பயிற்சியாளர் என்னும் ஆகப்பெரும் விபத்து!

இந்திய ஹாக்கி அணி ஏன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்று நரிந்தர் பத்ராவிடம் கேட்டால் அது பயிற்சியாளார்களின் தவறு தான் என்பார்.

ஷிவானி நாயக்

இந்திய ஹாக்கி சம்மேளனதின் தலைவர் திரு. நரிந்தர் பத்ரா ஏன் ஒவ்வொரு முறையும் ஹாக்கி பயிற்சியாளரை மாற்றிக் கொண்டே இருக்கின்றார் என்பது புரியவே இல்லை. அவரிடம் எப்போதும் நம் ஹாக்கி அணி ஏன் தோல்வியுற்றது என்று கேட்டுவிடாதீர்கள். ஏன் எனில் எப்போதும் அந்த தோல்விக்கு அணியின் பயிற்சியாளர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்பார்.

நமக்கு எப்போதும் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றது. அதாவது இந்தியருக்கு தெரியாத ஏதோ ஒன்று மேற்கத்திய நாட்டவருக்கு தெரியும் என்ற எண்ணம் தான். இது வெறும் அடிப்படையான எண்ணம் தான். ஆனாலும், ஹாக்கி உலகில் இந்தியா என்றும் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் அதாவது அலுவலக அளவில் இருப்பதை யார் தான் உணராமல் இருப்பார்கள். பத்ரா இன்று உலக ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர். அதனால் நமக்கு இனிமேல் மேல்நாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை தானே. நேர்த்தியான உடல் அமைப்பு, நேர்பட பேசும் போக்கு, மாற்றுக் கருத்துகளுடன் சிந்திக்கும் ஐரோப்பிய பயிற்சியாளர்கள் இனி யாருக்குத்தான் தேவை. ஆனால் முன்பொரு காலத்தில் மேற்கத்திய பயிற்சியாளர்கள் மேல் நாம் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் இப்படியாகத் தான் மாறிவிட வேண்டுமா?

டிக் சார்லஸ்வொர்த், ஜோஸ் ப்ராஸா, மைக்கேல் நோப்ஸ், பால் வான் ஆஸ், டெர்ரி வால்ஸ், ரோலன் ஓல்ட்மன்ஸ் மற்றும் இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட ஸ்ஜோர்ட் மரிஜ்னே. இவர்களுக்கும் முன்னே பலரை நம் களத்தில் கண்டிருக்கின்றோம். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தான். அவர்கள் யாருக்கும் இந்தி தெரியாதது எத்தனை வருத்தத்திற்கு உரிய நிகழ்வு. நம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி உலகையே வெல்ல வைக்கும் இந்தி மொழி அவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான். அதன் விளைவாகத்தான் ஒலிம்பிக்ஸ், ஆசியப் போட்டிகள், மற்றும் காமென்வெல்த் போன்ற அரங்கில் நாம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த அரங்கில் இந்த பயிற்சியாளர்களின் ஆங்கில அறிவுரைகள் தடைகளை மீறி நம் இந்தி பேசும் இந்திய வீரர்களின் காதுகளில் போய் விழுவதற்குள் போட்டிகள் முடிந்துவிடுகின்றது. சிடுசிடுவென விழும் இந்த ஐரோப்பிய பயிற்சியாளார்களினால் தான் நம்முடைய ஹாக்கி ஆடுகளம் வறண்டு போயிருக்கின்றது. நம்முடைய எண்ணங்களை அவர்கள் வெளிப்படத்தவும் விடமாட்டார்கள். கேட்டால் அது தான் அடிப்படை என்பார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருக்கும் என்று பார்த்தால், அது வெறும் வறண்ட நிலமாகவே இருக்கின்றது. இது ஒன்றும் நம்முடைய தவறல்ல. அவர்களுடையது தான். அவர்கள் தான் நாம் இதுவரை வாங்கியிருக்கும் எட்டு ஒலிம்பிக் தங்க பதக்கங்களுக்கு உண்மையானவர்களாக இருக்கவில்லை.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நோப்ஸ், எவ்வளவு தூரம் நமக்கு ஹாக்கி பயிற்சி அளிப்பதற்கு அவர் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்? நம்முடைய வீரர்களுக்கு போதுமான நேரம் மற்றும் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை அளித்து தான் அவர் நம்முடைய வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தார். முக்கியமாக தடுத்தாடும் பயிற்சிகளுக்கு அவர் எத்தனை முக்கியத்துவம் கொடுத்தார். இருந்தும் அவரால், கடந்த முறை நாம் லண்டனில் விளையாடிய விளையாட்டிற்கு நிகரான பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாதது எத்தனை துரதிர்திஷ்டம். பயிற்சி அளித்து என்ன, ஒலிம்பிக்கில் அவரால் நம்முடைய வீரர்களை உற்சாகப்படுத்த இயலவில்லை. ஊக்கம் இருந்தால் தானே சிறப்பாக விளையாடி வெற்றியை அடைய இயலும். அந்த ஊக்கத்தை தராததால் அவரை நாம் திருப்பி அனுப்பிவிட்டோம். ஆயிரம் இருந்தாலும் அவருக்கு நாம் தானே சம்பளம் தருகின்றோம். அதனால் அவரை திருப்பி அனுப்பிவிடுதல் தான் நலம்.

ஓல்ட்மென்ஸ் கூச்ச சுபாவம் கொண்ட அமைதியான பயிற்சியாளர் தான். நம்முடைய வீரர்களுக்கு நல்ல பயிற்சினைத் தான் வழங்கினார். ஆனாலும் ஒலிம்பிக்கில் தங்கம் ஒன்றும் அவரின் முயற்சியால் நமக்கு கிடைத்துவிடவில்லை. நாம் தானே அவருக்கும் சம்பளம் தருகின்றோம். அதனால் அவரை திருப்பி அனுப்புவதில் பிரச்சனையே இல்லை. அதனால் தான் அவரையும் அனுப்பிவிட்டோம்.

ப்ரஸா – நம் அனைவருக்கும் இவரை பிடித்திருந்தது. நம் ஹாக்கி வீரர்களுக்கும் தான். பொதுவாக அனைவருக்கும் என்று சொல்லிவிட இயலாது. ஆனால் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவரைப் பிடித்துதான் இருந்தது. அவரால் இயன்றதை அவர் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தார். இருந்தும், அவரையும் நாம் கைவிட்டுவிட்டோம். ஆனாலும் பாகிஸ்தான் 2010ல் தங்கப்பதக்கம் வெல்ல இந்தியாவோ மலேசியாவிடம் தோல்வியுற்றது. அதே ஓல்ட்ஸ்மென் பயிற்சியின் கீழ் சென்ற மாதம் இந்தியாவுடனான ஆட்டத்தை எவ்வளவு தைரியம் இருந்தால் பாகிஸ்தான் சமன் செய்திருக்கும்? நாம் இங்கு பயிற்சியாளார்களை மாற்றுவதில் தான் மும்பரமாக செயல்படுகின்றோம். மற்றவர்களோ கையில் கோப்பையுடன் களம் விட்டு வெளியில் செல்கின்றார்கள்.

பெண்களின் ஹாக்கி அணி, ஆண் அணிக்கு இணையான இடத்தினை பிடிப்பதற்காக இன்னும் பயிற்சியாளர்களின் உதவியுடன் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒருவழியாக இதோ நம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஒரு இந்தியரை நியமித்துவிட்டார்கள். அவர் நம் வீரர்கள் பேசும் அதே மொழியை பேசி, கேட்டு, பயிற்சி அளித்து அணியை வெற்றிப் பாதை நோக்கி நடக்கவைப்பார் என்று நம்புவோம். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றதே… அதனால் தான் அவர் இன்னும் டோக்கியோவில் இருக்கின்றார். ஹாக்கி அணியில் பயிற்சியாளர்கள் மாறிக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் அவர்களைப் பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. இந்திய விளையாட்டு விரும்பிகளான நாம் இதையெல்லாம் மறந்துவிட்டு ஒரு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படம் பார்ப்பது தான் நமக்கு நல்லது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 4.5.2018 அன்று ஷிவானி நாயக் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். கட்டுரையாளரை தொடர்பு கொள்ள shivani.naik@expressindia.com)

தமிழில் : நித்யா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close