சென்னை பெருவெள்ளம்: தவறான நீர்நிலை மேலாண்மையே இன்னல்களுக்கு காரணம்

ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள் போன்ற விலைமதிப்பற்ற இயற்கை சொத்துக்களைப் பற்றி அலட்சியமாக இருக்கும் பெரும்பாலான இந்திய நகரங்களின் கதை இதுதான்.

Chennai warning, chennai rains, chennai flood, chennai distress

Chennai distress during rains: வடகிழக்கு பருவமழை, அதீத வெள்ளத்தினால் சென்னையின் இயல்பு நிலை கிட்டத்தட்ட முடக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிகங்கள் நடைபெறும் பகுதிகளில் கனமழைக்கு பிறகு வெள்ளம் சூழ்ந்த நிலையில் இக்காலத்தில் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இந்த மழைக்கு காரணமாக அமைந்த, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டாலும் கூட, 2015ம் ஆண்டு ஏற்பட்ட சீரிழவை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தை நகரம் கொண்டுள்ளது. 400 மக்களை பலி கொண்ட 2015ம் ஆண்டின் வெள்ளம் ஒரு நூற்றாண்டில் மிகவும் ஈரப்பதமான நவம்பர் மாதத்தில் பொழிந்த மழையால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக மழைப்பொழிவு கணிக்கப்பட்டதால், 2015ம் ஆண்டைப் போன்றே இந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் தீவிர வானிலையே காரணம் காட்டப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சியாளர்கள், வருங்காலத்தில் இது போன்ற வெள்ளங்கள் அதிக அளவில் ஏற்படலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர். புயல், வெள்ளம், கடல் உள்வாங்கும் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராய் இருப்பதே தீர்வு. சென்னை போன்ற மாநகரங்கள் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையையும் சந்தித்து வருகின்றன. 2015ம் ஆண்டில் ஏற்பட்ட மழைக்கு பிறகு, மோசமான நீர்த்தேக்க மேலாண்மை காரணமாக ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்ததால்,வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் வடிகால்களை அமைக்கவும், நகரின் இரண்டு ஆறுகளான அடையாறு மற்றும் கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நிர்வாகம் விரிவான பணிகளை மேற்கொண்டது. ஆனால் இன்னும் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து இன்னல்களுக்கும் மோசமான நீர்நிலை மேலாண்மை இருப்பதால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

Chennai Rains Live Updates: முழுக்கொள்ளளவை எட்டிய வைகை; தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சி நகரில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் ஈரசதுப்புநிலங்களின் பரப்ப சுறுக்கிவிட்டது. உதாரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஷாப்பிங் ஹப் ஏரி மீது கட்டப்பட்டது. அதே போன்று அடையாற்றின் Floodplains பகுதியில் நகரின் விமானநிலையம் கொண்டு வரப்பட்டது. அதே போன்று நகரின் தெற்கு பகுதியில் அளவுக்கு அதிகமாக இருந்த சதுப்புநிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நகரம் விரிவடைந்தது. பள்ளிக்கரணையில் குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிலையங்கள் மற்று பெரிய குப்பைக் கிடங்கும் கூட உருவாக்கப்பட்டது. வெகுஜன மக்களுக்கான விரைவு போக்குவரத்து திட்டங்கள் பக்கிங்காம் கால்வாயின் ஓட்டத்தை வெகுவாக தடை செய்துள்ளது. இந்த கால்வாய் வெள்ளம் மற்றும் கடல்நீர் உள்வாங்குதலை தடுக்கும் வகையில் கட்டி எழுப்பப்பட்டது. 300க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், கால்வாய்கல் கடந்த காலங்களில் காணாமல் போனது. நிர்வாகத்தின் தரவுகள் படி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்கள் நகரத்தின் அமைப்பையே மாற்றி அமைத்தது. ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள் போன்ற விலைமதிப்பற்ற இயற்கை சொத்துக்களைப் பற்றி அலட்சியமாக இருக்கும் பெரும்பாலான இந்திய நகரங்களின் கதை இதுதான்.

சென்னை மக்களின் கவனத்திற்கு; அவசர உதவிக்கு மாநகராட்சியை இப்படி அணுகவும்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வானிலை நிகழ்வுகளின் மாறுபாடுகளை சிறப்பாகத் தாங்கும் வகையில், சென்னை இழந்த நீர்நிலைகளில் ஒரு பகுதியையாவது மீட்டெடுக்க வேண்டும். மேலும் மிகப்பெரிய இரண்டு ஆறுகள் சுருங்கி பெரிய வடிகால்களாக உள்ள நிலையில் எஞ்சியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

This editorial first appeared in the print edition on November 10, 2021 under the title ‘Chennai warning’.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The root cause of chennai distress during rains lies in mismanagement of its water bodies

Next Story
நீதித்துறையே கலங்கி நின்றால்…?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com