பொருட்களின் விலை அதிர்வலையின் பெரும் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால், அது வளர்ச்சியை பின்னுக்கு இழுத்து, பணவீக்கத்தை உயர்த்தும். நிதி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை என இரண்டையும் விரிவுபடுத்தும். சிறுமணியாக இருப்பதன் தரம் மேலும் தெளிவாக இருப்பதில்லை. நிறுவனங்கள், நுகர்வோர் மீது பெட்ரோலிய பொருட்களின் விலையின் அதிக நுணுக்கமான தாக்கமானது, வளர்ச்சி போக்குகளின் முன்னணி இயக்கியாக இருக்கலாம்.
பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையின் அதிர்வலையால் அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படாது. தொற்றுநோய் தாக்கத்தின்போது, சிறிய முறைசாரா நிறுவனங்களை விட ஒப்பீட்டளவில் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டன. பெட்ரோலிய பொருட்கள் விலையின் அதிர்வலை இந்த வேறுபாட்டை தீவிரப்படுத்துகிறது என்பதை ஆரம்ப கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
தொற்றுநோய்களின் தாக்கத்தின்போது,ரிசர்வ் வங்கியின் சுமார் 2,700 நிறுவனங்களின் தரவுத்தளத்தைப் பற்றிய எங்கள் ஆய்வின் வாயிலாக, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களிடமிருந்து சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன என்பது தெரியவருகிறது. சிறு நிறுவனங்களின் லாபம் உயராத நிலையில் பெரிய நிறுவனங்களின் லாபமும் உயர்ந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு செலவுகளைக் குறைக்கும் திறன், குறைந்த வட்டி விகித சூழல் மற்றும் மிதமான மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் போன்ற அதிக நன்மையளிக்கும் பல காரணிகளின் விளைவாக இது இருக்கலாம் –
சிறிய நிறுவனங்களின் செயல்திறன் குறைவானது இரண்டு தனித்தனி நிலைகளில் வருகிறது – ஒன்று, ஊரடங்கு காலங்கள் (2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்), மற்றும் இரண்டாவதாக பொருட்களின் விலையின் அதிர்வலை காலம் (2021 ஆம் ஆண்டின் மையப்பகுதியில் இருந்து பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன). சிறிய நிறுவனங்கள், குறிப்பாக முறைசாரா துறையில், நீண்ட கால கொந்தளிப்புகளைத் தாங்கும் வகையில் அவை சிறிய பண இடையகங்களைக் கொண்டுள்ளன. ஊடரங்கின்போது பெரிய நிறுவனங்களை விட பல வாரங்கள் அவைகளைப் அதிகம் பாதித்திருக்கலாம். அவைகள் மீண்டு வரும்போது, பொருட்களின் விலையின் அதிர்வலை தாக்கியது. அவைகளை மீண்டும் செயல்திறனற்ற நிலைக்கு தள்ளியது.
பொருட்களின் விலையின் அதிர்வலை பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களை இரண்டு காரணங்களுக்காக, பாதிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒன்று, இந்தியா அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாறியுள்ளது, மேலும் இந்த போக்கு சிறிய நிறுவனங்களை விட அதிக செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்த பெரிய நிறுவனங்களால் வழிநடத்தப்பட்டது. இரண்டு, பெரிய நிறுவனங்கள், அவற்றின் முழுமையான அளவு மூலம், மூலப்பொருட்களை வாங்கும் போது அதிக பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருக்கலாம். மேலும் உள்ளீடு செலவு அதிகரிப்பை பெரிய நிறுவனங்கள் நுகர்வோர் தலையில் கட்டமுடியும்.
2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் சுமை சிறிய நிறுவனங்களுக்கு அதிகமாக உள்ளது என்பது பெருநிறுவனங்களின் முடிவுகளிலிருந்து தெளிவாகிறது. கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து வருவதால் பலர் கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. எனவே, உயர் பணவீக்கம் என்பது சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களை அதிகம் பாதிக்கிறது என்று சொல்வதுதான் உகந்ததாக இருக்கும்.
பெரிய நிறுவனங்கள் மட்டும் சிறப்பாகச் செயல்படவில்லை, அவற்றின் ஊழியர்களின் நிலையும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் பணியாளர்களின் செலவுகள் தொற்றுநோய்க்கு முந்தைய அளவுகளில் மிகைப்படுத்தலாக அர்த்தமுள்ள வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. மற்றொருபுறம், சிறிய நிறுவனங்களின் ஊழியர்களின் செலவுகள் தொற்றுநோய்க்கு முந்தைய மட்டங்களில் தேக்கமடைந்துள்ளன, இது சிறுநிறுவனங்களின் ஊழியர்களின் உண்மையான வாங்கும் சக்தியில் ஒரு வீழ்ச்சி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் நுகர்வு பொருளாதார (ICE) ஆய்வில் 2016 மற்றும் 2021 க்கு இடையில் இந்தியாவில் ஏழ்மை நிலையில் உள்ள 20 சதவிகிதத்தினர் தங்கள் வருமானத்தில் 53 சதவிகிதம் அளவுக்கு சரிவை சந்தித்தனர் என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் செல்வந்தர்களில் 20 சதவிகிதத்தினர் 39 சதவிகிதம் உயர்வை சந்தித்துள்ளனர்.
அப்படியானால், எத்தனை சதவிகித இந்தியர்கள் இரட்டை அதிர்வலையின் சுமைகளைத் தாங்கியுள்ளனர்?
தொழிலாளர் சக்தியில் இருபது சதவீதம் பேர் முறை சார் துறைகளில் வேலை செய்கிறார்கள். இத்தகையவர்கள் மேம்பட்ட பணி சூழல், அதனால் கிடைக்கும் நல்ல ஊதியங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். பெருநிறுவனங்களின் முறை சார் துறை நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் மிதமிஞ்சிய பங்குச் சந்தைகளின் செல்வச் செழிப்பு விளைவு ஆகிய இரண்டு காரணிகளும் இதற்கான பங்ளிப்பைக் கொண்டுள்ளன. Naukri.com போன்ற வேலை வாய்ப்பு இணையதளங்களில், நிறுவனங்களின் காலியிடங்களுக்கான அறிவிப்பு பட்டியல் என்பது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விடவும் இப்போது அதிகரித்து விட்டன.
விவசாயம், விவசாயம் அல்லாத தொழிலாளர்கள் என சம அளவுகளைக் கொண்டு 80 சதவீத தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணியாற்றுகின்றனர். விவசாயம் அல்லாத தொழிலாளர்கள் பொதுவாக சிறிய மற்றும் முறைசாரா நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழிலாளர்களாக உள்ளனர்.
தொற்றுநோயின் முதல் பாதியில் விவசாயத் தொழிலாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், நல்ல பருவமழை காலம் நிலவியது, ஊரடங்கில் இருந்து விவசாயப்பணிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, கிராமப்புற நலன் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு, 2021 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டப்பணிகளில் மந்தநிலை, நிலையற்ற பருவ மழை, பலவீனமான ஊதியம் மற்றும் அதிக கிராமப்புற பணவீக்கம் இது போன்ற பல்வேறு காரணிகளால் மீண்டும் இந்தத் துறையில் ஊதியங்கள் குறையத் தொடங்கின,
தொற்றுநோய் தாக்கத்தின் முதல் பாதியில் விவசாயம் அல்லாத துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் அவர்களின் வளம் படிப்படியாக மேம்படத் தொடங்கியது. பொருட்கள் விலையின் அதிர்வலை யுடன், இந்த புதிய முன்னேற்றம் தலைகீழாக மாறும் அபாயம் உள்ளது. இந்தியாவின் கிராமப்புற , நகர்ப்புறங்களில் சமமான அளவில் வாழும் விவசாயம் அல்லாத துறைகளின் தொழிலாளர்கள் இந்த கட்டத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கலாம். இவை அனைத்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் (GDP) தாக்கங்களை ஏற்படுத்தும்.
இந்தியாவின் முறைசார் துறைகளை கண்காணிக்க உதவும் பல புள்ளிவிவரங்களின் தரவுகள் எங்களிடம் உள்ளன. ஆனால் முறைசாரா துறைகளுக்கான தற்போதைய தரவு எங்களிடம் இல்லை.
குறுகிய காலத்தில், முறைசார் துறையின் போக்குகள் முறைசாரா துறைக்கு ஒரு நல்ல மாற்று என புள்ளியியல் அலுவலகம் கருதுகிறது. ஆனால், முறைசாரா துறையானது குறைவான செயல்திறனை கொண்டுள்ள காலங்களில், முறை சார் துறையில் இந்த அனுமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிகைப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இதற்கிடையில், முறைசாரா துறையில் பலவீனம் அதிகரித்தால், இறுதியில் தேவை (முறையான துறையின் வாய்ப்புகளைக் கூட பாதிக்கிறது) மற்றும் வளர்ச்சியில் குறைவை வெளிப்படுத்துகிறது.
சரியான ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வலியை மட்டுப்படுத்தி முறைசாரா துறையால் பொறுத்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதில் உள்ள நல்ல செய்தியாகும்.
இரண்டு கொள்கை நோக்கங்கள் (வளர்ச்சியைப் பாதுகாத்தல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்) மற்றும் இரண்டு கருவிகள் (நிதிக் கொள்கை மற்றும் பணவியல் கொள்கை) இதில் உள்ளன. பணவீக்கத்தில் கவனம் செலுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியால் நிலை நிறுத்தப்பட்ட பணவியல் கொள்கை, வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிதிக் கொள்கை என்ற ஒரு பொருத்தமான உத்தியின் வாயிலாக ஒரு உகந்த முடிவை அடைய முடியும்
நிதிக் கொள்கையில், சமூக நலச் செலவினங்களில் தாராளமாக இருப்பது மற்றும் பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பது, அதிக உர மானிய தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ஒழுங்கமைப்பது ஆகியவை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆம், நிதிப்பற்றாக்குறை சரியலாம். அதிர்ஷ்டவசமாக, டாலர்களை விற்பதன் மூலம் (அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறையால்) மற்றும் அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான இடத்தை உருவாக்குவதன் மூலம் ரிசர்வ் வங்கியால் இங்கு உதவ முடியும்.
பணவியல் கொள்கையில், பணவியல் கொள்கையை படிப்படியாக இறுக்குவதன் மூலம் அதிக உள்ளீட்டு விலைகளின் இரண்டாம் சுற்று தாக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி உதவ முடியும் – விகிதத்தின் இயக்கத்தை இயல்பாக்குதல் (ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை உயர்த்துவதன் மூலம்), நிலைப்பாட்டை இடமிருந்து நடுநிலைக்கு மாற்றி, படிப்படியாக ரெப்போ விகிதத்தை உயர்த்துதல். பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் இங்கு உதவலாம், அதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.
முடிவாக, இந்தியாவின் எதிர்கால வணிக நம்பிக்கைக் குறியீடுகள் மிதமிஞ்சியதாக இருக்கும், ஆனால் எதிர்கால நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடுகள் மந்தமாக இருக்கும் ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலையை நாம் கையில் வைத்திருக்கிறோம். இரண்டில் எது சரி? வணிக வாய்ப்புகள் குறையுமா அல்லது நுகர்வோர் நம்பிக்கை உயருமா? சரியான கொள்கை ஒருங்கிணைப்பானது கடினமான நேரங்களிலும் கூட, உகந்த விளைவை அடைய உதவும்.
இந்தக் கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் 7ம் தேதியன்று ‘Unequal burden of pain’என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் எச்எஸ்பிசி வங்கியின் தலைமை இந்திய பொருளாதார நிபுணராவார்,
தமிழில் ரமணி