ஷைலஜா பாஜ்பாய்
2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது அச்சே தின் என்று கூறினார். நான்கு ஆண்டுகள் கழித்து, ஆசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் சந்திப்பில் பேசிய போது, புதிய இந்தியா உதயமாகின்றது என்று கூறினார். நாம் அனைவரும் அவரின் பேச்சை டிவியில் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். இதைப் பற்றி கேட்கும் போது நீங்கள், மோடி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகின்றார் என்று தான் சொல்வீர்கள்.
தனக்கு முன்னால் பிரதமர்களாக இருந்த அனைத்து பிரதமர்களின் குற்றங்களையும் கண்டறிந்து அதை நமக்குச் சொல்வதில் எத்தனை ஆர்வம் இருக்கின்றது மோடிக்கு. அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்திய 43ஆம் ஆண்டு நினைவு நாளைக் கொண்டாட அனைத்து தொலைக்காட்சிகளும் எவ்வளவு மும்முரம் காட்டுகின்றார்கள். சில தொலைக்காட்சிகள் காங்கிரஸின் ஆரம்பமான நேரு என்ன தவறுகள் செய்தார் என்றும் கூட சுட்டிக்காட்டுகின்றார்கள். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் பிரிட்டிஷ், அலெக்சாண்டர் கால நிகழ்வுகள் அனைத்தையும் கூட கூறு போட்டு சொல்லியிருப்பார்கள் போல.
பிஜேபியும் நிறைய தொலைக்காட்சி சேனல்களும் எமெர்ஜென்சி நினைவு தினத்தை ஒட்டி 24 மணி நேரம் துக்கம் அனுசரித்தார்கள். அந்த இரண்டு நாட்களில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் வீடியோக்களை, 21 மாத நிகழ்வுகளை, கருப்பு வெள்ளை புகைப்படங்களை காட்டியே அலுப்புதட்ட வைத்துவிட்டார்கள். அருண் ஜெட்லி போன்றவர்கள் ஒருபடி மேலே சென்று, இந்திராவிற்கு, இந்திரா 'ஹிட்லர்’ காந்தி என்று பெயரே வைத்துவிட்டார்.
சில தொலைக்காட்சிகள் எமெர்ஜென்சியில் தொடங்கி போனவாரம் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் பற்றி பேசியது வரை அனைத்திற்கும் ராகுலை மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அக்காலத்தில் படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டதா என்று கேள்விகள் எழுப்பினார்கள். பத்மாவத் பற்றி நாம் யோசிக்கக் கூடாது இங்கு. பாஜக இப்படி போக, “காங்கிரஸ் கட்சியோ 1975-1976 வரையிலான ஆட்சிக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கும் அத்தனை பெரிய வித்தியாசமில்லை” என்று பதிலுக்கு தாக்கியிருக்கின்றது.
சில இடங்களில் ஏன் இந்த வரலாற்றை ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஜூன் 25அன்று 1983ல் முதல் முறையாக இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையினை வென்றது. ஆனால் அதைப்பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
2014ல் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு மித்தாலஜிக்கல் மற்றும் கடவுள் நம்பிக்கைக்காக ஒளிபரப்பப்படும் புராணக்கதைகள் தான் எத்தனை எத்தனை... நாகின் என்ற தொடரெல்லாம் தற்போது வந்து கொண்டிருக்கின்றது ஆனால், அதில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாகமாக மாறிக் கொள்ளலாம் என்பது சிறப்பு மிக்க தகவலாக இருக்கின்றது.
வரலாறு இதை விட சிறப்பாக அமைந்துவிட முடியுமா என்கின்றீர்களா? அதற்கும் பதில் இருக்கின்றது. திடீரென கடவுள் நம்பிக்கை வந்தது போல், நாட்டுப்பற்றும் தொற்றிக் கொண்டது. அதனால் தான் பதான்கோட் தாக்குதல்களை எல்லாம் டாக்குமெண்ட்ரிகளாக எடுத்து டீவியில் ஒளிபரப்புகின்றார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காஷ்மீர் விவகாரம், தோக்லம் போன்ற பிரச்சனைகள் ஒரு சாட்சி. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டீவி நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் அதிகம் பங்கேற்கின்றார்கள்.
சில நேரங்களில் மிகவும் சிறப்பான விசயங்களும் கூட தொடர்களாக ஒளிபரப்பப்படுகின்றன. போரஸ் மஹாராஜா, ஆப்கன் வீரர்களிடம் தீரத்துடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர்கள், பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தொடர்களாக்கி மக்கள் மத்தியில் சென்று சேர்த்த தொலைக்காட்சிகளும் இங்கு இருக்கின்றன.
ஆனால் யோசித்துப் பாருங்கள், நாட்டையும் நாட்டின் பெருமையினையும் மீட்டெடுக்கின்றோம் என்று கூறி திடகாத்திரமான ஆண்களையும், ஹாலிவுட் செட்களையும், சிங்கத்தோலினை உடுத்தித் திரியும் அரை நிர்வாணமாய் இருக்கும் ஆண்களையும் தான் நாம் தொலைக்காட்சிகள் வழியாக மக்களிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறோம். நாம் மீட்டெடுக்க வேண்டிய வரலாறு இது தானா என்பதை யோசிக்க வேண்டும் நாம். ஆங்கிலத்தில் இக்கட்டுரையைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.