அதிர்ஷ்டவசமாக, டிசம்பர் 9 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சேயில் இந்திய இராணுவத்திற்கும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் (PLA) இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை, இருப்பினும் சில மணிநேரம் நடைபெற்ற போரில் சில வீரர்கள் மோசமாக காயமடைந்தனர், இரு தரப்பும் கட்டைகள் மற்றும் தடிகள் கொண்டு சண்டையிட்டனர். இந்திய வீரர்கள் அத்துமீறலைத் துணிச்சலுடன் முறியடிக்கப் போராடினர் மற்றும் சீன வீரர்களை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் தள்ளுவதில் (திருப்பி அனுப்புவதில்) வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு அறிக்கையை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு தரப்பினரும் விலகியுள்ளனர், மேலும் அப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பு தளபதிகள் கொடிக் கூட்டத்தை நடத்தினர், என்று கூறினார். இந்த சம்பவத்தை இந்தியா தூதரக மட்டத்திலும் எடுத்துச் சென்றுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். மேலோட்டமாகப் பார்த்தால், இந்தச் சம்பவம், கிழக்குப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகத் தீவிரமான நிலைப்பாடு மற்றும் ஜூன் 2020ல் நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு இரு படைகளுக்கும் இடையேயான முதல் வன்முறை "சம்பவமாகும்", அதேநேரம் மோதல் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, இரு தரப்பாலும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக நூற்றுக்கணக்கான சீன துருப்புக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், இந்த சம்பவம் நடந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல. யாங்சேயில் உள்ள "நிலைமையை மாற்றுவது", அதாவது இந்தியாவிலிருந்து அந்தப் பகுதியைப் பறிப்பதே அவர்களின் நோக்கம் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா இனி ஆர்வம் காட்டவில்லை என்ற இந்தியாவின் பார்வைக்கு இது பரந்த அளவில் ஒத்துப்போகிறது, மற்றும் லடாக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தற்போது தவாங்கில் முயற்சித்த யுக்திகள் மூலம் சர்ச்சைக்குரிய எல்லையில் அதன் பிராந்திய உரிமைகோரல்களை எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் இடத்திலும் தொடர சீனா உறுதிபூண்டுள்ளது. LAC இன் கிழக்குப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் என்று இந்திய இராணுவம் நீண்ட காலமாக எதிர்பார்த்தது, அந்த அளவிற்கு, பிராந்தியத்தில் இராணுவத் தயார்நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த சம்பவம் திறம்பட சாதித்தது என்னவென்றால், இந்தியாவின் பார்வையில் லடாக்கில் உள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நேரத்தில் LAC இன் மேலும் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 16 சுற்றுப் பேச்சுக்களுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் ஒரு மோதல் நடந்துள்ளது, ஆனால் அது ஏப்ரல் 2020 இல் நிலவிய தற்போதைய நிலையை மீட்டெடுக்கவில்லை. சீனா, அதன் பங்கிற்கு, லடாக், டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் அதன் அத்துமீறல் உட்பட எஞ்சியிருக்கும் பிரச்சனைகள் குறித்து மேலும் பேச்சு வார்த்தைகளை நடத்தத் தயங்குகிறது.
லடாக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து கடந்த 32 மாதங்களில் சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமாக இருந்து வருகிறது, மேலும் சீனாவின் கணக்கீடு இந்தியாவிற்கும் பிராந்தியத்திற்கும் கடுமையான மாற்றத்திற்கு உட்படாத வரை அது மேம்பட வாய்ப்பில்லை. இந்தியாவின் G20 தலைமையானது சீனாவுடன் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்புகளை கொண்டு வந்தாலும், முதலில் தேவைப்படுவது ஒவ்வொரு நெருக்கடி வெளிப்படும்போதும் அதற்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் ஒரு தெளிவான பார்வை மற்றும் ஒரு பெரிய உத்தி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil