தனித் தெலுங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அமையப்போகும் புதிய அரசாங்கம் பற்றி பெரிய விவாதம் எழுந்தது. அந்தப் போராட்டத்தில் முன்னைய நக்சல்பரி இயக்கத்தினரும் முக்கிய பங்கு வகித்திருந்ததால், இடதுசாரி வன்முறையால் புதிய அரசானது அழிக்கப்பட்டுவிடும் என ஒரு தரப்பு வாதிட்டது.
மேலும், அரசின் முதுநிலை உயரதிகாரிகள் ஆந்திரத்திலேயே தொடரத்தான் விரும்புவார்கள்; தெலுங்கானா நிலையற்றதாகவும் பலவீனமானதாகவும் ஆகிவிடும்; அதனால் நக்சல் இயக்கப் பிரச்னையைக் கையாளமுடியாமல் போகலாம் என்றும் பொதுவாகவே சிறிய மாநிலங்கள், அரசுக்கு எதிரான வன்முறை சக்திகளால் பாதிக்கப்படக்கூடியவை என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதைத்தவிர, ஆந்திரத்தின் ஆதிக்கப்பிரிவினரின் பகைமையால் புதிய தெலுங்கானா மாநிலம் உருவான காரணத்தால், மூலதனம் இடம்மாறக்கூடும்; இதனால் தெலுங்கானா மாநிலமானது தொழில்முனைவுத் திறனை இழந்து பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஐதராபாத்தை இழப்பானது ஆந்திரத்தை கணிசமாக பாதிக்கும் என்பதைத் தவிர, இப்படியான மோசமான விளைவு எதுவும் ஆந்திரத்துக்கு வரக்கூடும் என்ற பேச்சே இல்லை. ஆனால், ஆந்திரம் மீண்டுவிடும் என்பதில் அவர்களுக்கு ஐயம் இருக்கவில்லை. முன்னர், ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மண்ணில் வர்த்தகமும் தொழில்முனைவும் கைகோர்த்து புதிய வளமான, நிலையான மாநிலத்தை உருவாக்குவதற்கு முன்னைய காலத்தில் மட்டும், அப்படியான நிலைமை இருந்தது.
ஏழை மக்களைக் கொண்ட பணக்கார மாநிலம் தெலுங்கானா என்றும் பணக்காரர்களைக் கொண்ட வறிய மாநிலம் ஆந்திரம் என்றும் கூறப்பட்டது.
ஆனாலும் இப்போதைக்கு ஆந்திரப்பிரதேசம்தான், ஒரு தோற்கக்கூடிய மாநிலமாகக் காணப்படுகிறது. அதனால் தன் தலைநகரைத் தீர்மானிக்கமுடியாமல் இருப்பது அல்லது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட தலைநகரத்தைப் புழங்கத் தொடங்குவது என முடிவான இடத்துக்கு வர இயலவில்லை. தலைநகர் என அறிவிக்கப்பட்ட அமராவதியை மாற்றுவதற்கு சொல்லிக்கொள்ளும்படியான காரணம் எதுவும் இல்லை.
இந்த சர்ச்சையின் மையம் என்னவென்றால், அமராவதியைத் தலைநகராக்கியதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களும் அக்கட்சியை ஆதரிக்கும் சில சாதிக் குழுவினரும் நீண்டகால பலன்களைப் பெற்றுவிடுவார்கள் என்பதுதான். அந்தக் கட்சிப் புள்ளிகளின் பினாமிகள் பெயரில் அங்கு பெருமளவில் நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டப்படுகிறது. தலைநகரை மாற்றினால் அவர்களின் செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், புதிய மூன்று தலைநகரங்கள் எனும் முடிவால், ஆந்திரத்தின் வட கடலோரப் பகுதி மற்றும் ராயலசீமா பகுதிகள் நன்கு பலனடையும் எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆந்திரப்பிரதேசம் போன்ற புதிய மாநிலங்கள் அரசியல் தொடர்ச்சியையும் நிலைப்புத் தன்மையையும் காட்டவேண்டிய தேவை உள்ளது; ஆனால் தலைநகரத்தை மாற்றுவது என்பது உள்ளுக்குள் பெரும் சீர்குலைவாகவே இருக்கும். தனியாக ஒரு நகரத்தைக் கட்டியமைக்கவே வழிகள் இல்லாதபோது, மூன்று தலைநகரங்களைக் கட்டமைப்பதற்கான வாய்ப்புகளுக்கு எங்கே போவது?
அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான ஆமி சுவா, தன் ‘பொலிட்டிக்கல் டிரைப்ஸ்: குரூப் இன்ஸ்டிங்ட் அண்டு பேட் ஆஃப் நேசன்ஸ்’ எனும் நூலில், ’சந்தையில் ஆதிக்கம்செலுத்தும் சிறுபான்மையினர்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார். அதாவது, கணிசமான அளவில் தொழில்முனைவு வசதிகளை உடைய சமூகக் குழுக்கள், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பணமாக்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். புதிதாக ஒரு மாநிலம் உருவாகும்போதும் இப்படியான வாய்ப்பு அமையும். இந்த ’சந்தைசார் சிறுபான்மையினர்’ இதைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என எதிர்பார்ப்பது அப்பாவித்தனமாகும். அரசாங்கம் இத்தகைய தொழில்முனைவு சமூகத்தினரைத் தவிர்க்கமுடியாது. அவர்களை விலக்கவேண்டும் என நினைப்பது ஆந்திரத்தைப் போல புதிய மாநிலத்துக்கு புது தலைவலியையே உருவாக்கும்.
இந்தியாவில் நகரங்கள் வளர்ச்சியின் புதிய கருவிகளாக இருக்கின்றன. எந்த நகரத்தில் தலைநகர் அமையப்போகிறது என்பது பற்றிய தெளிவில்லாத எந்த ஒரு மாநிலமும் முதலீடு, புதிய தொழில்முனைவுகள், மக்கள், திறன் போட்டிகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கிடையே போட்டி கடுமையாக இருக்கும்நிலையில், ஆந்திரப்பிரதேசம் அந்தப் போட்டியிலேயே இல்லை.
தலைநகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமராவதியிலும் அதைச் சுற்றிலும் தீவிரமான போராட்டங்கள் நடந்துவந்தாலும் விஜயவாடா பகுதியில் அரசியல் அமைதியின்மை சூழல் இல்லவே இல்லை. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் அரசாங்கம் இன்னும் தேனிலவுக் காலத்திலேயே இருப்பதால், அதற்காக வாக்களித்த பொதுமக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. சந்திரபாபு அமராவதியைப் பற்றிப் பேசுவதைப் போல மக்களுக்கு அதன் மீது பெரிய ஈர்ப்பு இல்லை.
அமராவதியும் ஆந்திரமும் அப்படியே மங்கிப்போகையில், ஐதராபாத்துக்கோ மீட்சிக்கான வழியாக இருக்கிறது. ஆந்திரத்துக்கு மூலதனமும் திறனும் இடம்பெயரும் என எதிர்பார்க்கப்பட்டது, நடக்கவில்லை. ஆந்திராவிலிருந்து குடியேறிய முதலீட்டாளர்களுக்கு இருந்த அச்சம் ஐதராபாத் ஆட்சியாளர்களால் தணிக்கப்பட்டது இதற்கான காரணம் ஆகும். இதில் மோசமான நிலை என்னவென்றால் மீண்டும் ஐதராபாத்தையே தலைநகராக்குவதை நோக்கியதாகவும் திறன் இழப்பாகவுமாக பழையநிலைக்குச் செல்வதாக ஆகிவிட்டது. மீட்கமுடியாத இழப்புக்கு அது ஆளாகியுள்ளது. யதார்த்தமான இந்த முதலீட்டு, வர்த்தக உலகத்தில் யாருமே இந்நிலையை விரும்பமாட்டார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.