்று சங்கராச்சாரியார் கூறுவதையும் அவர் கடுமையாக சாடுகிறார்.

இந்துத்துவா ஒரு ஆபத்தான, பிளவுபடுத்தும் சித்தாந்தம் என்று நம்பி வளர்ந்த நான், நம் காலத்திற்கு இது எவ்வளவு முக்கியமான ஒரு யோசனையாக இருக்கக்கூடும் என்று ஆச்சரியப்படுகிறேன். சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ்-ஸின் ரசிகர் அல்ல. ஆனால், இன்றைய இந்தியாவில் பாஜகவின் தாய் அமைப்புக்கு பெரும் செல்வாக்கு இருப்பதால், நான் படித்து முடித்த இரண்டு சுயசரிதைகளையும் படிப்பதற்கு மோகன் பகவத் நேரத்தை கண்டடைவார் என்பது என்னுடைய உண்மையான நம்பிக்கையாக இருக்கிறது. அவர் சிறையில் கழித்த நீண்ட ஆண்டுகளில் உருவான சாவர்க்கரின் இந்துத்துவத்தைப் பற்றிய அறிவொளி பார்வையே இந்தியா கட்டியெழுப்ப தேவையானது என்பதை அவர் கண்டுபிடிக்கலாம். போர்ட் பிளேரின் மோசமான சிறையில் அவர் இருந்த சிறிய அறையில் இருண்ட விரக்தியான நாட்களில் தனது எண்ணங்களை சுவர்களில் எழுத முட்களைப் பயன்படுத்தினார். அவருக்கு புத்தகங்கள், காகிதம் மற்றும் மை மறுக்கப்பட்டு பல மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் முஸ்லிம்களிடம் பரிவு காட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால், மாடுகளை காப்பாற்றுவதற்கான சாக்கில் அவர்கள் கொல்லப்படுவதை அவர் மறுத்திருப்பார். விண்வெளியின் அறியப்படாத எல்லைகளை ஆராயத் துணிந்த நாடுகளின் சிறிய பட்டியலில் இந்தியா தனது பெயரை பதிவு செய்ய முயற்சிப்பதை அவர் பெருமையுடன் ஒப்புக் கொண்டிருப்பார். மதச்சார்பற்ற சக்திகளின் கோபத்தைத் தூண்டும் அபாயத்தில், நவீனத்துவத்தைப் பற்றிய அவரது கருத்துக்கள் மற்றும் விஞ்ஞான உணர்வை வளர்ப்பது ஆகியவை காந்திஜியை விட இன்று அவரை மிகவும் பொருத்தமானராக ஆக்குகின்றன என்று நான் கூறப்போகிறேன்.

மகாத்மா மிகப் பெரிய மனிதர். அதனால், நான் மரியாதையுடன் பேசுகிறேன். அவருடைய சில கருத்துகள் வளர்ச்சிக்கு எதிரானது என்பதால் ஒப்புக்கொள்வது கடினம். அவருடைய எல்லா கருத்துகளையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்தியா எளிதில் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய நாடாக இருந்திருக்கும். மீண்டும் அப்படியான ஒரு படையெடுப்பு இந்தியாவின் பாரம்பரியம், அவளுடைய அறிவார்ந்த மதங்கள் மற்றும் நாகரிகத்திற்கு அவளுடைய பரந்த பங்களிப்பு ஆகியவற்றை அவமதிக்கும் மக்களால் நடந்திருக்கும். இந்த வாரம் நாம் நிலவின் மீது கண் வைத்துக்கொண்டிருக்கும்போது நாம் அடுத்த வீடான இஸ்லாமிய குடியரசு மீதான பார்வையையும் விலக்க கூடாது.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Tavleen singh writes surprised to find how important hindutva could be in modern india