சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடப்பதென்ன ?

கேரள மாநிலத்தில், கலங்கிய நீரில் மீன் பிடிக்கும் வேலையை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன...

பிரதாப் பானு மேத்தா

சபரிமலை விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதில் இருந்து பல்வேறு அரசியல் சார்ந்த பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. தீர்ப்பினை வரவேற்றவர்களும் கூட இதனால் ஏற்பட்டப் போகும் பிரச்சனைகள் குறித்து அதிக கவலையும் வருத்தமும் தெரிவித்தனர். கேரளாவில் இந்த தீர்ப்பு பெரும் பிரச்சனைகளையும், தீர்ப்பினை செயல்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கியுள்ளது. தீர்ப்பு மீது நமக்கு எந்த விதமான மறுப்புகள் இருந்தாலும், இது போன்ற கலவரங்கள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவான முடிவிற்கு வர வேண்டியது உள்ளது.

சபரிமலை விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு மூன்று முக்கிய பிரச்சனைகள் கேரளத்தில் உருவாகியது. முதலாவது, இப்பகுதியில் நடைபெற்ற பிரச்சனைகள் மற்றூம் கலவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இல்லை. மாறாக உச்ச நீதிமன்றத்திற்கானது. நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டினை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கான ஒத்திகை நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் நல்ல காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தினை எதிர்ப்பதும் நடந்து தான் இருக்கிறது.

ஆனால் தவறான காரணங்களைக் கொண்டு எதிர்ப்பது சில நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இந்த போராட்டங்கள் வெற்றி பெறுமானால், மதம் சார்ந்த நம்பிக்கைகளில் ஏதாவது பிரச்சனை வரும் பட்சத்தில் இப்படி போராடி வென்றுவிடலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் துளிர்க்கத் துவங்கிவிடும். இந்த போராட்டங்கள் வெற்றி பெற்றால் மதம் சார்ந்த அரசியல் அமைப்புகள் தீவிரமடைய ஆரம்பித்துவிடும்.

அந்நிலை வந்தால், அந்த பாதையில் பயணிப்பது மிகவும் கடிமனாகிவிடும். ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிராக போராட்டம் செய்யும் போது மற்ற கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருந்தது என்பதையும் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. கட்சி சார்பில் அரங்கேறும் வன்முறைகள் தவறே இல்லை என்று தான் இருக்கிறது. இதே எண்ணம் தான் பெண்களை, அவர்களின் உரிமைக்களுக்கு வெற்றி பெற்று தந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை பின்பற்றுவதை தடுக்கும் வகையில் பயன்படுத்டப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள், இருக்கின்ற பிரச்சனைகளை சரி செய்ய முயலாமல் பிரச்சனைகளை வளர்ப்பதற்கு அதிக அளவில் முயற்சி செய்து வருகிறது. To read this article in English

இரண்டாவது பிரச்சனை : சமூக மாற்றம்

சமூக மறுமலர்ச்சியில் நீதிமன்றங்களின் பங்கு என்ன? மிக எளிதாக இதன் பங்கு இப்படி தான் என்ற முடிவினை நம்மால் எட்டிவிட இயலாது. அதே போல் சமூக மறுமலர்ச்சியை சமூகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று நீதிமன்றங்கள் ஒரு முடிவினை எடுப்பதில்லை. அரசியல் சாசனங்களிற்கு எதிராக இருக்கும் முக்கியமான விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்த மாற்றங்கள் எவ்வளவு தூரம் சமூகத்தில் பெரிய அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இப்படியான முடிவுகளை எடுத்துவிடுகிறது நீதிமன்றங்கள். நீதிமன்றங்கள் இது போன்ற பிரச்சனைகள் மத்தியில் சமூக மாற்றங்களை கொண்டு வருவதிற்குள் திண்டாடிவிடுகிறது. மற்றொரு பக்கத்தில் நீதிமன்றங்கள் அடிக்கடி மதம் சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு தீர்ப்பினை வழங்கி வருவதால் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இருபாலினத்தவருக்கும் ஏற்ற வகையில் தீர்ப்பினை வழங்கும் போது மிகுந்த கவனத்துடனே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சபரிமலை விவகாரத்தில் இந்த தீர்ப்பினை எதிர்த்து பெண்களே போராட்டங்கள் நடந்துக்கின்றார்கள்.  இந்திய கட்சிகள் அனைத்தும் பெரும்பாலாக அடிப்படைவாதத்தினை மையப்படுத்தியே இருக்கிறது.

பாஜக ஒரு விதம் என்றால், காங்கிரஸ் மற்றொரு விதம். ஆனால் இரண்டு கட்சிகளுமே பழமைவாதிய அமைப்புகளுக்கு சாதாகமாவே செயல்பட்டு வருகிறார்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் கோவில்கள், கோவில் சார்ந்த சொத்துகள் மீது பெரிய அரசியலே நிகழ்த்தப்பட்டது. பெரும்வாரியான கோவில்களை மாநில அரசுகள் எடுத்துக் கொண்டன. தேவசம் போர்ட்கள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிலும் எந்த மறுமலர்ச்சியும் இல்லாமல் போனது. மேலும் கோவிலுக்கு உரிமை கொண்டாடுபவர்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற சூழல் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாய் கட்சிகள் செயல்படும் போது சமூக மாற்றம் என்பது வெறும் கானல் நீர் காட்சி போல் ஆகிவிடுகிறது.

மூன்றாவது பிரச்சனை

மூன்றாவது பிரச்சனை சரி மற்றும் தவறுகளை உணர்ந்து செயல்படும் மனநிலை. இந்த தீர்ப்பினை இந்துக்களுக்கு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதனால் பாஜகவின் ”இந்து மதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது” என்ற பதத்தினை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடுகிறது.

மாநில அரசிற்கு வேறெந்த வழியும் கிடையாது. கேரள முதல்வர் முடிந்த வரையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்றவே இயலும். மதம் சார்ந்த அரசியல் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்ப்பது, தவறான நம்பிக்கைகளை வைத்து சமூக மாற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குடியரசு நாட்டிற்கு உகந்ததல்ல.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் பிரதாப் பானு மேத்தா. அசோகா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர். கருத்துகள் யாவும் அவருடைய சொந்த கருத்துகளே…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close