சுபத்ரா மித்ரா
இதில் முரண்பாடு இல்லை. இந்திய அரசியலில் மிகவும் முக்கியமான பேசு பொருளாக பிரதமர் நரேந்திரமோடி உருவாகி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இப்போது தேர்தல் ஆணையம் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்துவதற்கான தேதிகளை அறிவித்துள்ளது. மோடியின் மீதான இந்தியாவின் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பிரச்சார மேலாளர்களின் ஆவேசம் வளர,ஒருவர் மட்டுமே எதிர்பார்க்க முடியும். நன்மை அல்லது தீமை அனைத்தின் உருவகமாக அவரது ஆளுமையைக் காண்பிக்கும் செயல்முறை,பரந்த நாட்டின் தற்போதைய அரசியலில் விரைவுபடுத்தப்பட வேண்டும். பிரதமரின் விமர்சகர்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் அந்த புள்ளியானது அரசியல் கொள்கையின் குறுகலான தீங்கை தவற விடுவதாகும். ஒரு நபர் மட்டுமே நாட்டின் பெரிய நலன்களுக்கும், அதன் பரபரப்பான, நெகிழ்ச்சியான ஜனநாயகத்திற்கும் பணியாற்றுகிறார்.
அரசியல் கோட்பாட்டில் உயர்ந்த பழமையான பாரம்பர்யத்தை கொண்ட இந்தியாவில், அரசியலின் தன்மை மற்றும் உள்ளடக்கத்தின் பொது விவாதத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுதந்திரபோராட்ட காலத்தின் போது தீவிரமான அரசியல் விவாதங்கள் நீண்டகாலத்துக்கு தொடர்ந்தது. அரசியலமைப்பு சட்ட விவாதங்களிலும் சுதந்திரத்துக்கு பிந்தைய முதல் பத்தாண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதங்களிலும் அதன் தொடர்ச்சி இருந்தது என்பது வியக்க வைப்பதாக இருக்கிறது.
அடுத்து வரும் பத்தாண்டுகள் சிக்கல் வாய்ந்த தாக இருக்கபோகும் நிலையில் நிகழ்ச்சி நிரல் உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்த தாக இல்லை. அனைத்தும் மோடியின் அரசியல் வர்க்கத்தின் மீது தாக்குதலாக, கார்டூன்களாக, அவரது நாடக தன்மையை சுற்றியே இருக்கின்றன. இந்த பெருந்தொற்று கால கொடூரமான நாட்களில் இவையெல்லாம் நகைச்சுவையான ஆறுதலை அளிக்கின்றன. ஆனால், அவற்றின் பங்கானது மிகவும், அதிகம் இருந்தும், பரவலக்காபடாத அரசியல் விவாதம் கவனம் பெற்ற அளவுக்கு கவனம் பெறவில்லை. அரசியல் மேம்பாட்டின் இரக்கமற்ற விளையாட்டில், தனது தனிப்பட்ட பாதுகாப்பை வியாபாரம் செய்யும் அளவிற்கு.இதற்கு மோடிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மோடியுடன் எவ்வாறு இது பொருந்திப்போனது? முழு அளவிலான அரசியலானது குறைந்து முழுவதும் அவரது சுயமாக எவ்வாறு வெளிப்பட்டது இந்த கேள்விக்கு சாத்தியமான இரண்டு பதில்கள் உள்ளன. கங்கையில் புனித நீராடும் புனிதரான மோடியில் படங்கள், பரந்த அளவில் தொலைகாட்சிகளின் வாயிலாக பரவியது. அமெரிக்க மானுடவியலாளர் கிளிஃபோர்ட் கீர்ட்ஸின் மொழிகளில் இருந்து ஒரு குறிப்பை கையாண்டு கலாசார மானுடவியலாளர்கள், அரச அதிகாரத்துடன் ஆடம்பரம் மற்றும் நாடகத்தன்மையின் காரண இணைப்பை சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாவது பதில், மார்க்சிஸிடம் முழுமையாக திரும்பிச் செல்கிறது. புத்திசாலித்தனமான தலைவரின் அரசியல் சாதுர்யத்தைப் பற்றி மேலதிகமாக இது விவாதிக்கிறது. ஒரு கட்டமைப்பு குறைபாட்டை பயன்படுத்தி மக்கள் அபிலாஷை மற்றும் அவர்களின் விருப்பத்தின் உருவகமாக. தானே நடித்துக் கொண்டார். வரலாற்றால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு மனிதன் வரலாற்ற உருவாக்குகின்றான். இந்திய அரசியலில் மோடி கவனம் பெற்ற நபராக உருப்பெற்றதற்கு இரண்டு பதில்களின் உள்ளடங்களும் உதவுகின்றன. மிதமான முரண்பாட்டுடன், இணையாக உயர்ந்த மகாத்மா காந்தி, சர்ச்சில் போல மொழி, உருவகம், தனிபட்ட விளைவுகள் மற்றும் நாடகத்தன்மை ஆகியவற்றின் திறமையான பயன்பாட்டில், சுதந்திரப்போராட்ட காலத்தின் கடைசி பத்தாண்டுகளில் பொதுத்தெரிவு நிலையின் உச்சங்களாக திகழ்ந்தனர்.
மோடியின் உயர்வு மீள் கட்டமைக்கப்பட்டதில், புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. இதன் வாயிலாக அவர், இந்திய அரசியலின் மூன்று இழைகளின் ஆழமான அடுக்குகளில் பொதிந்துள்ளார். மாநில உருவாகத்தின் முட்டுக்கட்டையான செயல்முறை, தற்போதைய கட்டமைப்புக்குள் மத்திய கால வரலாற்றை எங்கே வைப்பது என்ற ஒரு ஆழமான ஒட்டு மொத்த அச்சம் ஆகியன இருந்தபோதிலும், சமையல் எரிவாயு, ஜன் தன் வங்கி கணக்குகள், கழிவறைகள், கட்டமைப்பு போன்ற மத்திய அரசின் நல திட்டங்கள் அதே வழியில் தொடர்கின்றன.
2014 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்கள், சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகளின் பகுப்பாய்வுகள், மூன்று இழைகளின் கலவையை பின்பற்றி பாஜக எவ்வளவு நேர்த்தியாக தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. மிகவும் கண்கவர் காட்சியாக, மோடியை மையப்படுத்திய பரப்புரை பாதிக்கப்பட்டதை மேற்கு வங்கத்தில் பார்க்க முடிந்தது. அங்கே, அரசியல் கலாசாரத்துக்குள், ஒன்றிணைந்த முறையிலான இஸ்லாமியத்தை, அந்த பிராந்தியம் கொண்டிருந்தது. நலத்திட்டங்களின் பலன் என்பது ம ம்தா பானர்ஜியின் வலுவான பிடியில் இருந்தது. பிரதமரின் பிம்பம் எனும் கண்ணாடியில் அவருக்கு இணையானவராக உள்ளூர் தலைமையாக மம்தா திகழ்ந்தார்.
இன்றைக்கு ஒரே ஒரு விஷயத்திலாவது மோடிக்கு அப்பாற்பட்டு கவனம் செலுத்துவது, குறைவான கவனத்தைப் பெற்றுள்ள இந்திய அரசியலின் கட்டமைப்பு அளவுகோல்களில் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்ப்பதற்கு உதவியாக இருக்கும். அவ்வாறு செய்யாதது கடுமையான,, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.
அதே விஷயங்கள் தொடரும்நிலையில், ஒரு மோடியின் வெற்றியானது, மதிப்பு மிக்க வேளாண்மையின் தொடர்ச்சியே பசு என்ற அதன் முறையான பங்கினை சொல்லும் எந்த ஒரு ஆராய்ச்சியையும் தவிர்க்கும் வகையில் பசுவை வணங்குவது போன்ற செயல் தொடர்வதற்கான அடையாளங்களாகும். ஒரு மோடியின் தோல்வி,. பிராந்திய ஒருங்கிணைப்பின் தடைப்பட்ட செயல்முறைகளைத் தவிர்க்கவும்,வேளாண்மையின் முக்கிய பிரிவுகளில் சீர்த்திருத்தம் சர்வதேச சந்தைப் பொருளாதாரத்துடன் அல்லது அதை விடவும் ஆழமாக இணைத்தல், குடியுரிமை மற்றும் தேசிய அடையாளத்தின் முரண்பாடான பிரச்சினைகள். என ஒரு பிரச்னையை புறக்கணிப்பதற்கான போக்கை வலுப்படுத்துகிறது. சுருக்கமாக, மோடி வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டாலும் ஒரே ஒரு விஷயத்தைக் கொண்ட தேர்தல் என்பதை இந்தியா இழந்து விட்டது.
மோடியை மையமாகக் கொண்ட தேர்தல் சொற்பொழிவு, இடைநிலைச் சமூகங்களின் அரசியலின் மிகப்பெரிய புதிரைச் சுற்றி வருகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. புரட்சியானது தேர்தல் ஜனநாயகத்துக்கு மாற்றக முடியுமா? எனினும், தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். ஒரு அமைப்புக்குள்தான் அரசியலை செயல்படுத்த முடியும். ஆனால் அவர்கள் அரசியல் அமைப்பை கையாள்வதில் நல்லவர்கள் அல்ல.
பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கட்டமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கட்டாயமாக்குவதை தேர்தல்கள் உருவாக்குகின்றன. ஆனால் வாக்காளர்களின் முக்கியப் பிரிவினருக்கு அவை ஏற்படுத்தும் சிரமங்கள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கின்றன.நடுத்தர ஜனநாயகம் என்ற பொறியில் சிக்குகிறது. பதவிக்கான வெகுமதிகளில் கவனம் செலுத்தும், தேர்தல்களை “பராமரித்தல்” என்ற சுழற்சியை இந்தியா கடந்து செல்ல வாய்ப்புள்ளது. அடிப்படை கட்டமைப்பு மாற்றங்களை உறுதிப்படுத்தும் மாற்றத்துக்கான சீர்திருத்தங்களுக்கான தேர்தலுக்கு மாற வேண்டும். அரசியலின் பெரும் கொள்கையை மீண்டும் கொண்டு வருவதால், ஜனநாயக “பின்வாங்குதல்” பற்றிய பீதிக்கு பதிலாக.அடுத்த தேர்தல் சுழற்சி தொடங்கும் போது ஒரு கடினமான பயணத்திற்கு வாக்காளர்களை தயார் செய்ய முடியும்.
இந்த பத்தி முதலில், கடந்த 14ம் தேதி அச்சு இதழில் ‘Perils of a single-issue election’.என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் மித்ரா ஹைடெல்பெர்க் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.
தமிழில்; ஆகேறன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil