scorecardresearch

சீருடை அல்ல வகுப்பறைதான் முக்கியம்

சீருடை ஆடை குறியீடு என்ற பெயரிலான ஒற்றுமையை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது. பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுதந்திர வெளியைக் கொண்டதாக கல்வி நிறுவனங்கள் நீடித்திருக்க வேண்டும்.

The classroom is important not the uniform
உடுப்பி அரசுக் கல்லூரிக்கு வெளியே ஹிஜாப் அணிந்து மாணவிகள் நிற்கும் காட்சிகள்

Parinitha Shetty 

The classroom is important not the uniform : மங்களூருவில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்ற வகையில் எழுதுகின்றேன். கர்நாடாகவின் தீவிர நம்பிக்கைகளைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஒரு ஆடைக்குறியீடு தொடர்பான கடுமையான மோதல் மூண்டுள்ளது. என்னுடைய மாணவர்கள் பல தேசங்கள், ஜாதிகள், மதங்களில் இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசுகின்றனர். பல்வேறு வகையான உணவுகளை உண்கின்றனர். பல்வேறு வகையான ஆடை, ஆபரணங்களை அணிகின்றனர். சிலர் திருமண நிலையை குறிக்கும் அடையாளங்களை அணிந்திருக்கின்றனர். தங்களின் மத ஒழுங்கின் வழக்கத்தை அணிபவர்களாக இருக்கின்றனர். சிலர் தங்களின் புவியியல் ரீதியான கலாசார வசிப்பிடத்தை குறிக்கும் ஆடைகளை அணிகின்றனர். சிலர் அனைத்து பாலின நெறிமுறைகளுக்கு இணங்கும் தங்களின் மதம் மற்றும் சாதியின் அடையாளங்களை அணிந்திருக்கின்றனர். தோற்றம் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் சிந்தனை, பேசுதல், சாப்பிடுதல் மற்றும் தோற்றம் ஆகியவற்றில் உள்ள இந்த வேறுபாடுகள், ஒரு வகுப்பறை சமூகத்தைச் சேர்ந்தது என்ற எங்கள் உணர்வை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை.

சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குமான ஜனநாயக அணுகலைக் கொடுப்பதன் வாயிலாக, பல்வேறு வகைகளில் அது அமைக்கப்பட்டதற்கான சமூகத்தை உண்மையில் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு கல்வி நிறுவனமாகவே அரசின் கல்வி நிறுவனத்தின் வகுப்பறை திகழ்கிறது. நமது சமூகம் ஒரு படிநிலையில் ஒழுங்கமைக்கப்பட்டதற்கு அடையாளமாக இது திகழ்கிறது. சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சமூக முதலீடு எனும் கல்விக்கு வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்னுரிமையும் கூடுதல் ஆதரவும் கொடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைவதற்கு வழி செய்யும் வகையில் இந்த வகுப்பறைகள் நிரந்தரமாக அறிவாற்றல் இடையூறு இன்றி திகழ வேண்டும். இங்கே கற்றலானது, அமைப்புரீதியிலான மரபு வாயிலாக மட்டுமின்றி, பல்வேறு வழிகள் வாயிலாக சுயநலம் நம்மை விட்டுப் போகும் வகையில், ஒரு ஆசிரியர், ஒரு மாணவர், ஒரு சக தோழனாக அந்நிய நபருடன் உரையாடுவது போல வகுப்பறை சமூகத்தின் உறுப்பினராக அவர்கள் மாறும் வகையில் நம்மை நாமே கட்டமைக்க வேண்டும். எவ்வாறு எல்லா சத்தியமான சமூக குழுக்களுடன் ஒன்றிணைந்து இந்த சமூகத்துடன் வாழ்வது மற்றும் கட்டமைப்பது என தெரிவிக்க வேண்டும்.

கற்றல் நடைமுறைகளில், அனைவரையும் உள்ளடக்கியதான வகுப்பறை வெளியை உருவாக்குவது என்பதானது அதன் மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும். இப்படியான இந்த ஒரு இடம்தான் பல்வேறு வகையான சமூக அமைவிடங்களில் இருந்து இங்கு வந்திருக்கும் நமது மாணவர்கள், பொது விவாதங்கள், வாக்குவாதங்கள் வாயிலான அந்த சிந்தனை நடைமுறை முன்னெக்கப்படுவதை வழங்குவதாக இருக்க வேண்டும். பாலினம், சாதி, மதம், தேசியம் ஆகியவறுக்கு இடையே நடக்கும் இந்த உரையாடல்களானது விமர்சனக் கேள்வியின் செயல்முறையைத் துவக்குகிறது.கற்றலானது, உள்ளார்ந்த சீர்குலைக்கும் செயல்முறையாக எப்பொழுதும் கல்வித்துறையின் நெறிமுறைகளை விட்டு விலகிச் செல்வதாக இருக்கிறது. பேச்சின் தீவிரமான சமத்துவ நடைமுறையானது, வகுப்பறை உரையாடல்கள் பங்கேற்பவர்களை மாற்றி அமைக்க முடியும். இது போன்ற ஒரு உரையாடல், சமூக இருத்தலின் ஒரு சிக்கலான மாற்றத்தை கோருகிறது. தெரிந்ததில் இருந்து விலகலை, சுயத்தில் இருந்து விடுபடுவதில் மாறுவதற்கான ஒரு செயல்முறையை கோருகிறது. இந்த வழியிலான இது போன்ற உரையாடல்களைக் கொண்ட கல்வியானது அனைத்து மனிதர்களும் பொதுவாக பாதிக்கப்படுவதை அங்கீரிக்கும் தீவிரமாக மாற்றும் செயல்முறையை கொண்டதாகும். , நாம் உயிரினங்களாக நிலைத்திருக்கும்பட்சத்தில் பரஸ்பர பாதுகாப்பு, மற்றும் ஆதரவுக்கு நாம் ஒவ்வொருவரும் கடைமைப்பட்டிருக்கின்றோம்.

ஒரு குறுகிய சீருடை ஒழுக்கத்துடன் கூடியதாக மாணவர்களின் வகுப்பறை வெளி மாறினால், அப்போது கற்றல் என்பது உடல் மற்றும் மனதின் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருக்கும். வகுப்பறை ஒற்றுமையானது அரசியல் அதிகாரத்தின் வழியிலான அமல்படுத்தலாக, அரசியல் கருத்துகளால் வடிவமைக்கப்படும்போது, அங்கே கற்றுக்கொடுத்தல் என்பது போதனையாக மாறிவிடும், கற்றல் என்பது அரசியல் சித்தாந்தங்களை திரும்ப, திரும்ப கூறுவதைக் கொண்டதாகும். கல்வியானது வெறுப்பின் கைகூலியாக மாறும்போது, வாழ்வின் பெரும் சிறப்பு வகையாக கருதப்படும் கற்பனை வளமும், மகிழ்ச்சியும் அழிந்து விடும். குறுகிய மனம் மற்றும் பாரபட்சத்துடன் கூடிய அரசியல் ஆர்வங்களுக்கு பாதுகாவலர்களாக ஆசிரியர்கள் மாறும்போது, சமுதாய இடங்களில் நம்பிக்கை மற்றும் பொறுப்புடைமையை சாத்தியமுள்ள எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள், வழிநடத்துபவர்கள் என்ற அவர்களது உரிமையை இழக்கின்றனர்.

ஒரு வகுப்பறையானது, பட்டியலிடுவதற்கும், வகைப்படுத்துவதற்கும், விலக்குவதற்கும் உபயோகப்படுத்தப்படும்போது பைத்தியக்காரத்தனமான வெறுப்பு மற்றும் மனிதநேயமற்ற கொடுமை ஆகியவை கொண்ட எதிர்காலத்தின் தொடக்கமாக அது அமைந்து விடும். பின்னர் இதுபோன்ற வகுப்பறைகள், பரஸ்பரஸ் புரிதல் மற்றும் அன்பு கொண்ட மனித இருப்பை தக்க வைத்தலுக்கான நல்லறிவை இழந்து விட்டு தேடுபவர்களுக்கான ஒரு ஆய்வகமாக மாறிவிடும்.இது போன்ற வகுப்பறைகளில் உள்ள மாணவர்கள், வாக்குகளுக்கான கருவியாகப்படுவார்கள். மங்கிப்போன துப்பட்டாகளை தங்களது தோள்களுக்கு குறுக்காக அல்லது தங்களது தலையை சுற்றி ஸ்கார்ப் ஆக அணிந்து கொள்வார்கள். அவர்களுக்கு வெறுப்பின் அவநம்பிக்கை கற்பிக்கப்படுகிறது, வன்முறை எனும் கோபத்துக்கு பயிற்சி தரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், சீரான அமைப்புக்குள்ளான ஒற்றுமையை வெளிப்படுத்த தவறியதாக கூறி மாணவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும். வகுப்பறைக்குள் ஆசிரியர்கள், எண்ணம், வியப்பு மற்றும் கேள்விகளின் நெருங்கிய செயல்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். கல்வி நிறுவனங்கள், கற்றலுக்கான செயல்பாடுகளுக்கும் சரிசமம், அனைவரையும் உள்ளடக்கிய, இரக்கமுள்ள , அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்க க் கூடியவற்றை பல்வேறு வகைகளில் பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை மறுக்கும்.

ஆகவே, வகுப்பறை விவாதங்களைத் தொடங்குவதற்கான முயற்சி நிழல் சமுதாயத்தின் விளிம்பில் இருந்து பேசப்படும் குரல்கள், தடுமாறுவதாக, கிட்டத்தட்ட தெளிவற்றதாக கண்ணுக்குத் தெரியாத நிலைக்கு எதிராக ஒரு நிலையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நம்மீது திணிக்கப்படும் ஒன்றாக மாறி விடும். அறிவது மற்றும் கற்றல் வகுப்பறை படிநிலையை ஊடறுக்கும் முறையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்பதால் என்னுடைய மாணவர்களுடன் நட்பு கொள்வதற்காக நான் போராடுகின்றேன். பல்வேறு தாளங்களைக் கொண்ட அவர்களது குரல்களை கேட்பதற்கு நான் முயற்சி செய்கின்றேன்.என்னுடையதாக அன்றி, அவர்கள் உரையின் இலக்கணம் வாயிலாக அவர்களின் உரையை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். வகுப்பறைக்குள் தங்களது உலகத்தை கொண்டு வருவதன் வாயிலாக என்னுடைய மாணவர்கள் பெரும் தாராளமனப்பான்மையை வெளிப்படுத்துகின்றனர். ஆர்வமற்ற மற்றும் வெறித்தனம் இன்றி, நாகரீகத்துடன் கேட்கவும், பேசுவும், விவாதிக்கவும் செய்கின்றனர். நிச்சயமற்ற தன்மையை நோக்கி தொடர்ந்து அவர்கள் எண்ணை தள்ளுகின்றனர்.

இருத்தல், அறிந்தல் ஆகியவற்றின் முரண்களை நாம் நிர்வகிக்கின்றோம். நம்மை அசைக்கும் நூல்களுடன் நாம் மல்லுக்கட்டுகின்றோம். அது எப்போதும் நம்மை சங்கடப்படுத்துவதாக நம்மை மாற்றியிருக்கிறது. அறிவின் நியதிகள், ஒழுங்கின் பொருளை நாம் ஒன்றிணைந்து அவிழ்க்கின்றோம். இதை நாம், நம் இணையர்களுடன், நண்பர்களுடன், சரிசம மாக செய்கின்றோம். ஒருவருக்கு ஒருவரிலிருந்து நாம் எதைத்சார்ந்தவர்கள் என்பதில் இருந்து பல்வேறு சமூக உலகங்களில் நாம் மாற்றப்பட்டிருக்கின்றோம். கேட்பதற்கு கடினமான தடுமாறும் பேச்சுகள் ஆகியவற்றுக்கான செயல்முறைகளை நாம் தொடங்க வேண்டும். வகுப்பறையின் வடிவமைத்தல், செயல்படுத்துதல், சமத்துவத்துக்கான இடமாற்றம் ஆகியவற்றில் நாம் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றோம். சில நேரங்களில் இது உற்சாகமூட்டும் செயல்பாடாகவும் சில நேரங்களில் எரிச்சலூட்டுகின்ற செயல்பாடாகவும் இது இருக்கும். உலகின் ஒழுங்கைக் கற்கும் இந்த செயல்முறை குறித்தும், அதன் உருவாக்கத்தின் வம்சாவளியை அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அதன் இருப்பின் அரசியலை விசாரித்தல் குறித்து என்னுடன் பகிரந்து கொண்ட மாணவ தலைமுறைகளுக்கு நான் நன்றி சொல்கின்றேன். .உங்களுடைய துணை இல்லாமல் உங்கள் உரை இன்றி, ஒரு போதும் இது நடைபெற்றிருக்காது. இந்த வகுப்பறையை நாம் பாதுகாப்போம், நாம் ஒன்றிணைந்து வடிவமைப்போம். அதை நிலைநிறுத்த வேண்டிய உலகம் உடைந்த போதிலும் கூட அனைத்து தாக்குதல்களிலிருந்தும் அதனைக் காத்துக்கொள்ளுங்கள்

இந்த பத்தி முதலில் 10ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Not so uniform’ என்ற பெயரில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலவியல்துறை பேராசிரியராவார்.

தமிழில்; ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: The classroom is important not the uniform