budget has ignored distress caused by the pandemic : 2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய வார்த்தைகள் என்ன தெரியுமா? டிஜிட்டல், பசுமை, பருவநிலை, ஆத்மநிர்பார், இந்தியாவில் உருவாக்குவோம், முதலீட்டு செலவினம், வணிகம் செய்வதை எளிமைப்படுத்துதல், வரி வருவாய், ஜிஎஸ்டி வசூல் ஆகியவைதான். உறுதியான வரி வசூலிப்புகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான நம்பிக்கையான கணிப்பு மற்றும் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கும் ஸ்மார்ட் நகரங்கள், தூய எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து மத்திய நிதி அமைச்சர் வலியுறுத்தினார். வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை, உணவு பாதுகாப்பு, அமைப்புசாரா துறை, புலம் பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், அனைவருக்குமான சுகாதாரம், நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு, பெண்கள், இளைஞர்கள் போன்ற வார்த்தைகள் முழுமையாக விடுபட்டன அல்லது குறைவாக உபயோகிக்கப்பட்டன.
விடுபட்ட வார்த்தைகள் பொருத்தமற்றதா அல்லது பொருத்தமில்லாததா? கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொருளாதாரம் பெரும் அளவில் அடிவாங்கியிருக்கிறது. பின்னடவை தொடர்ந்து சில துறைகளில் மட்டும் மீட்சி என்றில்லாமல் விரிவான அளவிலான ஒரு மீட்பு என்பது உடனடியாக தேவை. வருமானத்தின் மேல்தட்டில் இருப்போரின் பொருளாதார நிலை முன்னேறி இருக்கிறது. ஆனால், கீழ்மட்டத்தில் இருப்பபோரின் வாழ்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. போதுமான சமூக பாதுகாப்பு வளையம் இன்மையால் வேலைவாய்ப்பு இன்மையால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழ்மையை குறைப்பதால் இந்தியாவுக்கு கிடைக்கும் கணிசமான லாபம், தலைகீழான மாறுதலுக்கு உட்பட்ட அபாயத்தில் இருக்கின்றன. மொத்த தேசிய வருவாயின் 10 சதவிகிதம் என்பது 51.7 சதவிகிதமாக இருக்கிறது. இங்கே கீழ்மட்டத்தினரின் மொத்த தேசிய வருவாய் என்பது 13.1 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவின் அதிகரித்து வரும் சமத்துவமின்மை ஒரு உண்மையான மற்றும் தீவிரமான பிரச்சனையாகும், இது எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும்.
நிதி அறிக்கையில் பெரும் செலவினங்கள் குறித்த அறிவிப்புகள், முதலீட்டு செலவினத்தை 35.4 சதவிகிதமாக அதிகரிக்கும். ஜிடிபியில் செலவினத்தின் பங்கை கடந்த ஆண்டு 2.2 சதவிகிதமாக இருந்ததை இந்த ஆண்டு 2.9 சதவிகிதமாக அதிகரிக்க உதவும். முதலாவதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியானது பெரிதாக இருக்காது. இந்த ஆண்டின் அதிகரிப்பானது, தோராயமாக கடத ஆண்டைப் போலவே இருக்கும். (கடந்த ஆண்டு முதலீட்டு செலவினத்தின் காரணமாக வேலைவாய்ப்பில் பெரிய பாய்ச்சலை நாம் பார்த்தோமா?). இரண்டாவதாக முதலீட்டு செலவினம், நிலையான சொத்துகளை மேம்படுத்துதல் அல்லது உருவாக்கும் செலவினங்களை, அதே போல கடன் திரும்ப செலுத்துதல், ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உண்மையில் ஏர் இந்தியாவின் உத்தரவாத கடன் நிலுவையை நேர் செய்வதற்காக ரூ.51,971 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டதாகும். இந்த தொகை மொத்த செலவினத்தில் கணக்கிடப்படும்.
மூன்றாவதாக பொருளாதார செயல்பாடுகளுக்கு கட்டமைப்பு முதலீடு பலன் தரும். கட்டமைப்பு திட்டங்களில் உடனடியான விளைவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கருதுவது பொய்யாக இருக்கும். ஒரு விஷயத்தில் உழைப்பு சார்ந்தது என்பதற்கு பதில் கட்டமைப்பு திட்டங்கள் முதலீடாக இருக்க வேண்டும். இரண்டாவதாக பெரும் அளவிலான விளைவுகள் சிறியதாக இருக்கும், உடனடியாக இருக்காது. கடந்த காலங்களில் இந்தியாவானது வேலை இழந்தோர் வளர்ச்சிக்கான சாட்சியமாக இருந்தது. இறுதியாக, அனைத்து முதலீட்டு செலவினங்களும் கட்டமைப்புக்கானதாக இருக்காது. முக்கியமாக அணு சக்தி(1.9 சதவிகிதம்), தொலை தொடர்புகள் (7.2 சதவிகிதம்), பாதுகாப்புத்துறை (20.3 சதவிகிதம்), மாநிலங்களுக்கு அனுப்புதல் (1.4 சதவிகிதம்), வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு (3.6 சதவிகிதம்), ரயில்வே (18.3 சதவிகிதம்), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை (25 சதவிகிதம்) ஆகிய எட்டு அமைச்சரவைகள்/துறைகளை கவனத்தில் கொள்வதாக இருக்கும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்பது ஏழைகுடும்பங்களின் கடைசி புகலிடமாக இருக்கிறது. பெரும் அளவிலான வேலை இழப்பு சவால்களுக்கு இடையே, நிதி நிலை அறிக்கையில், முக்கியமான சமூக பாதுகாப்பு வளையமான இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையின் மதிப்பீட்டின் படி தொடர்ந்து அது ரூ.73,000 கோடியாகவே இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.98,000 கோடியை விட குறைவாகும்.
இந்த நூற்றாண்டின் பெரும் சுகாதார சிக்கலில் நாம் எல்லோரும் இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது சுகாதாரத்துக்கான செலவினம் குறைவானதாக இருக்கிறது. காற்று மாசுபாடு, ஊட்டசத்து, சுகாதாரம், குடிநீர் ஆகியவை (பொது சுகாதாரத்தை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை.) இப்போது மரபார்ந்த சுகாதார செலவினங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை தவறான வழிநடத்தலாகும். சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார நல சேவைகளை வலுப்படுத்துவதற்கான குறிப்பிட்ட செலவினங்களை கண்டறிவதில் கடினமான சூழலை ஏற்படுத்துகிறது. அடிப்படைப் பொது சேவைகள் வழங்குவது என்பது முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு குடிநீர் மற்றும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 44 சதவிகிதம் மட்டுமே கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் வரை செலவிடப்பட்டுள்ளது.
பெண்கள் பங்கேற்கும் பணப் பொருளாதார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. சமீப ஆண்டுகளில் இது சரிந்துள்ளது. நிதி நிலை அறிக்கை உரையில் இருந்து முக்கியமான பிரிவு தவிர்க்கப்பட்டிருப்பது, இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. சக்ஷம் அங்கன்வாடி எனப்படும் அங்கன்வாடி சேவைகள் மற்றும் போஷன் 2.0 போன்ற முக்கிய திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்ற உண்மை இதில் அடங்கியிருக்கிறது. ஒதுக்கப்பட்ட தொகையானது பெருந்தொற்று காலகட்டத்துக்கு முந்தைய ஒதுக்கீட்டைப் போல இல்லை.
கல்வியைப் பொறுத்தவரை, டிஜிட்டல் கல்வியின் அற்புதங்களில் மத்திய நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். (டிஜிட்டல் இந்தியா இணைய வழி கற்றல் கூறு திட்டத்துக்கு 2021-22ம் நிதி ஆண்டில் ரூ.645 கோடி ஒதுக்கப்பட்டதில் இருந்து இது ரூ.421 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. ) டிஜிட்டல் கருவிகளோ அல்லது இணைய வசதியோ இல்லாத லட்சகணக்கான குழந்தைகள் வழக்கமான பள்ளிப்படிப்பு இல்லாமல் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை ஆழமான டிஜிட்டல் பிரிவினையானது குறிப்பிடப்படவில்லை. உடனடியாக பள்ளிகளைத் திறப்பதும், பள்ளி வழி கற்றலுக்கான தரத்தை முன்னெடுப்பதும்தான் இதற்கு தீர்வாக இருக்கும். நல்ல தரமான வகுப்பறை அனுபவத்தை நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகளால் ஒருபோதும் தரமுடியாது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகள் இரண்டும் லட்சகணக்கான இந்தியர்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் வாழ்வாதாரம் அளித்தது. பொருளாதாரத்தின் இந்த பிரிவுகள் கடுமையான சிக்கல்களை சந்தித்தன. குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் பிரிவுக்கு, அவசரகால கடன் வரி உத்தரவாதத் (ECLGS) திட்டத்தை ரூ.5 லட்சம் கோடியாக விரிவு படுத்தி அரசு நீட்டித்தது. விநியோ தரப்பில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஒரு கடன் ஆதரவாக இது தேவையானதாக இருந்தது. இந்தியாவின் வேலைதளத்தில் 80 சதவிகிதத்துக்கும் நெருக்கமான அளவைக் கொண்டு அமைப்பு சாரா துறை குறித்து நிதிநிலை அறிக்கை உரையில் ஏதும் இடம் பெறவில்லை. முறைசாரா தொழிலாளர்களுக்கு நேரடி பணம் மற்றும் பொருள் பரிமாற்றங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில்களுக்கு சம்பள ஆதரவு உள்ளிட்ட வலுவான கோரிக்கைகள் அடங்கிய தரப்பை உந்தித் தள்ளுவதற்கு என்ன தேவையாக இருக்கிறது என்பது பல முறைகள் விவாதிக்கப்பட்டன.
2019-20 ஆண்டுகளில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டுஉற்பத்தி(ஜிடிபி) ரூ.145 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15-20 கோடியாக குறைந்துள்ளது. மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்ப, பொருளாதாரத்தின் அளவை அதிகரிக்க பொருளாதார கொள்கையானது சிக்கலைக் குறைக்கக்கூடிய தேவையைக் கொண்டிருக்க வேண்டும். சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் நகர்வு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இருமடங்கு வேகம் காரணமாக சரிசம மின்மை விரிவாகி உள்ளது. மேல்மட்டத்தில் இருந்து மீட்பதானது நுகர்வு தேவையை பாதிக்கும், அது சமூகவலுவுக்கும் அதே போல பொருளாதார வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாகும்.
இந்த பத்தி முதலில் 4ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘The inequality drag’என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் பொருளாதார பேராசிரியர் ஆவார்.
தமிழில் ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.